பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, ஏப்ரல் 22-ல் இந்தியாவில் அறிமுகம்
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் இந்திய அறிமுகம், ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது.
பென்ட்லீ நிறுவனம், உலக அளவில் மிகவும் விலை உயர்ந்த கார் மாடல்களை தயாரித்து வழங்குவதில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி குறித்த கூடுதல் கூடுதல் தகவல்களை வரும் ஸலைட்ரில் தெரிந்து கொள்ளலாம்.

பென்ட்லீ பென்டைகா...
பென்டைகா எஸ்யூவி தான், பென்ட்லீ நிறுவனம் சர்வதேச சந்தைகளுக்கு அறிமுகம் செய்த முதல் சொகுசு எஸ்யூவி ஆகும்.
முன்னதாக, பிரட்டனை மையமாக கொண்டு இயங்கும் பென்ட்லீ நிறுவனம், இந்த பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியை 2015 ஃப்ராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யபட்டது.

டிசைன்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவியின் ஒட்டுமொத்த டிசைன் மொழி, பென்ட்லீ நிறுவனம் தயாரித்து வழங்கும் பிற கார் ரேஞ்ச்சை அடிப்படையாக கொண்டுள்ளது.

இஞ்ஜின்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, 6.0 லிட்டர், டபுள்யூ 12 பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின் 600 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 900 என் எம் டார்க்கை வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, ஏடபுள்யூடி எனப்படும் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டிருக்கும். இதன் இஞ்ஜின் 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.

உச்சபட்ச வேகம்;
பென்ட்லீ பென்டைகா, எஸ்யூவி வகையை சேர்ந்த காராக இருந்தாலும், அது கொடுக்கும் காசுக்கு சரியான மதிப்பு கொண்டதாக இருக்கும்.
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, மணிக்கு 300 கிலோமீட்டர் வெகு சுலபமாக எட்டிவிடும் திறன் உடையதாக உள்ளது.

செயல்திறன்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 4.2 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

அறிமுகம்;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, ஏற்கனவே பல்வேறுய் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
பென்டைகா எஸ்யூவியை பென்ட்லீ நிறுவனம், இந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அறிமுகம் செய்கிறது.

போட்டி;
தற்போதைய நிலையில், இந்திய வாகன சந்தைகளில் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கு எந்த விதமான மாடலும் போட்டியாக விளங்கவில்லை.

விலை;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி, முன்னதாக சீனாவில் 3.89 மில்லியன் யூவான் (இந்திய மதிப்பில் 4.2 கோடி ரூபாய்) என்ற விலையில் அறிமுகம் செய்யபட்டது.
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யபடும் போது, 4.2 கோடி ரூபாய் அல்லது அதற்கு கூடுதலான விலையிலும் அறிமுகம் செய்யபடலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள் - 1;
பென்ட்லீயின் சிக்னேச்சர் எடிசன் ஸ்மார்ட்போன்: விலை ஜஸ்ட் ரூ.10 லட்சம்
இங்கிலாந்து ராணிக்கு முதல் பென்ட்லீ பென்டைகா... மான் வேட்டைக்கு செல்ல பயன்படுத்துவார்!!
பென்ட்லீ தொடர்புடைய செய்திகள்

இதர தொடர்புடைய செய்திகள் - 2;
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவிக்கான கடிகாரத்தின் விலை 'ஜஸ்ட்' ரூ.1.50 கோடி...!!!
உலகின் அதிவேக எஸ்யூவி பென்ட்லீ பென்டைகா விபரங்கள், படங்கள் வெளியானது!
பென்ட்லீ பென்டைகா ஃபர்ஸ்ட் எடிஷன் கார் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் அறிமுகம்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி - கூடுதல் படங்கள்
பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








