மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு இணையாக மாறும் புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர்!

Written By:

அடுத்த தலைமுறை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி காரை தயாரிக்கும் பணிகள் துவங்கியிருக்கின்றன. இதிலென்ன விசேஷம், சற்று டிசைனை மாற்றி கூடுதல் அம்சங்களை சேர்த்து அறிமுகம் செய்து விடுவார்கள் என்று அலுத்துக் கொள்ளாதீர்கள்.

ஆம். வடிவமைப்பு, வசதிகள், இடவசதி என அனைத்திலும் முற்றிலும் வேறு புதிய ரக மாடலாக மாற்றப்படுகிறது புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர். அதாவது, மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியை மனதில் வைத்துக் கொண்டால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். என்ன ஆவல் பீறிடுகிறதா? அப்படியே, ஸ்லைடருக்கு வந்துவிடுங்கள்.

முற்றிலும் மாறுகிறது...

முற்றிலும் மாறுகிறது...

ரெனோ டஸ்ட்டரின் வடிவமைப்பு முற்றிலும் மாறுகிறது. தற்போது வெளியாகியிருக்கும் கம்ப்யூட்டரில் வரையப்பட்டிருக்கும் கற்பனை படங்களின்படி, மிக பிரம்மாண்டமான எஸ்யூவியாக மாறுவது உறுதியாக தெரிகிறது.

 நீளம் அதிகரிப்பு

நீளம் அதிகரிப்பு

தற்போதைய மாடலைவிட புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியின் நீளம் கிட்டத்தட்ட 700 மிமீ அதிகரிக்கப்பட இருக்கிறது. அதாவது, இரண்டு வரிசை இருக்கை அமைப்பிலிருந்து மூன்று வரிசை இருக்கை அமைப்புக்கு புதிய ரெனோ டஸ்ட்டர் மாறுகிறது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

புதிய ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவியில் 7 பேர் வசதியாக அமர்ந்து பயணிப்பதற்கான இடவசதியை பெற்றிருக்கும். மேலும், சிறப்பான பூட்ரூம் இடவசதியையும் கொண்டிருக்கும் என நம்பலாம்.

எஞ்சின்

எஞ்சின்

7 சீட்டர் மாடலாக மாறுவதால், புதிய ரெனோ டஸ்ட்டரில் புதிய 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 130 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வழங்கும். அதேபோன்று, புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, ஃபோர்டு ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் போன்றே சக்திவாய்ந்த எஞ்சினாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் எதிர்பார்க்கலாம்.

 டிரைவ் சிஸ்டம்

டிரைவ் சிஸ்டம்

2 வீல் டிரைவ் சிஸ்டம் தவிர்த்து, 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடல்களிலும் புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். எனவே, வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையிலும் சிறந்த தேர்வாக அமையும்.

 குழப்பம்

குழப்பம்

இந்தியாவில் இந்த 7 சீட்டர் ரெனோ டஸ்ட்டர் வருமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. ஏனெனில், சமீபத்தில் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ரெனோ கேப்டூர் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் களமிறக்க ரெனோ திட்டமிட்டிருக்கிறது. இந்த எஸ்யூவியும் 7 சீட்டர் மாடல்தான். இருப்பினும், 7 சீட்டர் ரெனோ டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்படுவதற்கு ஓரிரு ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், வருவதற்கான சாத்தியக்கூறுகள் சிறிது இருப்பதையும் மறுக்க இயலாது.

 

Source: Auto Express

English summary
2017 Renault Duster Will Be Bolder & Bigger Than Ever Before.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark