வாடிக்கையாளர்களை 'தவம்' கிடக்க வைத்திருக்கும் புதிய கார் மாடல்கள்!

வாடிக்கையாளர்களிடத்தில் அதிக ஏற்படுத்திய காக்க வைத்திருக்கும் சில கார் மாடல்கள் பற்றிய முக்கிய விபரங்கள் அடங்கிய தொகுப்பை இங்கே காணலாம்.

By Saravana Rajan

மார்க்கெட்டில் சிறந்த கார் மாடல்கள் விற்பனைக்கு கிடைத்தாலும், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் சில புதிய கார் மாடல்கள் வாடிக்கையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அத்துடன், அந்த கார் மாடல்களுக்காக காத்திருப்பதும் வீண் போகாது என்ற அம்சங்களுடன் அவை விற்பனைக்கு வர இருக்கின்றன. அதில், வாடிக்கையாளர்களை தவம் கிடக்க வைத்திருக்கும் டாப் 10 கார் மாடல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

01. ரெனோ க்விட் ஏஎம்டி

01. ரெனோ க்விட் ஏஎம்டி

ரெனோ க்விட் கார் குறித்து அதிகம் சொல்லத் தேவையில்லை. குறுகிய காலத்தில் நன்மதிப்பை பெற்ற பிராண்டாக மாறியிருக்கிறது. வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்திலும் சிறப்பாக இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தாண்டி இந்த கார் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் விஷயம் என்ன தெரியுமா, இந்த காரில் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் வர இருப்பதுதான்.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

பிற ஏஎம்டி கார்களை காட்டிலும் மிக எளிதான வகையில் திருகு அமைப்பின் மூலமாக கியர் மோடுகளை மாற்றும் வசதிகளுடன் வருகிறது. மேலும், இந்த காரில் இருக்கும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் சிறப்பான பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. ஆம், இந்த எஞ்சின் 67 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். அத்துடன், லிட்டருக்கு 24.04 கிமீ என்ற மிகச் சிறப்பான மைலேஜ், போட்டியாளர்களைவிட சவாலான விலையில் வர இருப்பதும் வாடிக்கையாளர்களை தவம் கிடக்கச் செய்திருக்கிறது ரெனோ க்விட் காரின் ஏஎம்டி மாடல்.

02. மாருதி பலேனோ ஆர்எஸ்

02. மாருதி பலேனோ ஆர்எஸ்

பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி பலேனோ கார் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், மாருதி பலேனோ காரின் அதிசக்திவாய்ந்த மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறது. கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் புதிய எஞ்சினுடன் வர இருப்பதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் இந்த எஞ்சின் வழங்கும். அதிசக்திவாய்ந்த கார் என்பதை புறத்தோற்றத்திலேயே காட்டும் விதத்தில் பாடி கிட், க்ரோம் அலங்கார பாகங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் காரை வாங்க விரும்புவோருக்கு மிகச் சரியான சாய்ஸாக இருக்கும்.

 03. டாடா டியாகோ ஏஎம்டி

03. டாடா டியாகோ ஏஎம்டி

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தலை நிமிரச் செய்திருப்பதுடன், மார்க்கெட்டில் அந்த நிறுவனத்தின் அந்தஸ்தையும் மேம்படுத்தியிருக்கிறது புதிய டியாகோ கார். குறைவான விலையில் அருமையான டிசைன், வசதிகளுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. இந்த நிலையில், ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட டியாகோ கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

க்ளட்ச் பெடல் இல்லாமல் மிக எளிதாக ஓட்டுவதற்கு வாய்ப்பை தரும் மாடலாக வருவதால் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த காருக்கும் பல வாடிக்கையாளர்கள் காத்திருக்க தயாராக இருக்கின்றனர். ரூ.4.5 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 04. மாருதி இக்னிஸ்

04. மாருதி இக்னிஸ்

மாருதி நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல். வித்தியாசமான க்ராஸ்ஓவர் ரக பாடி ஸ்டைல், நவீன வசதிகளுடன் இளைய தலைமுறை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அம்சங்களுடன் வருகிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

அதாவது, பட்ஜெட் கார்கள் மத்தியில் பிரிமியம் க்ராஸ்ஓவர் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ளது. அத்துடன், எஸ்யூவி கார்கள் போன்று பாடி கிளாடிங்க, பெரிய வீல் ஆர்ச்சுகள், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் போன்ற பல வசதிகள் இருக்கும். சுஸுகி நிறுவனத்தின் அடாப்டிவ் டியூவல் கேமரா பிரேக்கிங் சிஸ்டம், ஹில் டிசென்ட் கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என்று பல வசதிகள் இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 05. டாடா கைட் 5

05. டாடா கைட் 5

காம்பேக்ட் செடான் கார்களுக்கான வரவேற்பு உங்களுக்கு தெரிந்ததே. ஆனால், இப்போது எக்கச்சக்க காம்பேக்ட் செடான் கார்கள் மிகச்சிறந்த பேக்கேஜுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. அந்த வரிசையில் இந்த மார்க்கெட்டில் கலக்க களமிறங்க உள்ளது டாடா கைட் 5 செடான் கார். டியாகோ காரின் செடான் வகையாக மாற்றப்பட்டிருக்கும் இந்த கார் இந்தியாவின் மிக குறைவான விலை காம்பேக்ட் செடான் காராக களமிறங்க உள்ளது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

சரி, விலை குறைவான கார் என்றவுடன் முகத்தை சுளிக்க வேண்டாம். கொடுக்கும் பணத்திற்கு நிறைவான வசதிகள், வடிவமைப்பு, இடவசதி, பூட்ரூம் இடவசதி, மைலேஜ் என அனைத்திலும் வாடிக்கையாளர்களுக்கு தோதுவான மாடலாக இருக்கும். இதன் ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரமும் வாடிக்கையாளர்களை கவரும். ரூ.4.5 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 06. டாடா ஹெக்ஸா

06. டாடா ஹெக்ஸா

டாடா சஃபாரி எஸ்யூவிக்கு தனி ரசிகர்கள் உண்டு. அந்த வரிசையில், அடுத்து ஒரு சிறப்பான பேக்கேஜ் கொணட நவீன வகை எஸ்யூவி வகை அம்சங்களுடன் டாடா ஹெக்ஸா கார் வர இருக்கிறது. க்ராஸ்ஓவர் ரகத்தில் வர இருக்கும் இந்த காரும் வாடிக்கையாளர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

தினசரி பயன்பாடு, நெடுஞ்சாலை பயணம், ஆஃப்ரோடு சாகசங்கள் என அனைத்திற்கும் சிறந்த மாடலாக இருக்கும். இந்த காரில் 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வழங்கும். வரும் ஜனவரியில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.12 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 07. ஹூண்டாய் டூஸான்

07. ஹூண்டாய் டூஸான்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கும், ஹூண்டாய் சான்டா ஃபீ எஸ்யூவிக்கும் இடையிலான மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கும் ஹூண்டாய் டூஸான் இந்தியர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல். வலிமையும், நளினமும் இழைந்தோடும் டிசைன் அமைப்பில் வரும் இந்த புதிய கார் பிரிமியம் கார்களை விரும்புவோர்க்கு சரியான சாய்ஸாக இருக்கும்.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

இந்த காருக்கு 50 சதவீத உதிரிபாகங்களை இந்தியாவிலேயே பெற்று அசெம்பிள் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டு இருக்கிறது. இதனால், விலையும் சவாலாக இருக்கும். இந்த காரில் 2.2 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கும். 134 பிஎச்பி பவரையும், 181 பிஎச்பி பவரை அளிக்கும் வகையில் இரு மாடல்களாக வர இருக்கிறது. இந்த மாதம் விற்பனைக்கு வர இருக்கும் இந்த கார் ரூ.18 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 08. டாடா நெக்ஸான்

08. டாடா நெக்ஸான்

காம்பேக்ட் எஸ்யூவி கார் ரகத்தில் கலக்க காத்திருக்கும் இந்த எஸ்யூவி தற்போது தீவிர சோதனை ஓட்டங்களில் இருக்கிறது. இந்த காம்பேக்ட் எஸ்யூவி கார் போட்டியாளர்களிடத்தில் இருந்து மிகவும் வித்தியாசமாகவும், தனித்துவமாகவும் இருக்கிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

சொகுசு கார்களில் மட்டுமே காணக்கிடைக்கும் அதிநவீன ஃப்ளோட்டிங் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இருக்கும். 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் இந்த கார் ரூ.6 லட்சம் ஆரம்ப விலையில் வருகிறது.

09. நிசான் எக்ஸ்-ட்ரெயில்

09. நிசான் எக்ஸ்-ட்ரெயில்

முழுமையான ஹைபிரிட் எரிபொருள் நுட்பம் கொண்ட இந்தியாவின் முதல் எஸ்யூவி வகை மாடலாக வருகிறது. இதனால், அரசாங்கத்தின் மானியச் சலுகையை பெற இருக்கிறது. 5 சீட்டர் எஸ்யூவி மாடலான நிசான் எக்ஸ்ட்ரெயில் எஸ்யூவியின் டிசைனும் மிகச்சிறப்பாக இருக்கிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

இந்த எஸ்யூவியில் 142 பிஎச்பி பவரை வழங்க வல்ல 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். அத்துடன், 31KW மின்மோட்டாரும் உள்ளது. மொத்தமாக 183 பிஎச்பி பவரை அளிக்க வல்ல காராக வருகிறது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் இந்த எஸ்யூவி ரூ.32 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

 10. ஜீப் காம்பாஸ்

10. ஜீப் காம்பாஸ்

பிரிமியம் எஸ்யூவி கார்களை விற்பனை செய்து வரும் அமெரிக்காவின் ஜீப் நிறுவனம் விரைவில் காம்பாஸ் என்ற புதிய எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதான் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் குறைவான விலை கொண்ட மாடலாக இருக்கும் என்பதால், அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

 வாடிக்கையாளர்கள் 'தவம்' கிடக்க செய்திருக்கும் திய கார்கள்... ஸ்பெஷல் தொகுப்பு!

இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல்களில் கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் ரூ.25 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Here is the exciting list of upcoming cars in the Indian market with expected launch dates, specs, and price.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X