2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியது

By Ravichandran

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் அடுத்த தலைமுறை 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது.

புதிய 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பை படங்கள்...

ஸ்பை படங்கள்...

அடுத்த தலைமுறை 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி, ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கும் மாடல் ஆகும்.

பலத்த உருமறைப்புடன் இதன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்படி இருந்த நிலையிலும், சோதனைகளின் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் மூலம் புதிய 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியின் விவரங்கள் காணப்படுகிறது.

அறிமுகம்;

அறிமுகம்;

அடுத்த தலைமுறை 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி, 2017-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

டிசைன்;

டிசைன்;

டிசைன் படி, 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை. இதன் ஹெட்லேம்ப்கள் கூட அப்படியே தான் உள்ளது.

இதன் டயர் மற்றும் வீல்களில் மட்டும் சில வளைவுகள் உள்ளன. மற்ற படி, 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி, வழக்கம் போல் பாக்ஸி டிசைன் கொண்டுள்ளது.

பரிமாணங்கள்;

பரிமாணங்கள்;

2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி, தற்போதைய மாடலை காட்டிலும், தாழ்ந்து காணப்படுகிறது.

மேலும், இது தற்போதைய மாடலை காட்டிலும் 100 மில்லிமீட்டர், கூடுதல் அகலமாக உள்ளது.

எடை;

எடை;

2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியை உருவாக்க எடை குறைவான மெட்டீரியல்கள் பயன்படுத்தபட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால், இந்த 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி, தற்போதைய மாடலின் எடையான 2.6 டன் எடையை காட்டிலும், 200 கிலோகிராம் குறைவான எடை கொண்டதாக இருக்கும்.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவிக்கு, 6 புதிய பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ்;

கியர்பாக்ஸ்;

2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியின் இஞ்ஜின்கள் 9-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

பிற இஞ்ஜின் தேர்வுகள்;

ஜி63 வேரியன்ட்டில், தற்போது உபயோகிக்கப்படும் 5.5-லிட்டர் டர்போசார்ஜ்ட் வி8 இஞ்ஜினுக்கு பதிலாக, 4.0-லிட்டர் டர்போசார்ஜ்ட் வி8 இஞ்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜி65 வேரியன்ட்டில், அதே வி12 தொடரப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஆஃப்-ரோடிங் அம்சங்கள்;

ஆஃப்-ரோடிங் அம்சங்கள்;

வழக்கமாக, மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி கொண்ட வாடிக்கையாளர்கள் ஆஃப்-ரோடிங் பயணங்கள் மேற்கொள்ளும் பழக்கம் இல்லாமல் இருக்கலாம்.

அப்படி இருக்கும் போதும், இந்த 2018 மெர்சிடிஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவியில், 4-வீல் டிரைவ், லாக்கிங் டிஃப்ஃபரென்ஷியல்ஸ் மற்றும் பிலாக் ஆஃப்-ரோட் டயர்கள் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அடுத்த தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் ஸ்பை படங்கள் வெளியாகியது

மெர்சிடிஸ் தொடர்புடைய செய்திகள்

ஸ்பை படங்கள் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

Spy Pictures Source - Paultan.org

More from DriveSpark

Article Published On: Saturday, July 9, 2016, 14:00 [IST]
English summary
Next-generation Mercedes-Benz G-Class SUV was spotted testing under some rather heavy camouflage. Spy Pics of 2018 Mercedes-Benz G-Class SUV taken during its testing was released. 2018 Mercedes-Benz G-Class might be around 200 kilograms off its current 2.6-ton kerb weight. 2018 Mercedes-Benz G-Class SUV is expected to make its debut in 2017. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+