2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ செய்திகள்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் முக்கிய நிகழ்வுகளை எங்களது சமூக வலை தள பக்கங்களில் காணலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் அனைத்து மாடல்கள் பற்றிய விரிவானத் தகவல்கள், படங்களை விரைவில் கீழே உள்ள டிரைவ்ஸ்பார்க் தமிழ் சிறப்புப் பக்கத்தில் விரிவாகவும், பிரத்யேகமாகவும் வழங்க இருக்கிறோம். டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ- சிறப்புப் பக்கம்

2016ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கிரெட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்ட் வளாகத்தில் இன்று இனிதே துவங்குகிறது. வரும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்கள் மற்றும் பைக்குகள் பற்றிய விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

இன்றும் மற்றும் நாளையும் முதல் இரு நாட்கள் பத்திரிக்கையாளருக்கான நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு நாட்களில் புதிய கார் மற்றும் பைக் அறிமுக நிகழ்ச்சிகள் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. வரும் 5ந் தேதி முதல் 9ந் தேதி வரை வாகன கண்காட்சியை பார்வையிட பொது பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சர்வதேச அளவில் மிகப்பெரிய வாகன கண்காட்சிகளில் ஒன்றான டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை பார்வையிடுவதற்கு 7 லட்சம் பேர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 80 புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இந்த கண்காட்சியில் 65க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. பஜாஜ், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட சில முன்னணி நிறுவனங்கள் ஆட்டோ எக்ஸ்போவை தவிர்ப்பதாக அறிவித்துள்ளன. இந்த ஆட்டோ எக்ஸ்போவில் காண்பதற்கு உள்நாட்டு மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பத்திரிக்கையாளர்களும், பார்வையாளர்களும் டெல்லிக்கு வருகை தர இருப்பதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசாருடன் இணைந்து ஏற்பாட்டாளர்கள் செய்துள்ளனர்.

இந்த ஆட்டோ எக்ஸ்போவின் அறிமுக நிகழ்ச்சிகள் அனைத்தையும், டெல்லியில் முகாமிட்டிருக்கும் எமது சிறப்பு நிருபர் குழுவினர் மூலமாக நேரடியாக வாசகர்களுக்கு வழங்க இருப்பதை பெரு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்படும் புதிய கார், பைக்குகள் மற்றும் இதர வாகனங்கள் குறித்த தகவல்களையும், படங்களையும் வாசகர்களுக்கு வழங்க விரிவான ஏற்பாடுகளுடன் டிரைவ்ஸ்பார்க் தளம் தயாராக இருக்கிறது.

நாளையும், நாளை மறுதினமும், எமது சமூக வலைதள பக்கங்களில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வுகளை வாசகர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். விரிவானத் தகவல்கள் அடங்கிய செய்தித் தொகுப்பை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் செய்திகளில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் ஃபேஸ்புக் பக்கம்
டிரைவ்ஸ்பார்க் தமிழ் டுவிட்டர் பக்கம்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ- சிறப்புப் பக்கம்

More from DriveSpark

Article Published On: Tuesday, February 2, 2016, 19:29 [IST]
English summary
Auto Expo 2016 Kicks Off Tomorrow At Greater Noida.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+