2015-ல் பிரச்னைகள் குறைவான இந்தியாவின் நம்பகமான கார்கள்!

By Saravana Rajan

புதிய கார் வாங்கினால் பிரச்னைகள் இருக்காது; பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும்," என்பதே பலரின் எண்ணம். ஆனால், சில நேரங்களில் புதிய கார்களில் கூட பிரச்னைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. பிரச்னையே இல்லாத கார் மாடலை கைகாட்ட முடியவில்லை என்றாலும் கூட, பிரச்னைகள் மிக குறைவாகவும், பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்ற சிறந்த கார்களை ஜேடி பவர் என்ற ஆய்வு நிறுவனம் கார் உரிமையாளர்களிடம் ஆய்வு நடத்தியிருக்கிறது.

இண்டரை முதல் மூன்றரை ஆண்டுகள் வரை பழமையான கார்களின் உரிமையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. 100 கார்களை கணக்கில் கொண்டு, அந்த கார்களில் ஏற்படும் பிரச்னைகளின் சராசரியின் அடிப்படையில், குறைவான பிரச்னை மற்றம் நம்பகத்தன்மை அதிகம் கொண்ட கார்களை வகை வாரியாக பட்டியலிட்டுள்ளனர். அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் புதிய கார் மாடல்களை உங்களது பார்வைக்கு வழங்குகிறோம். இது நிச்சயம் புதிய கார் வாங்குவோர் சிறந்த கார்களை தேர்வு செய்வதற்கு துணை புரியும் என்று நம்புகிறோம்.

ஏ செக்மென்ட்

ஏ செக்மென்ட்

01. மாருதி ஆல்ட்டோ 800:

விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 கார் மாடல். வாடிக்கையாளர்களிடம் இந்த கார் அமோக ஆதரவை பெற்றிருப்பதற்கு, அனைத்து விதத்திலும் சிறப்பானதாக இருப்பதே காரணம். ஏ செக்மென்ட் எனப்படும் சிறிய ரக கார் வகையில், மாருதி ஆல்ட்டோ 800 கார் சிறந்த மாடலாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 100 கார்களில் சராசரியாக 156 பிரச்னைகள் இருந்ததாக ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.

ஏ செக்மென்ட்

ஏ செக்மென்ட்

02. டாடா நானோ

மிக குறைவான விலை கொண்ட கார் என்பது இதன் மிகப்பெரிய பலம். நகர்ப்புறத்திற்கு ஏற்றதாகவும், பெண்கள் மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற கார் மாடல். 100 நானோ கார்களில் சராசரியாக 183 பிரச்னைகள் இருந்ததாக ஜேடி பவர் நிறுவனத்தின் ஆய்வு கூறுகிறது. நம்பகத்தன்மையில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

ஏ செக்மென்ட்

ஏ செக்மென்ட்

03. ஹூண்டாய் இயான்

டாடா நானோ காரைவிட இயான் காரில் ஏற்பட்ட பிரச்னைகளின் சராசரி அதிகம். ஆம், ஒவ்வொரு 100 கார்களிலும் சராசரியாக 189 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏ+ செக்மென்ட்

ஏ+ செக்மென்ட்

01. மாருதி ஆல்ட்டோ கே10

ஏ+ செக்மென்ட்டில் மாருதி ஆல்ட்டோ கே10 கார் முதன்மை வகிக்கிறது. ஒவ்வொரு 100 கார்களிலும் 157 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாருதியின் விலை குறைவான ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் இது என்பதும் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் விஷயம்.

ஏ+ செக்மென்ட்

ஏ+ செக்மென்ட்

02. ஹூண்டாய் ஐ10

இந்த வகையில், ஹூண்டாய் ஐ10 இரண்டாவதாக உள்ளது. ஒவ்வொரு 100 ஐ10 கார்களிலும் சராசரியாக 158 பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. யூஸ்டு கார் மார்க்கெட்டிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை வைத்தே இதன் நம்பகத்தன்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

 ஏ+ செக்மென்ட்

ஏ+ செக்மென்ட்

03. ஹூண்டாய் சான்ட்ரோ

விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டாலும், பட்டியலுக்குள் நுழைந்துவிட்டது. ஒவ்வொரு 100 சான்ட்ரோ கார்களிலும் சராசரியாக 187 பிரச்னைகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பழைய மார்க்கெட்டில் வாங்குவோர்க்கு இந்த புள்ளிவிபரம் பயன்படும்.

பி செக்மென்ட்

பி செக்மென்ட்

01. ஹோண்டா பிரியோ

பி செக்மென்ட் கார்களில் ஹோண்டா பிரியோ நம்பகத்தன்மையில் முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு 100 பிரியோ கார்களிலும் சராசரியாக 82 பிரச்னைகள் மட்டுமே எழுந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் விற்பனையில் சொதப்புவதற்கு டிசைன்தான் முக்கிய மைனஸ். இல்லையென்றால், விற்பனையில் ரவுண்டு கட்டி அடித்துவிடும்.

 பி செக்மென்ட்

பி செக்மென்ட்

02. மாருதி ரிட்ஸ்

அந்திம காலத்தில் உள்ள மாருதி ரிட்ஸ் நம்பகத்தன்மையில் சிறப்பான மாடலாக விளங்குகிறது. ஒவ்வொரு 100 ரிட்ஸ் கார்களிலும் சராசரியாக 97 பிரச்னைகள் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பி செக்மென்ட்

பி செக்மென்ட்

03. டொயோட்டா லிவா

விற்பனையில் சொதப்பி வரும் மாடல்கள் நம்பகத்தன்மையில் சிறப்பான இருப்பது நகைமுரண்தான். ஆம், கடந்த ஆண்டு கள நிலவரப்படி, ஒவ்வொரு 100 லிவா கார்களிலும் சராசரியாக 117 பிரச்னைகள் எழுந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டியாளர்களைவிட சராசரி குறைவாக இருந்ததால், பி செக்மென்ட் கார்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக்

01. ஃபோக்ஸ்வேகன் போலோ

பிரிமியம் ஹேட்ச்பேக் வகையில் ஃபோக்ஸ்வேகன் போலோ கார் முதலிடத்தில் உள்ளது. ஆய்வின்படி, கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 போலோ கார்களிலும் சராசரியாக 136 பிரச்னைகள் இருந்ததாக ஆய்வு கூறுகிறது. மேலும், கடந்த 2014ம் ஆண்டிலும் முதலிடத்தில் இருந்தது போலோ. அப்போதைவிட இப்போது பிரச்னைகளின் அளவு குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக்

02. ஹூண்டாய் எலைட் ஐ20

இந்தியாவின் ஆணழகன் என்ற பதத்திற்கு பொருத்தமான ஹூண்டாய் எலைட் ஐ20 நம்பகத்தன்மையிலும் சிறந்து விளங்குகிறது. கடந்த ஆண்டில் ஒவ்வொரு 100 எலைட் ஐ20 கார்களிலும் சராசரியாக 173 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 பிரிமியம் ஹேட்ச்பேக்

பிரிமியம் ஹேட்ச்பேக்

03. மாருதி ஸ்விஃப்ட்

கடந்த ஆண்டு மூன்றாவது இடத்தில் உள்ளது மாருதி ஸ்விஃப்ட். ஒவ்வொரு 100 ஸ்விஃப்ட் காரிலும் சராசரியாக 194 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த ஆண்டைவிட பிரச்னைகளின் அளவு அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப ரக செடான்

ஆரம்ப ரக செடான்

01. டொயோட்டா எட்டியோஸ்

ஆரம்ப நிலை செடான் கார் மார்க்கெட்டில் டொயோட்டா எட்டியோஸ் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஒவ்வொரு 100 கார்களிலும் சராசரியாக 116 பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்ப ரக செடான்

ஆரம்ப ரக செடான்

02. ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் கார் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு 100 அமேஸ் கார்களிலும் சராசரியாக 130 பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக, அமேஸ் விற்பனைக்கு கூடுதல் வலு சேர்க்கும் விஷயமாக பார்க்கலாம்.

 ஆரம்ப ரக செடான்

ஆரம்ப ரக செடான்

03. மாருதி டிசையர்

இந்த செக்மென்ட்டில் போட்டியாளர்களால் விற்பனையில் தொட முடியாத இடத்தில் உள்ள மாருதி டிசையர் கார் மூன்றாவது இடத்தில் உள்ளது. 100 கார்களில் சராசரியாக 240 பிரச்னைகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த 2014ம் ஆண்டைவிட தற்போது பிரச்னைகள் அதிகரித்திருப்பதை மாருதி கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிட்சைஸ் செடான்

மிட்சைஸ் செடான்

01. ஸ்கோடா ரேபிட்

அருமையான டிசைன், தரமான கட்டமைப்புக்கு பெயர் பெற்ற ஸ்கோடா ரேபிட் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. 100 கார்களில் சராசரியாக 100 பிரச்னைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, கடந்த ஆண்டில் ஒரு ரேபிட் காரில் சராசரியாக ஒரு பிரச்னை மட்டுமே என்ற வீதத்தில் புள்ளிவிபரம் காட்டுகிறது.

 மிட்சைஸ் செடான்

மிட்சைஸ் செடான்

02. ஹோண்டா சிட்டி

தரத்திற்கும், கவர்ச்சிக்கும் பெயர் பெற்று, இந்தியர்களின் அபிமானத்திற்குரிய மிட்சைஸ் செடான் காரான ஹோண்டா சிட்டி இரண்டாவது இடத்தில் உள்ளது. 100 கார்களில் 109 பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ரேபிட் கார் இதைவிட சிறந்ததாக இருக்கிறது.

 மிட்சைஸ் செடான்

மிட்சைஸ் செடான்

03. ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வேகன் கார்கள் தரமான கட்டமைப்பிற்கும், பாதுகாப்பிற்கும் பெயர் போனவை. அத்துடன், உரிமையாளர்களிடத்திலும் நம்பகத்தன்மையை பெற்றிருக்கின்றன. கடந்த ஆண்டு ஆய்வுப்படி 100 கார்களில் சராசரியாக 118 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எம்பிவி/எம்யூவி

எம்பிவி/எம்யூவி

01. டொயோட்டா இன்னோவா

பன்முக பயன்பாட்டு ரகத்தில் டொயோட்டா இன்னோவாதான் முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டில் 100 இன்னோவா கார்களில் சராசரியாக 118 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாகவே டொயோட்டா கார்கள் நம்பகத்தன்மையில் சிறந்து விளங்குவது இந்த ஒட்டுமொத்த பட்டியலின்படியே நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

எம்பிவி/எம்யூவி

எம்பிவி/எம்யூவி

02. மாருதி எர்டிகா

வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பான தேர்வு மாருதி எர்டிகா. கடந்த ஆண்டு 100 எர்டிகா கார்களில் சராசரியாக 127 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மாருதி எர்டிகாவின் விற்பனைக்கு உறுதுணையாக அமையும்.

எம்பிவி/எம்யூவி

எம்பிவி/எம்யூவி

03. மஹிந்திரா ஸைலோ

மஹிந்திரா ஸைலோ மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி, 100 ஸைலோ கார்களில் சராசரியாக 245 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

எஸ்யூவி

எஸ்யூவி

01. மஹிந்திரா எக்ஸ்யூவி500

கடந்த ஆண்டு நிலவரப்படி, 100 எக்ஸ்யூவி500 கார்களில் சராசரியாக 171 பிரச்னைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலமாக, இந்த பட்டியலில் முதன்மையான இடத்தை இந்த கார் பிடித்திருக்கிறது.

எஸ்யூவி

எஸ்யூவி

02. ரெனோ டஸ்ட்டர்

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் மிகச் சிறந்த மாடலாக வலம் வரும் ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவி ரகத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 100 டஸ்ட்டர் எஸ்யூவிகளில் சராசரியாக 194 பிரச்னைகள் இருப்பதாக ஜேடி பவர் ஆய்வு கூறுகிறது.

எஸ்யூவி

எஸ்யூவி

03. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ முதலிடத்திலிருந்து கடந்த ஆண்டு மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த ஆண்டில் 100 மஹிந்திரா கார்களில் சராசரியாக 282 பிரச்னைகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது 2014ம் ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

நம்பகத்தன்மை வாய்ந்த உலகின் டாப் 20 கார் நிறுவனங்கள்

நம்பகத்தன்மை வாய்ந்த உலகின் டாப் 20 கார் நிறுவனங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, August 2, 2016, 14:06 [IST]
English summary
Best Indian Cars With Reliability; Do You Own Any Of These Cars?.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+