2018 ஆடி ஏ7 செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியது - முழு விவரம்

By Ravichandran

ஆடி நிறுவனம் உருவாக்கி வரும் அடுத்த தலைமுறை 2018 ஆடி ஏ7 செடானின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனம் புதிய 2018 ஆடி ஏ7 செடானின் சோதனைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டது.

இதன் சோதனைகள் மேற்கொள்ளப்படும் போது எடுக்கபட்ட ஸ்பை படங்கள் தற்போது வெளியாகியது.

ஆடி ஏ7 செடான், முதன் முதலாக 2010-ஆம் ஆண்டு தலையெடுக்க துவங்கியது. அப்போது முதல், இது உலகின் மிகவும் அறியப்பட்ட மாடலாக விளங்கி வருகிறது.

அடுத்த தலைமுறை 2018 ஆடி ஏ7 செடான் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி ஏ7 செடான்;

ஆடி ஏ7 செடான்;

ஆடி ஏ7 செடான், முக்கியமாக மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்எஸ் மாடலுக்கு ஏத்த போட்டியாக 2010-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

வழக்கமாக, ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களான ஆடி, பிஎம்டபுள்யூ மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற மாடல்கள் தங்களின் தயாரிப்புகளுக்கு, 7-ஆண்டுகள் மட்டுமே தயாரிப்பு சுழற்சியை தக்கவைத்து கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இங்கொல்ஸ்டாட் (Ingolstadt) என்ற இடத்தை சேர்ந்த இடத்தில் இருந்து இயங்கும் ஆடி நிறுவனம் அவசரப்பட்டு எந்த மாற்றங்களையும் செய்வதாக தெரியவில்லை.

வருங்காலத்தை நோக்கி...

வருங்காலத்தை நோக்கி...

அடுத்த தலைமுறை 2018 ஆடி ஏ7 செடான் மற்றும் அடுத்த தலைமுறை ஆடி ஏ8, ஆடி நிறுவனத்தின் வருங்காலத்தை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

இந்த 2 மாடல்களும், எலக்ட்ரிக்ரிஃபிகேஷன் எனப்படும் மின்மயமாக்கல் மற்றும் தானியங்கி கார் தொழிநுட்பத்தில் மிக முக்கியமான பங்கு ஆற்ற உள்ளது.

தோற்றம்;

தோற்றம்;

Autoevolution இதழ் வெளியிட்ட தகவல்கள் படி, அடுத்த தலைமுறை 2018 ஆடி ஏ7 செடானின் முன் பம்பர் பெரிய ரேடார் சென்சார் போன்ற அமைப்பு கொண்டுள்ளது.

ஆனால், இதன் பின்பக்கத்தில், டெயில் பைப் போன்ற அமைப்பு எதுவும் இல்லை. இதன் படி பார்த்தால், இது ஒரு வகையில் எலக்ட்ரிக் காராக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

யூகம்;

யூகம்;

அடுத்த தலைமுறை 2018 ஆடி ஏ7 செடான், சில ஆண்டுகளுக்கு முன் காணப்பட்ட ஏ7 ஹெச்-ட்ரான் கான்செப்ட் (A7 h-tron concept) மாடலை போல் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் மாடலாகவும் இருக்க வாய்ப்புகள் உள்ளது.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை 2018 ஆடி ஏ7 செடான், 2018-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

நார்வே நாட்டு மன்னருக்காக உருவாக்கபட்ட ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட்

ஏகே-47 எந்திர துப்பாக்கிக்கும் பெப்பே சொல்லும் ஆடி கார் இந்தியாவில் அறிமுகம்!

885 கிமீ தூர பயணத்தை துவங்கிய ஆடியின் புதிய 'தானியங்கி' கார்!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

More from DriveSpark

Article Published On: Friday, August 12, 2016, 11:12 [IST]
English summary
Spy Pics of Next-Gen 2018 Audi A7 Sedan captured during its Testing was released recently. Audi's A7 first burst onto the scene in 2010. It was launched as Audi's rival to Mercedes-Benz CLS. 2018 Audi A7 is supposed to be hydrogen-powered unit, something like A7 h-tron concept few years back. To know more about 2018 Audi A7 Sedan, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+