நார்வே நாட்டு மன்னருக்காக உருவாக்கபட்ட ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட்

By Ravichandran

ஆடி நிறுவனம், 6 மீட்டருக்கும் கூடுதலான அளவு கொண்ட மிக நீண்ட ஆடம்பர உல்லாச காரை (லக்சுரி லிமோஸின்) அறிமுகம் செய்துள்ளனர்.

அசாதாரன அளவிலான இந்த ஆடி நிறுவனத்தின் புதிய படைப்பு குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட்...

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட்...

ஆடி நிறுவனம் வழக்கத்திற்கு மாறான, மிக நீண்ட, 6-டோர் (கதவு) வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்த புதிய படைப்பிற்கு ஆடி நிறுவனம், ஏ8 எல் எக்ஸ்டெண்டட் என பெயர் சூட்டியுள்ளது.

அளவுகள்;

அளவுகள்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார், வழக்கமான ஏ8 எல் காரோடு ஒப்பிடுகையில் 1.09 மீட்டர் கூடுதல் நீளம் கொண்டுள்ளது. ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரின் நீளம், 6.36 மீட்டர் என்ற அளவில் உள்ளது.

அதே நேரத்தில், வழக்கமான ஆடி ஏ8 எல் மாடல், 5.27 மீட்டர் நீளம் கொண்டுள்ளது.

வீல் பேஸ்;

வீல் பேஸ்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரின் வீல் பேஸ், 1.09 மீட்டர் விரிவாக்கம் செய்யபட்டுள்ளது.

தற்போது, ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரின் வீல் பேஸ் அளவு 4.22 மீட்டர் என்ற அளவில் உள்ளது.

கிளாஸ் பேனல்;

கிளாஸ் பேனல்;

இதன் அசாதாரன நீளம் கொண்ட ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரில் உள்ளே பயணிக்கும் பயணியர்களுக்கு, அஞ்சக் கூடிய உணர்வு இருக்க கூடாது என்பதற்காக, இந்த மாடலின் மேற்கூரையில் 2.40 மீட்டர் அளவிலான நீண்ட கிளாஸ் பேனல் வழங்கபட்டுள்ளது.

இதனால், இந்த ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரின் உள்ளே அதிக அளவிலான வெளிச்சம் கிடைக்கிறது.

6-ஸீட்டர்;

6-ஸீட்டர்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரில் மொத்தம் 6 ஸீட்கள் உள்ளன. இந்த 6 ஸீட்களும், முன் பக்க நோக்கியவாறு உள்ளது.

2-வது மற்றும் 3-வது வரிசைகளில் பீஃஜ் வால்கேனோ லெதர் கொண்டு செய்யபட்ட பவர் அட்ஜஸ்டிபிள் சீட்கள் பொருத்தபட்டுள்ளது.

பொழுதுபோக்கு;

பொழுதுபோக்கு;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரின் 3-வது வரிசையின் ஸீட்களில் உள்ள பயணியர்களுக்கு என பிரத்யேக பொழுதுபோக்கு டிஸ்பிளே உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், குளிர்சாதனப் பெட்டியும் வழங்கபட்டுள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காரில், சூப்பர்சார்ஜ்ட், 3.0 லிட்டர், வி6 இஞ்ஜின் உள்ளது.

இந்த இஞ்ஜின், 306 பிஹெச்பியையும், 440 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

செயல் திறன்;

செயல் திறன்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான தூரத்தை 7.1 நொடிகளில் எட்டிவிடும்.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார், உச்சபட்சமாக மணிக்கு 250 கிலோமீட்டர் என்ற வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது.

எடை;

எடை;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார், 2.41 டன் எடை கொண்டுள்ளது.

பிரேக்;

பிரேக்;

2.41 டன் எடை கொண்ட ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் காருக்கு, எஸ் 8 மாடலில் உள்ள பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தபட்டுள்ளது.

ஒரே கார்;

ஒரே கார்;

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார் மாடலில், ஒரே ஒரு கார் தான் தயாரிக்கபட்டுள்ளது.

நார்வே நாட்டை சேர்ந்த autofil.no வெளியிட்ட செய்தியின் படி, ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார் நார்வே நாட்டு மன்னர் ஹெரால்ட் 5 (Harald V) அவர்களுக்காக பிரத்யேகமாக தயாரிக்கபட்டுள்ளது.

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் கார், நார்வே நாட்டின் மன்னராக வெள்ளி விழா (Silver Jubilee) கண்டதை கொண்டாடும் விதமாக உருவாக்கபட்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

அரச குடும்பத்தினரின் கார்களும், அதில் மறைந்திருக்கும் சுவாரஸ்யங்களும்...!!!

ரோல்ஸ்ராய்ஸ் அந்தஸ்தை ஆட்டிப் பார்த்த இந்திய மன்னர்!

உலகத் தலைவர்களின் உன்னத கார்களின் சிறப்பு தொகுப்பு

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் - கூடுதல் படங்கள்

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் - கூடுதல் படங்கள்

ஆடி ஏ8 எல் எக்ஸ்டெண்டட் - கூடுதல் படங்கள்

Most Read Articles
English summary
Audi has created an one-off, longer, six-door variant of their A8 luxury limousine. This is named as Audi A8 L Extended. Audi A8 L Extended was commissioned for Norwegian king, Harald V, in order to celebrate King's Silver Jubilee as the ruler of Norway. Audi A8 L Extended is 6.36 metres long and it is a six seater. To know more about Audi A8 L Extended, check here...
Story first published: Wednesday, April 13, 2016, 13:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X