பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும் பண்டிகைக்கால சலுகைகள்

Written By:

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், இந்த பண்டிகை காலங்களை ஒட்டி ஏராளமான சலுகைகள் மற்றும் ஆதாயங்களை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு நிறுவனங்கள் விதவிதமான சலுகைகளை அளிக்கின்றனர். அந்த வகையில், பிஎம்டபுள்யூ நிறுவனமும் சில அட்டகாட்சமான சலுகைகளை அளித்து வருகின்றனர்.

பிஎம்டபுள்யூ நிறுவனம் அளிக்கும் சலுகைகள் தொடர்புடைய கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் அளிக்கும் சலுகைகள், பிஎம்டபுள்யூ 3 சீரிஸ், 5 சீரிஸ் மற்றும் எக்ஸ்3 மாடல்கள் மீது கிடைக்கிறது.

கிடைக்கும் காலம்;

கிடைக்கும் காலம்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும் இந்த சலுகைகள், ஸ்டாக் உள்ளவரையோ அல்லது அக்டோபர் 31-ஆம் தேதி வரையோ கிடைக்கும்.

கிடைக்கும் நகரங்கள்;

கிடைக்கும் நகரங்கள்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும் சலுகைகள் மற்றும் ஆதாயங்கள், இந்தியா முழுவதும் சுமார் 30 நகரங்களில் கிடைக்கும்.

கடன் சலுகைகள்;

கடன் சலுகைகள்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம் வழங்கும் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், 7.9% என்ற குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வசதிகளை பெறலாம். மேலும், பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில், 40% வரை இஎம்ஐ தொகைகளை அளிக்கின்றனர்.

சிறந்த சலுகைகள்;

சிறந்த சலுகைகள்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், பிஎம்டபுள்யூ காரை வைத்திருக்கும் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. வழக்கமான சேவைகளை தாண்டி, பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், காம்ப்ளிமென்ட்ரி பிஎம்டபுள்யூ சர்வீஸ் இன்க்லூசிவ் பிளஸ் (complimentary BMW Service Inclusive Plus) மற்றும் பிஎம்டபுள்யூ ரிப்பேர் இன்க்லூசிவ் சர்வீஸ் பேக்கேஜ்கள் (BMW Repair Inclusive service packages) உள்ளிட்ட சர்வீஸ்களை அளிக்கின்றனர். பிஎம்டபுள்யூ நிறுவனம் வழங்கும் இச்சலுகைகள், 40,000 கிலோமீட்டர் அல்லது 3 ஆண்டுகளுக்கு செல்லும்.

பிற சலுகைகள்;

பிற சலுகைகள்;

பிஎம்டபுள்யூ இந்தியா நிறுவனம், முதல் ஆண்டுக்கு பூஜ்ஜியம் தேய்மானம் இன்சூரன்ஸ் (Zero depreciation insurance) அளிக்கிறது. மேலும், வாடிக்கையாளர்கள் உறுதியான பை-பேக் ஸ்கீம் (guaranteed buy-back scheme) எனப்படும் திரும்ப பெற்று கொள்ளும் சலுகையும் அளிக்கின்றனர். மேலும், இந்த பை-பேக் காலக்கட்டத்தை பொருத்து, வாடிக்கையாளர்கள் 65% வரையிலான தொகையை திரும்ப பெறலாம்.

போட்டி;

போட்டி;

இந்த பண்டிகை காலங்களின் போது, ஏறக்குறைய அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஏதேனும் சலுகைகளை அளித்து வருகின்றனர். அதிலும் சொகுசு கார் நிறுவனங்கள் எக்கசக்கமாக ஆதாயங்களையும், சலுகைகளையும் அள்ளி தருகின்றனர்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

பிற சுவாரஸ்யமான செய்திகள்;

4.5 மணி நேரத்தில் மும்பை டு நியூயார்க்... புதிய சூப்பர்சானிக் விமானம் தயாராகிறது!

இந்தியாவின் சொந்த பயணிகள் விமான கனவுக்கு அடிகோலிய ரஷ்ய விமானம்!

கபாலி சினிமாவின் விளம்பர பிரச்சார வாகனமாக மாறிய லம்போர்கினி கார்!

English summary
BMW India is giving deals and benefits for 2016 festive season. Offers and benefits are offered on BMW 3 Series, 5 Series, and X3 models. All these offers and benefits will be valid till stocks last or until October 31st. Customers can avail these offers and benefits in 30 cities pan India. Individuals availing finance options can get them in low-interest rate of 7.9 percent...
Story first published: Monday, October 10, 2016, 13:24 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more