சென்னையில் பிஎம்டபுள்யூவின் 50,000-வது கார் தயாரிக்கபட்டு வெளியாகியது
சென்னையில் பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனத்தின் 50,000-வது கார் தயாரிக்கபட்டு வெளியிடபட்டது.
ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ கார் நிறுவனம், தங்கள் கார்களை சென்னையில் மார்ச் 29, 2007-ஆம் தேதி முதல் அசம்பிள் மற்றும் உற்பத்தி செய்ய துவங்கினர். தற்போது, பிஎம்டபுள்யூ நிறுவனம், சென்னையில் உள்ள உற்பத்தி அலையில் இருந்து தங்களின் 50,000-வது காரை தயாரித்து வெளியிட்டுள்ளனர். பிஎம்டபுள்யூ நிறுவனத்தின் சென்னை உற்பத்தி அலையுடன் சம்பந்தபட்டிருந்த அனைவருக்கும் இது மிக சிறப்பான தறுவாயாக இருந்தது.
சென்னை உற்பத்தி அலையில் தயாரித்து வெளியிடபட்ட கார், பிஎம்டபுள்யூ 7-சீரிஸ் மாடலாக அமைந்தது. பிஎம்டபுள்யூ நிறுவனம், "மேக் இன் இந்தியா" திட்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில், இந்தியாவின் உள்ளே அசம்பிளிங் யூனிட் நிறுவுவது மிக முக்கியமான திட்டமாக இருந்தது. சுமார் 50% வரை, உள்ளூரிலேயே தயாரிப்பு மற்றும் அசம்பிள் நடவடிக்கைகளை அதிகரிப்பதே பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், தற்போது சென்னை உற்பத்தி ஆலையில், 8 மாடல்களை தயாரித்து வருகின்றது. பிஎம்டபுள்யூ நிறுவனம் வழங்கும் 1-சீரிஸ், 3-சீரிஸ், 3-சீரிஸ் கிரான் டூரிஸ்மோ, 5-சீரிஸ், 7-சீரிஸ், எக்ஸ்1, எக்ஸ்3 மற்றும் எக்ஸ்5 மாடல்கள் இங்கு சென்னையில் தயாரிக்கபடுகிறது.

உள்நாட்டிலேயே அசம்பிள் மற்றும் உற்பத்தி செயவதனால், மிதமான வரிகளுடனும் மற்றும் குறைந்த விலையிலும் வழங்க முடிகிறது.
இந்த 50,000-வது தயாரிக்கபட்டு வெளியிடப்படும் நேரத்தில், பிஎம்டபுள்யூ சென்னை உற்பத்தி ஆலையின் மேனேஜிங் டைரக்டரான டாக்டர். ஜோஷன் ஸ்டால்கேம்ப் பங்கேற்றார். ஜெர்மனியை மையமாக கொண்டு இயங்கும் பிஎம்டபுள்யூ கார் நிறுவனம் மூலம் சென்னை உற்பத்தி ஆலையில் தயாரிக்கபடும் கார்களின் தரமும், சர்வதேச அளவில் தயாரிக்கபடும் கார்களுக்கு நிகராக உள்ளது என டாக்டர். ஜோஷன் ஸ்டால்கேம்ப் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








