கார்களுக்கு வழங்கப்படும் விசேஷ தள்ளுபடிகள், சலுகைகள்- விபரம்!

Written By:

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை கார் மார்க்கெட்டை வெகுவாக பாதித்துவிட்டது. முன்பதிவுகள் வேகமாக குறைந்து வருவதுடன், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆண்டு கடைசி நெருங்கி வருவதால், பலர் கார் வாங்கும் திட்டத்தை தள்ளிப்போடுவது இயல்பு. எனவே, தற்போது மாருதி உள்ளிட்ட பல முன்னணி கார் விற்பனையை அதிகரிப்பதற்காக சிறப்பு தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்துள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 மாருதி ஆல்ட்டோ 800

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஆல்ட்டோ கே10 கார்களுக்கு சிறப்புச் சலுகைகள் உள்ளன. ஆல்ட்டோ 800 காரின் எல்எக்ஸ்ஐ மற்றும் எல்எக்ஸ்ஐ எல்பிஜி மாடல்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியும், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் பெறும் வாய்ப்பு உள்ளது.

மாருதி ஆல்ட்டோ கே10

மாருதி ஆல்ட்டோ கே10 கார்களின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.20,000 வரை நேரடித் தள்ளுபடியும், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்கப்படுகிறது.

 மாருதி வேகன் ஆர்

மாருதி வேகன் ஆர் காருக்கு ரூ.20,000 மதிப்புடைய கிஃப்ட் வவுச்சர்களும், ரூ.45,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாகவும் பெறும் வாய்ப்புள்ளது. ஏஎம்டி மாடல்கலுக்கு ரூ.20,000 மதிப்புடைய கிஃப்ட் வவுச்சர், ரூ.45,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் தவிர்த்து, கூடுதலாக ரூ.5,000 போனஸ் பெறும் வாய்ப்புள்ளது.

 மாருதி செலிரியோ

மாருதி செலிரியோ காரின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடியும், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது. செலிரியோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியும், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறமுடியும். டீசல் மாடலுக்கு ரூ.65,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி ரிட்ஸ்

மாருதி ரிட்ஸ் காரின் எல்எக்ஸ்ஐ மாடலுக்கு ரூ.25,000 நேரடி தள்ளுபடியும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறும் வாய்ப்புள்ளது. விஎக்ஸ்ஐ, விஎக்ஸ்ஐ ஆட்டோமேட்டிக் மற்றும் இசட்எக்ஸ்ஐ மாடல்களுக்கு ரூ.15,000 தள்ளுபடியும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி ஸ்விஃப்ட்

மாருதி ஸ்விஃப்ட் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு ரூ.10,000 நேரடி தள்ளுபடியும், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி டிசையர்

மாருதி டிசையர் காரின் பெட்ரோல், டீசல் மாடல்களுக்கு ரூ.10,000 வரை பணத் தள்ளுபடியும், ரூ.25,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும்.

மாருதி சியாஸ்

மாருதி சியாஸ் காருக்கு ரூ.15,000 வரை நேரடி தள்ளுபடியாகவும், ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெற முடியும். டீசல் மாடல்களுக்கு ரூ.35,000 சேமிப்புச் சலுகைகள் உள்ளன.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா காருக்கு ரூ.10,000 வரை தள்ளுபடியும், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் வழங்கப்படுகிறது. சிஎன்ஜி வேரியண்ட்டுகளுக்கு ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகை மட்டும் பெற முடியும். டீசல் வேரியண்ட்டுகளுக்கு சலுகைகள் குறித்த தகவல் இல்லை.

ஹூண்டாய் இயான்

ஹூண்டாய் இயான் காருக்கு ரூ.7,500 வரை தள்ளுபடியும், ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும் பெறும் வாய்ப்புள்ளது.

 ஹூண்டாய் ஐ10

ஹூண்டாய் ஐ10 காரின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.50,000 வரை சேமிப்புச் சலுகைகள் பெறும் வாய்ப்புள்ளது. தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

 ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காருக்கு ரூ.7,500 வரை தள்ளுபடியும், ரூ.33,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையையும் பெறும் வாய்ப்புள்ளது.

ஹூண்டாய் எக்ஸ்சென்ட்

ஹூண்டாய் எக்ஸ்சென்ட் காருக்கு ரூ.15,000 வரை தள்ளுபடியும், ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் உள்ளது. அரசு பணியில் உள்ள வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடலுக்கு ரூ.7,000 வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.12,000 வரையிலும் சிறப்பு சேமிப்புச் சலுகைகள் உள்ளன.

 ஹூண்டாய் வெர்னா

ஹூண்டாய் வெர்னா காருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடியும், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையை இப்போது பெறும் வாய்ப்புள்ளது. கூடுதலாக ரூ.10,000 சிறப்புச் சலுகைகளும் உண்டு.

ஹோண்டா ஜாஸ்

ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடலில் இருக்கும் இ,எஸ் மற்றும் எஸ்வி ஆகிய பேஸ் மற்றும் நடுத்தர வகை மாடல்களுக்கு ரூ.25,000 வரையிலும், வி மற்றும் விஎக்ஸ் ஆகிய டாப் வேரியண்ட்டுகளுக்கு ரூ.40,000 வரை சலுகைகள் பெறும் வாய்ப்புள்ளது. பெட்ரோல் மாடல்களுக்கு ரூ.15,000 சிறப்புச் சலுகைகள் காத்திருக்கின்றன.

ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் காருக்கு ரூ.10,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும், ரூ.5,500 மதிப்புடைய இலவச ஆக்சஸெரீகளும், ஒரு ரூபாய் செலுத்தி முதல் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ் பெறும் வாய்ப்பும் உள்ளது. கார்ப்பரேட் நிறுவன வாடிக்கையாளர்களுக்காக ரூ.4,000 வரையில் தள்ளுபடியும், ரூ.5,000 வரை சிறப்பு சேமிப்பு சலுகையாக பெறும் வாய்ப்பும் உள்ளது.

ஹோண்டா சிட்டி

ஹோண்டா சிட்டி காரின் டீசல் மாடல்களுக்கு ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும், ஒரு ரூபாய் செலுத்தினால் ஓர் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ் பெறும் வாய்ப்பும் உள்ளது. பெட்ரோல் மாடலின் இ, எஸ், எஸ்வி சிவிடி, விஎக்ஸ் சிவிடி ஆகிய வேரியண்ட்டுகளுக்கு ரூ.15,000 சலுகைகளும், எஸ்வி, வி, விஎக்ஸ், விஎக்ஸ் ஆப்ஷனல், ஆகிய வேரியண்ட்டுகளுக்கு ஒரு ரூபாய் செலுத்தி ஓர் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்ஸ் பெறும் வாய்ப்பும் உள்ளது.

 ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.70,000 வரையில் சிறப்புச் சேமிப்பு சலுகைகளை பெறும் வாய்ப்பு இப்போது உள்ளது.

ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.65,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி எம்பிவி காருக்கு அதிகபட்சமாக ரூ.40,000 மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

 டாடா சஃபாரி ஸ்டார்ம்

டாடா சஃபாரி ஸ்டார்ம் எஸ்யூவிக்கு ஒரு லட்ச ரூபாய் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. மேலும், ரூ.10 லட்சம் மதிப்புடைய சலுகைகளை வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

 டாடா ஸெஸ்ட்

டாடா ஸெஸ்ட் காருக்கு ரூ.20,000 தள்ளுபடியும், முதல் ஆண்டுக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ் சலுகைகளும் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.66,000 வரை மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. அத்துடன், சாலை அவசர உதவி திட்டம், கூடுதல் காலத்துக்கான வாரண்டி ஆகியவற்றை இலவசமாக பெறும் வாய்ப்புள்ளது. அத்துடன், இன்ஸ்யூரன்ஸிலும் சலுகைகள் உண்டு.

 மஹிந்திரா டியூவி300

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.25,000 வரை தள்ளுபடியும், ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையாவும் பெற முடியும்.

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிக்கு ரூ.39,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இப்போது இருக்கிறது.

 முக்கிய குறிப்பு

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சேமிப்புச் சலுகைகள் டீலருக்கு டீலர் மாறுபடலாம். எனவே, கூடுதல் விபரங்களை கார் நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

English summary
Here are some of the best car discounts for November including exchange, special and current offers on cars
Story first published: Thursday, November 24, 2016, 11:14 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark