சென்னையில் பிஎம்டபிள்யூ எம் கார்களை ஓட்டுவதற்கான பயிற்சி!

By Meena

சர்க்கஸ் கூடாரத்தில், பார் விளையாட்டுகள் அனைவரும் அறிந்த ஒன்று. அந்த இடத்தில் சர்க்கஸ் கலைஞர்கள் அரங்கேற்றும் மயிர் கூச்செரியும் வித்தைகளை கண்டு ரசித்திருக்கிறோம். திடீரென அந்த பார் விளையாட்டு வலைக்குள் நம்மை அனுமதிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

வித்தை காட்ட வேண்டாம், குறைந்தது அந்த கம்பிகளைப் பிடித்து தொங்க வேண்டும் என்றாவது நாம் ஆசைப்படுவோம் இல்லையா... இது மனித இயல்பு... பார்வையாளர்களாய் வெளியே இருந்து ரசித்த ஒரு விஷயத்தை, அந்த களத்துக்கு உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்று ஆர்வம் அனைவரிடமும் ஒளிந்திருக்கும்.

பிஎம்டபிள்யூ கார்

ரேஸ் டிராக்குகளில் நாமும் கார் ஓட்ட வேண்டும் என்ற ஆவலும் அதுபோலத்தான். பந்தய நோக்கம் அல்லாமல், ஓர் ஆசைக்காக சும்மாவாவது டிராக்கில் வண்டியை ஓட்டிப் பார்க்க வேண்டும் என நினைப்பது உண்டு. அந்த வாய்ப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கப் போகிறது.

எம் ஃபெர்பாமன்ஸ் டிரெய்னிங் எனப்படும் இந்த கார் டிரைவிங் பயிற்சி பிஎம்டபிள்யூ நிறுவனம் சார்பில் நடைபெறுகிறது. அந்நிறுவனத்தின் எம் சீரியஸ் ரக கார்கள், அதாவது எம் 3 செடான், எம் 4 கூப், எம் 5 செடான், எம் 6 கிரான் கூப், எக்ஸ் 5 எம், எக்ஸ் 6 எம் ஆகிய மாடல் கார்களை பந்தய டிராக்குகளில் ஓட்டி மகிழலாம்.

சென்னை, பெங்களூரு, தில்லி, புணே ஆகிய நான்கு நகரங்களில் இந்த பயிற்சி நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

ஜூலை 31-ஆம் தேதி, பெங்களூரின் தேனெஜா ஏரோஸ்பேஸ் அண்டு ஏவியேஷன் டிராக்கில் எம் பெர்ஃபாமன்ஸ் பயிற்சி நடக்கிறது.

அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் தில்லியில் உள்ள புத்தா இன்டர்நேஷனல் சர்க்கியூட் டிராக்கில் இந்த பயிற்சி நடைபெறும்.

செப்டம்பர் 21, 22-ஆம் தேதிகளில் சென்னையின் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கிலும், அக்டோபர் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் புணே அருகில் உள்ள ஆம்பி வேலி டிராக்கிலும் பிஎம்டபிள்யூ நிறுவனம் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது.

அந்த பந்தய டிராக்குகளில் கார்களை ஓட்டுபவர்கள் வித்தியாசமான மற்றும் சவாலானதொரு அனுபவத்தை சந்திப்பது நிச்சயம் என்று உறுதி அளித்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

உண்மைதான்... கார் பிரியர்களுக்கு இது புதுமையான விஷயமாக இருக்கும் என்றும் அறுதியிட்டுக் கூறலாம்...

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2016, 10:34 [IST]
English summary
BMW Launches M Performance Training Program In India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+