இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

Written By:

உலக அளவில் மிகப்பெரிய கார் மார்க்கெட்டாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதனால், புதிய மாடல்களின் வரவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 40 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கார் மாடல்கள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில், 10 சிறந்த புதிய கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.

 01. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

01. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா

எம்பிவி கார் என்றாலே எல்லோர் மனதிலும் முதல் சாய்ஸாக வந்து விழும் மாடல் டொயோட்டா இன்னோவா கார்தான். இடவசதியில் தன்னிகரற்ற மாடலாக வலம் வரும் இன்னோவாவுக்கு காம்பேக்ட் எம்பிவி கார்களால் சிறிது நெருக்கடி ஏற்பட்டது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் இடவசதி, தொழில்நுட்பம், எஞ்சின், வடிவமைப்பு என அனைத்திலும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடல் கடந்த மே மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா என்ற பெயரில் வந்த இந்த புதிய தலைமுறை மாடல் அமோக வரவேற்பை பெற்றது. முன்பதிவிலும் அசத்தியதுடன், இதுவரை 50,000 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் டிசைன் வெகுவாக மாற்றங்கள் கண்டுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட், புதிய க்ரில் அமைப்பு, டெயில் லைட்டுகள் அமைப்பு என அனைத்திலும் வித்தியாசங்கள் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக மேம்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

புதிய இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் புதிய எஞ்சின்கள் பொருத்தப்பட்டன. 164 பிஎச்பி பவரை அளிக்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 148 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 171 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வந்தது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் இந்த காருக்கு வலு சேர்த்தன. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் என பல பாதுகாப்பு நுட்பங்களும் இந்த காரின் மதிப்பை உயர்த்திய விஷயங்கள். ரூ.13.85 லட்சம் முதல் ரூ.20.77 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

 02. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

02. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய கார் மாடல்களில் சூப்பர் ஹிட் மாடல்களில் ஒன்று மாருதி விட்டாரா பிரெஸ்ஸா. அடக்கமான வடிவம், அதிக சிறப்பம்சங்கள், அதிக மைலேஜ், சரியான விலை என அனைத்திலும் சிறப்பான மாருதி கார் மாடல் என்பது இதன் முக்கிய சிறப்பம்சங்களாகவும், வாடிக்கையாளர்கள் குழப்பமின்றி தேர்வு செய்வதற்கு சிறந்த மாடலாகவும் இருக்கிறது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரின் டாப் வேரியண்ட் மாடல் பல்வேறு விதமான சிறப்பம்சங்களுடன் கிடைக்கிறது. இரட்டை வண்ணக் கலவை உள்பட அதிக அளவிலான கஸ்டமைஸ் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் டீசல் மாடலில் மட்டுமே வந்தது. இந்த காரில் இருக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 24.3 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுவதும் வாடிக்கையாளர்களை கவர முக்கிய காரணம்.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் புரொஜெக்டெர் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் என அசத்தும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகளும் இந்த காரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கூடுதல் நுட்பங்களாக இருக்கின்றன. ரூ.7.19 லட்சம் முதல் ரூ.9.66 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

03. டாடா டியோகா கார்

03. டாடா டியோகா கார்

இந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் கார்களில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாடல் டாடா டியாகோ கார். அசத்தலான டிசைன், போதுமான வசதிகள், சரியான விலை என அனைத்திலும் சிறந்த தேர்வாக மாறியிருக்கிறது. டாடா மீது படிந்திருந்த அதிருப்தி கறையையும் இந்த கார் போக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் ஹார்மன் மியூசிக் சிஸ்டம் இடம்பெற்று இருக்கிறது. இந்த மியூசிக் சிஸ்டம் உயர் துல்லியம் கொண்டது. இதுதவிர, ஸ்மார்ட்போன் வழியாக நேவிகேஷன் வசதி, ஜூக் அப்ளிகேஷன் உள்ளிட்டவை இருக்கின்றன. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டியூவல் ஏர்பேக்குகள், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் 84 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 69 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.05 லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளு. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரூ.3.20 லட்சம் முதல் ரூ.5.71 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

04. ஃபோக்ஸ்வேகன் அமியோ

04. ஃபோக்ஸ்வேகன் அமியோ

பெரும்பாலானோருக்கு செடான் ரக கார்களையே முழுமையான காராக கருதுவதும், மதிப்பதும் இயல்பு. அதுபோன்று, செடான் ரக காரை விரும்பும் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு காம்பேக்ட் ரக செடான் கார்கள் சிறந்த சாய்ஸாக மாறியது. இதையடுத்து, இந்த செக்மென்ட்டில் பல புதிய மாடல்கள் வரிசை கட்டின. அந்த வரிசையில், லேட்டஸ்ட் மாடல் ஃபோக்ஸ்வேகன் அமியோ. இந்த செக்மென்ட்டில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட மாடல்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் அமியோ கார்.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மழை வந்தால் தானாக இயங்கும் ரெயின் சென்சிங் வைப்பர்கள், கை மற்றும் விரல்கள் மாட்டிக் கொள்ளாதவாறு தானியங்கி முறையில் இறங்கும் ஆன்ட்டி பின்ச் பவர் விண்டோஸ், பின்புறத்தில் இருக்கும் பொருட்களை தெரிந்து கொண்டு இயக்குவதற்கான பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் வியூ கேமரா, ஐபாட் இணைப்பு வசதியுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குளிர்ச்சியை வழங்கும் க்ளவ் பாக்ஸ் உள்ளிட்ட பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகளும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் பொதுவான சிறப்பம்சமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 74 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 108.6 பிஎச்பி பவரையும் அளிக்க வல்ல 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல், டீசல் மாடல்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. டீசல் மாடலில் கூடுதலாக 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. ரூ. 5.24 லட்சம் முதல் ரூ.9.32 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

05. ரெனோ க்விட் ஏஎம்டி

05. ரெனோ க்விட் ஏஎம்டி

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யபப்பட்ட ரெனோ க்விட் கார் இந்தியாவின் சூப்பர் டூப்பர் ஹிட் மாடலாக வலம் வருகிறது. மினி எஸ்யூவி போன்ற இதன் ஸ்டைல், நவீன தொழில்நுட்ப வசதிகள், குறைவான விலை போன்றவை இந்த காரின் விற்பனையை எங்கேயோ கொண்டு சென்றுவிட்டன. முதலில் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சமீபத்தில் இதன் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொடுக்கப்ப்டடுள்ளது. அத்துடன், ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஏஎம்டி காரில் ஒரு முக்கிய விஷயம் மிகவும் கவர்ந்து வருகிறது. அதாவது, இந்த காரில் வழக்கமான கியர் லிவர் இல்லாமல், திருகு அமைப்பின் முலமாக கியரை மாற்றுவதற்கான வசதி இருக்கிறது. இந்த டயல் டேஷ்போர்டிலேயே இருப்பதால், கியர் லிவர் இருப்பதற்கான இடத்தில் பொருட்கள் வைப்பதற்கு கூடுதல் இடவசதி கிடைத்துள்ளது. கியர் மாற்றுவதும் மிக எளிமையாக இருக்கிறது. இந்த கியர் மாற்றும் முறையை தனது ஃபார்முலா-1 கார் வடிவமைப்பு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் ரெனோ உருவாக்கி இருக்கிறது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருப்பதுடன், இந்த செக்மென்ட்டிலேயே முதல்முறையாக விபத்துக்களின்போது பயன்படும் ப்ரீடென்ஷனர் மற்றும் லோடு லிமிட்டர்களும் கூடிய சீட் பெல்ட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கார் ரூ.4.25 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

06. டொயோட்டா ஃபார்ச்சூனர்

06. டொயோட்டா ஃபார்ச்சூனர்

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மிக நேர்த்தியான தோற்றம், புதிய எஞ்சின் ஆப்ஷன்களுடன் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் கலக்கலாக வந்துள்ளது. டொயோட்டா நிறுவனத்தின் புதிய கட்டமைப்பு பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் 7 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், பிரேக் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன. ஹில் அசிஸ்ட், ஆக்டிவ் டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் டிரைவ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் உள்ளன. மேலும், ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற பல்வேறு வித நவீன தொழில்நுட்ப அம்சங்களும் உண்டு.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் 164 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.7 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 177 பிஎச்பி பவரை அளிக்க 2.8 லிட்டர் டீசல் எஞ்சினும் உள்ளன. பெட்ரோல், டீசல் மாடல்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் தேர்வு செய்து கொள்ளலாம். ரூ.25.92 லட்சம் முதல் ரூ.31.12 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.

07. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

07. புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ்

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த காரை அறிமுகம் செய்தார். தோற்றத்தில் பல்வேறு மாற்றங்களுடன் கவர்ச்சிகர அம்சங்களுடன் வந்த இந்த கார் சொகுசு கார் வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் கை சைகையால் கட்டுப்பாட்டு சாதனத்தை இயக்கும் வசதி, பிஎம்டபிள்யூ லேசர் ஹெட்லைட், சாதனங்களை டேப்லெட் கம்ப்யூட்டர் மூலமாக இயக்கும் வசதி என நவீன காலத்துக்கு ஏற்ற அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு காரில் 265 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 450 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 4.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் ரூ.1.14 கோடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

08. ஜீப் கிராண்ட் செரோக்கீ மற்றும் ரேங்லர் அன்லிமிடேட்

08. ஜீப் கிராண்ட் செரோக்கீ மற்றும் ரேங்லர் அன்லிமிடேட்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்காவின் ஜீப் எஸ்யூவி மாடல்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மிரட்டலான பாரம்பரிய டிசைன், அசத்தலான தொழில்நுட்ப விஷயங்களுடன் இந்த எஸ்யூவி கார்கள் இந்தியாவில் களமிறங்கி உள்ளன. ஆனால், இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், விலை மிக அதிகம் என்ற கருத்து நிலவுகிறது. ஜீப் செரோக்கீ எஸ்யூவியில் நப்பா லெதர் இருக்கைகளுடன் மிக பிரிமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

ஜீப் செரோக்கீ எஸ்யூவியில் 240 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. ஜீப் செரோக்கீ எஸ்ஆர்டி மாடலில் இருக்கும் 6.4 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 469 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்லது. இந்த மாடலிலும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜீப் ரேங்லர் எஸ்யூவியில் 197 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் இருக்கிறது. 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

டிராக்ஷன் கன்ட்ரோல், எலக்ட்ரானிக் லிமிடேட் ஸ்லிப் டிஃபரன்ஷியல், ஹில் அசிஸ்ட், 7 ஏர்பேக்குகளுடன் கிடைக்கிறது. ஜீப் ரேங்லர் அன்லிமிடேட் எடிசனில் ஆஃப்ரோடு அம்சங்கள் சிறப்பாகவே இடம்பெற்றுள்ளன. ஜீப் செரோக்கீ எஸ்யூவி ரூ.94 லட்சம் முதல் ரூ.1.12 கோடி வரையிலான விலையிலும், ரேங்லர் மாடல் ரூ.71.60 லட்சம் விலையிலும் கிடைக்கிறது.

09. ஃபோர்டு மஸ்டாங்

09. ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்க மண்ணில் மட்டுமே காணக்கிடைக்கூடிய மஸில் என்ற பிரத்யேக ரகத்தை சேர்ந்த ஃபோர்டு மஸ்டாங் கார் இந்த ஆண்டு ஜூலையில் இந்திய மண்ணில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வித்தியாசமான ஸ்டைல், அதிசெயல்திறன்மிக்க எஞ்சின், நீண்ட பாரம்பரியம் கொண்ட இந்த கார் இந்தியர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் எச்ஐடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட்டுகள், அலை போன்று ஒளிரும் இன்டிகேட்டர்கள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், 19 அங்குல அலாய் வீல்கள் என ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது. இந்த காரில் இடம்பெற்று இருக்கும் எலக்ட்ரானிக் லைன் லாக் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக எளிதாக டிரிஃப் செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தில் டிரிஃப்ட் செய்வதற்கு ஏதுவாக முன்புற பிரேக்குகள் மட்டுமே பிடிக்கப்பட்டு, பின்புற வீல்களுக்கு பிரேக் பவர் செலுத்தப்படாது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 395.5 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும். இந்தியாவில் ரூ.65 லட்சம் விலையில் கிடைக்கிறது.

10. நிஸான் ஜிடிஆர்

10. நிஸான் ஜிடிஆர்

உலக அளவில் மிக சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடல்களில் ஒன்று நிசான் ஜிடிஆர். ஸ்போர்ட்ஸ் கார் ஆர்வலர்களால் காட்ஸில்லா என்று செல்லமாக குறிப்பிடப்படும் இந்த கார் சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் புதிய தலைமுறைக்கு மாறி இருக்கும் இந்த கார் ஸ்போர்ட்ஸ் கார் வாங்க திட்டமிட்டிருந்தோருக்கு சிறந்த சாய்ஸாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த காரில் உள்ள முன்புற விண்ட்ஸ்கிரீன் கண்ணாடி விசேஷ சப்தம் உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கொண்டது. இந்த கண்ணாடியானது, வெளிப்புறத்திலிருந்து வரும் சப்தத்தை வெகுவாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காில் இருக்கும் 3.8 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 562 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 6 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது.

இந்த ஆண்டு அறிமுகமான கார்களில் டாப் - 10 மாடல்கள்!

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும். உலகின் மிக விரைவான ஆக்சிலரேஷன் கொண்ட கார்களில் ஒன்று. மணிக்கு 315 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ரூ.1.99 கோடி விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கிறது.

English summary
The 'Top New Car Launches In 2016 In India' list includes four-wheelers which made a significant impact to the automobile industry of the country.
Story first published: Monday, December 26, 2016, 13:29 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark