டிரைவரில்லாமல் இயங்கும் புதிய மினி பஸ் அறிமுகம்!

Written By:

டிரைவரில்லாமல் இயங்கும் புதிய மினி பஸ் மாடலை அமெரிக்காவை சேர்ந்த லோக்கல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பேட்டரியில் இயங்கும் இந்த புதிய பஸ் நகர்ப்புறத்துக்கான பயணிகள் போக்குவரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதும் என லோக்கல் மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பெயர்

பெயர்

டிரைவரில்லாமல் இயங்கும் இந்த புதிய மினி பஸ்சிற்கு olli என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகர் அருகில் இந்த பஸ் தயாரிப்புக்கான ஆலை திறக்கப்பட்டிருக்கிறது.

3டி பஸ்

3டி பஸ்

இந்த பஸ் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 10 மணி நேரத்தில் ஒரு ஒல்லி பஸ்சின் பாகங்களை அச்சில் வார்த்து எடுத்து, ஒரு மணிநேரத்தில் அசெம்பிள் செய்துவிட முடியுமாம். மேலும், இந்த பஸ்சின் பாதியளவு பாகங்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த முடியும்.

நவீன சாஃப்ட்வேர்

நவீன சாஃப்ட்வேர்

இதிலுள்ள கம்ப்யூட்டர் பயணிகளிடம் உரையாடி, செல்லுமிடத்தை கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பஸ்சை செலுத்தும். இது உலகிலேயே மிகவும் நவீன தொழில்நுட்பமாக இருக்கும்.

பயணிகள் எண்ணிக்கை

பயணிகள் எண்ணிக்கை

இந்த பஸ்சில் 12 பேர் பயணிப்பதற்கான இடவசதி உள்ளது. கார் ஷேரிங் திட்டம் போலவே, ஒரே வழித்தடத்தில் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து கொண்டு பயணிக்கவும் முடியுமாம்.

சென்சார்கள்

சென்சார்கள்

இந்த பஸ்சில் 30 சென்சார்கள், ரேடார்கள் மற்றும் உயர்வகை கம்ப்யூட்டர் உதவியுடன் இயங்குகிறது. மிகவும் பாதுகாப்பான, விபத்தில்லா பயணத்தை வழங்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சிறந்த மாற்று

சிறந்த மாற்று

மாணவர்கள், பணியாளர்களை வீட்டிலிருந்து அழைத்து சென்று வருவதற்கான சிறப்பான போக்குவரத்து சாதனமாக இது விளங்கும் என்றும் லோக்கல் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

 
English summary
America's first driverless public shuttle bus
Story first published: Friday, June 17, 2016, 15:45 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark