கார் விலை உயர்ந்தது... வாடிக்கையாளர் தலையில் கூடுதல் சுமை!!

Written By:

புத்தாண்டில் கார் விலையை பெரும்பாலான கார் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. இதனால், புத்தாண்டில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது.

உற்பத்தி செலவீனம், ரூபாய் பரிமாற்று மதிப்பு ஆகியவற்றை வைத்து விலை உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளதாக கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்தநிலையில், எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு விலை உயர்வை அறிவித்துள்ளன என்பதை இந்த செய்தித் தொகுப்பில் பார்த்துக் கொள்ளலாம்.

01. ரெனோ

01. ரெனோ

சென்னையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் பிரான்ஸ் நாட்டின் ரெனோ கார் நிறுவனம், தனது அனைத்து கார்களின் விலையையும் அதிகபட்சமாக 3 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறது. இந்த விலையுயர்வு மூலமாக ரெனோ டஸ்ட்டர் விலை ரூ.20,000 உயர்ந்துள்ளது. இதுதவிர, ரெனோ க்விட் காரின் விலையும் அதிகரித்துள்ளது.

02. ஃபோர்டு

02. ஃபோர்டு

சென்னையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் தனது கார்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறது. சென்னை மழை வெள்ளத்தால் இழப்பை சந்தித்த ஃபோர்டு நிறுவனத்துக்கு இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது.

 03. பிஎம்டபிள்யூ

03. பிஎம்டபிள்யூ

சென்னையில் ஆலை அமைத்து கார் அசெம்பிள் செய்து வரும் ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இதேபோன்று, பிஎம்டபிள்யூவின் அங்கமாக செயல்படும் மினி பிராண்டு கார்களின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

04. ஸ்கோடா ஆட்டோ

04. ஸ்கோடா ஆட்டோ

ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனமும் தனது கார்களின் விலையை மாடலுக்கு தகுந்தாற்போல் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறது.

05. நிசான்

05. நிசான்

சென்னை ஒரகடத்தில் ரெனோ கார் நிறுவனத்தின் கூட்டணியில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் நிசான் நிறுவனமும் உள்நாட்டில் தனது கார்களின் விலையை 3 சதவீதம் அதிகரித்துள்ளது. ஜப்பானிய நிறுவனமான நிசான் இந்தியாவின் கார் ஏற்றுமதியில் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.

06. மாருதி சுஸுகி

06. மாருதி சுஸுகி

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி, தனது கார்களின் விலையை ரூ.20,000 வரை அதிகரித்துள்ளது. இது மாருதி காரை வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.

07. ஹோண்டா கார்ஸ்

07. ஹோண்டா கார்ஸ்

ஜப்பானிய நிறுவனமான ஹோண்டா கார் நிறுவனமும் தனது கார்களின் விலையை ரூ.16,000 வரை அதிகரித்துளளது. உற்பத்தி செலவீனம் உயர்ந்திருப்பதால், விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

08. ஹூண்டாய் மோட்டார்ஸ்

08. ஹூண்டாய் மோட்டார்ஸ்

சென்னையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் நாட்டின் இரண்டாவது பெரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ், கார்களின் விலையை ரூ.30,000 வரை உயர்த்தியிருக்கிறது.

09. மெர்சிடிஸ் பென்ஸ்

09. மெர்சிடிஸ் பென்ஸ்

இந்தியாவில் சொகுசு கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கார்களின் விலையை 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

10. டொயோட்டா

10. டொயோட்டா

பெங்களூரில் ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் ஜப்பானிய நிறுவனமான டொயோட்டா தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறது. இதனால், இன்னோவா உள்ளிட்ட பல முன்னணி டொயோட்டா கார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

 
English summary
Automobile manufacturers has increased car prices from January 1 in view of Rupee devaluation and increase in cost of raw materials.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark