மினி கன்வெர்ட்டிபிள் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உத்தேசம்

Written By:

பிஎம்டபுள்யூ நிறுவனம், மினி கன்வெர்ட்டிபிள் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய உத்தேசித்துள்ளதாக தெரிவித்தது.

தங்கள் நிறுவனத்தின் மினி கன்வெர்ட்டிபிள் மாடலின் விற்பனை குறிப்பிட்ட அளவை தாண்டிய பிறகு, அதை இந்தியாவில் அசம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து, பிஎம்டபுள்யூ குரூப் இந்தியாவின் தலைவரான வான் சாஹ்ர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கும் போது பல்வேறு தகவல்களை வழங்கினார். அப்போது, மினி பிராண்ட் கன்வெர்ட்டிபிள் மாடலின் விற்பனையின் அளவுகளை வெகுவாக உயர்ந்த பிறகு, இதனை இந்தியாவில் அசம்பிள் செய்ய திட்டமிடுவோம். ஆனால், இது நடக்க சில ஆண்டுகள் ஆகலாம் என வான் சாஹ்ர் கூறினார்.

bmw-open-to-assembling-mini-convertibles-in-india-soon

எனினும், பிஎம்டபுள்யூ பிராண்டின் மதிப்பை குறைத்து, விற்பனையை கூட்டுவதில் உடன்பாடு இல்லை என வான் சாஹ்ர் கூறினார்.

உதாரணத்திற்கு பிரிமியம் பிராண்ட் என அடையாளபடுத்தி கொண்டு 1,000 கார்கள் விற்பதற்கு பதிலாக, மாஸ் பிராண்ட் என அடையாளபடுத்தி கொண்டு குறைந்த விலையில் அதிக கார்களை விற்றாலும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் எதுவும் இல்லை என வான் சாஹ்ர் தெரிவித்தார்.

இந்த கருத்துகளை, கோவாவில் நடந்த மினி கன்வெர்ட்டிபிள் அறிமுக நிகழ்ச்சியின் போது, வான் சாஹ்ர் பகிர்ந்து கொண்டார்.

English summary
BMW is very much open to carry on assembling Mini convertible in India, if sales of these cars cross a critical sales volume. While speaking to PTI, BMW Group India President Philipp von Sahr said that, We can look at local assembly here, when we reach a critical mass in sales. That can happen some years down the line. To know more, check here...
Story first published: Thursday, March 17, 2016, 19:47 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark