ஆட்டோமொபைல் இணையதளங்களை பதிவு செய்த ஆப்பிள்... ஆனா, குழப்பம் தீரலை!

By Saravana

தொழில்நுட்பம், தரத்தில் சிறந்த ஐபோன் மூலம் உலகளாவிய புகழ்பெற்று விளங்கும் அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பு செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்திலிருந்து 50 பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தியதாக வெளியானத் தகவல்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தநிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-கார் திட்டத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக புதிய செய்தி வெளியாகியுள்ளது.

ஆட்டோமொபைல் இணையதளங்களை பதிவு செய்த ஆப்பிள்... ஆனா, குழப்பம் தீரலைங்க!

கடந்த மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது பெயரில், ஆட்டோமொபைல் தொடர்புடைய புதிய இணையதளங்களை பதிவு செய்துள்ள தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.

அதாவது, apple.car, apple.cars மற்றும் apple.auto ஆகிய பெயர்களில் புதிய ஆட்டோமொபைல் தொடர்படைய இணையதளங்களை ஆப்பிள் கார் நிறுவனம் பதிவு செய்திருக்கிறது.

ஆனால், இது ஆப்பிள் காருக்காக துவங்கப்பட்ட இணையதளங்களா அல்லது ஆப்பிள் கார்ப்ளே போன்ற ஆட்டோமொபைல் தொடர்புடைய சாஃப்ட்வேர்களுக்காக அறிமுகம் செய்யப்பட இருக்கும இணையதளங்களா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை கேந்திரமாக விளங்கும் சிலிக்கான் வேலியில் உள்ள பல நிறுவனங்கள் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களை வடிவமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், ஆப்பிள் கார் திட்டமும் உறுதியாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வாய் திறந்து உண்மையை வெளிக்கொணரும் வரையில், இந்த குழப்பம் நீடித்துக் கொண்டேதான் இருக்கும்.

Most Read Articles
English summary
Apple Inc has registered domain names related to automobiles, adding to speculation about the company's plans to develop an automobile.
Story first published: Saturday, January 9, 2016, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X