சென்னையில் தயாரிக்கபட்ட 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி வெளியாகியது

By Ravichandran

பிஎம்டபுள்யூவின் சென்னை உற்பத்தி ஆலையில் அசெம்பிள் செய்யபட்டு, இந்தியாவிலேயே தயாரிக்கபட்ட முதல் 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி வெளியிடபட்டுள்ளது.

முன்னதாக, பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவியை 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்து, இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவித்தது.

இந்தியாவில், 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் கீழ் 3 வேரியன்ட்கள் வழங்கபடுகிறது. இந்திய சந்தைகளில், 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி, தி எக்ஸ்பெடிஷன், எக்ஸ்லைன், எம் ஸ்போர்ட் ஆகிய வேரியன்ட்களில் வழங்கபடுகிறது. 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் அடிப்படை (பேஸ்) வேரியன்ட் 29.9 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) விலையில் விற்கபடுகிறது.

இதன் முந்தைய மாடலை காட்டிலும், 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி நீண்டதாகவும், இலகுவாகவும் உள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் பகுதியில் பல்வேறு முக்கிய மேம்பாடுகள் செய்யபட்டுள்ளது.

2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவியின் கேபின் உள்ளே இருக்கும் பயணிகளுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும் வகையில், பிஎம்டபுள்யூ இஞ்ஜினியர்கள் இதை மாற்றி வடிவமைத்துள்ளனர். இதன் முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில், 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி பிரிமியம் மற்றும் எஸ்யூவி போன்ற தோற்றத்தை அதிகமாக கொண்டுள்ளது.

bmw-2016-x1-suv-assembly-begin-chennai-plant-rolled-out-first-car

2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி, 2.0 லிட்டர், ட்வின் பவர், டர்போ டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதன் இஞ்ஜின், 187.40 பிஹெச்பியையும், உச்சபட்சமாக 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில், பெட்ரோல் வேரியன்ட்டில் 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவி வழங்கபடவில்லை.

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், 2016 பிஎம்டபுள்யூ எக்ஸ்1 எஸ்யூவியை, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என எதிர்பார்க்கபடுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 26, 2016, 13:03 [IST]
English summary
BMW India has rolled out their very first locally assembled 2016 BMW X1 SUV. This all-new SUV was assembled at BMW's Production facility in Chennai. BMW offers 2016 BMW X1 under the variants - The Expedition, xLine, and M Sport in the Indian market. Base variant of 2016 BMW X1 costs around Rs. 29.9 lakh ex-showroom (India). To know more, check here..
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+