ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் லிமிடெட் எடிஷன் அறிமுகம்

Written By:

ஆடி நிறுவனம் தயாரித்து வழங்கும் ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் என்ற சொகுசு காரை அறிமுகம் செய்யபட்டுள்ளது.

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச்...

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச்...

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் லிமிடெட் எடிஷன் என்ற இதன் பெயரில் இருந்தே இது ஸ்பெஷலான கார் என தெரிகிறது.

இது ஏராளமான சொகுசு அம்சங்களை கொண்டுள்ளது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு கார், லிமெடெட் எடிஷன் மாடலாக அறிமுகம் செய்யபடுகிறது.

உலகம் முழுவதுமான ஆட்டோமொபைல் சந்தைகளுக்கு, இந்த லிமெடெட் எடிஷன் மாடலில் 24 கார்கள் மட்டுமே தயாரிக்கபட உள்ளது.

இஞ்ஜின்;

இஞ்ஜின்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு கார், வழக்கமான ஆர்8 வி10 ப்ளஸ் மாடலில் உள்ள அதே 5.2 லிட்டர், வி10 இஞ்ஜின் கொண்டுள்ளது.

இதன் இஞ்ஜின், 602 பிஹெச்பியையும், 560 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் உடையதாக உள்ளது.

திறன்;

திறன்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு கார், நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 3.2 நொடிகளில் எட்டும் வரையிலான திறன் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;

உச்சபட்ச வேகம்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு கார், உச்சபட்சமாக மணிக்கு 330 கிலோமீட்டர் வரை எட்டும் திறன் உடையதாகும்.

சிறப்பு அம்சங்கள்;

சிறப்பு அம்சங்கள்;

ஆடி ஆர்8 ஜிடி3 ரேஸ் காரில் காணப்படும் பல்வேறு அம்சங்களை ஆர்8 வி10 ப்ளஸ் சேர்த்து, ஆடி நிறுவனம் இந்த ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு காரை வழங்கியுள்ளது.

பல்வேறு அழகு சேர்க்கும் அம்சங்களான ஃப்ரண்ட் ஸ்பாய்ளர், விங் மிரர்கள், பானட் லிட், சைட் பிலேட்கள், ரியர் விங் மற்றும் டிஃப்யூஸர் உள்ளிட்ட ஏராளமான கார்பன் ஃபைபர் கொண்டு செய்யபட்டுள்ளது.

இவை அனைத்தும் கிலாஸ்ஸி பிளாக் நிறத்தில் செய்யபட்டுள்ளது.

பிரத்யேக லோகோ;

பிரத்யேக லோகோ;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு கார், ஸ்பெஷலான லிமிடெட் எடிஷன் என்பதை குறிக்கும் வகையில், இதன் கார்பன் சைட் பிலேட்களில் பிரத்யேகமான "ஆர்8 24" லோகோ பொருத்தபட்டுள்ளது.

வண்ணமயமான வேலைப்பாடுகள்;

வண்ணமயமான வேலைப்பாடுகள்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு காருக்கு கூடுதல் அழகு சேர்க்கும் வகையில், ஆடி நிறுவனம் இந்த லிமிடெட் எடிஷன் காருக்கு, 3 வண்ணங்களில் ஆன பெயிண்ட் வேலைப்பாடுகளை வழங்கியுள்ளனர்.

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு காரின் அதிகபடியான பகுதிகள் வைட் நிறத்தில் உள்ளது.

கார்பன் ஃபைபரில் ஆன பகுதிகள், கிலாஸ்ஸி பிளாக் நிறத்தில் செய்யபட்டுள்ளது.

காரின் அடிபாகத்தை சுற்றியும், சைட் பிலேட்கள் உள்ள பகுதியிலும் ரெட் ஸ்டிரைப்கள் வழங்கபட்டுள்ளது. இது வைட் மற்றும் பிளாக் நிறங்கள் கொண்ட அமைப்புக்கு ஏற்ற காண்ட்ராஸ்ட் அமைப்பினை வழங்குகிறது.

விலை;

விலை;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் செலக்‌ஷன் 24ஹெச் சொகுசு கார், சுமார் 229,000 யூரோக்கள் (€229,000) என்ற விலையில் (இந்திய மதிப்பில் 1.73 கோடி ரூபாய்) விற்கபடும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆடி ஆர்8 வி10 ப்ளஸ் சூப்பர்காரை, இந்தியாவில் அறிமுகம் செய்தார் விராட் கோஹ்லி

அதிவேகத்தில் பறந்து வந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆடி கார்!

ஆடியின் அதிவேகமாகன ஆர்8 எல்எம்எக்ஸ் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய விராட் கோலி!

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Audi has unveiled their Audi R8 V10 Plus Selection 24h Limited Edition Luxury Car. Audi has planned to make only 24 Cars in this Limited Edition model. It can sprint from 0-100km/h in just 3.2 seconds. This has a top speed of 330km/h. This is sold at sum of €229,000 (Rs. 1.73 Crores). To know more about Audi R8 V10 Plus Selection 24h, check here...
Story first published: Thursday, May 12, 2016, 16:35 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark