உலகின் மிகப்பெரிய பெட்ரோல் நிலையம் பற்றிய தகவல்கள்!

By Saravana

பெட்ரோல் நிரப்புவதற்கு வரிசையில் காத்திருக்க நேரிடும்போது, சிலருக்கு பிபி எகிறும். இதனால், சில தள்ளுமுள்ளுகளும் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. துரிதமாக பெட்ரோல் நிரப்பும் நோக்கில், அதிக பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்கள் உள்ள பெட்ரோல் நிலையங்களை நாடிச் செல்வதும் உண்டு.

அப்படி இருந்தும் பரபரப்பாள வேளைகளில் வரிசையில் நின்றுதான் போட வேண்டியிருக்கும். ஆனால், இதுபோன்ற எந்த டென்ஷனும் இல்லாமல், போனவுடன் பெட்ரோல் நிரப்புவதற்காக பல ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டிருக்கும், ஒரு பிரம்மாண்ட பெட்ரோல் நிலையத்தை பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணப் போகிறோம்.

 பக்கிஸ்

பக்கிஸ்

தப்பா நினைக்காதீங்க. அந்த பெட்ரோல் நிலையத்தின் பெயரே இதுதான். அதாவது, Buc-ee's என்ற பெயர் கொண்ட இந்த பெட்ரோல் நிலையத்தின் பிரம்மாண்டத்தை தொடர்ந்து காணலாம்.

அமைவிடம்

அமைவிடம்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணாத்தில் உள்ள நியூ பிரான்ஃபெல்ஸ் நகரில்தான் இந்த பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது.

பரப்பளவு

பரப்பளவு

இந்த பெட்ரோல் நிலையம் 18 ஏக்கர் பரப்பளவில் 67,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

இந்த பெட்ரோல் நிலையதில் ஒரே நேரத்தில் 60 வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் வசதி இருக்கிறது. 31 பணம் செலுத்துமிடங்களும், 1,000 கார்களை நிறுத்துவதற்கான இடவசதியும் உள்ளது.

குளிர்பான இயந்திரம்

குளிர்பான இயந்திரம்

வரும் வாடிக்கையாளர்களை இளைப்பாறும் விதத்தில், இந்த பெட்ரோல் நிலையம் முழுவதும் 80 குளிர்பான வினியோகிக்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டு இருக்கிறது. எனவே, அதற்கும் க்யூ நிற்க வேண்டியதில்லை.

சுடச்சுட...

சுடச்சுட...

சுவையான அசைவ உணவுகளை பெறுவதற்காக 24 மணிநேரமும் செயல்படும், சிறிய அளவிலான உணவு விற்பனை மையமும், இந்த பெட்ரோல் நிலையத்தின் மையத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்த பெட்ரோல் நிலையத்தில் 250 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட்

இந்த பெட்ரோல் நிலையத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றும் உள்ளது. பழங்கள், காய்கறி, பொம்மைகள் உள்ளிட்ட பலவற்றை இங்கே வாங்கிக் கொள்ள முடியும்

சுத்தமான ரெஸ்ட் ரூம்

சுத்தமான ரெஸ்ட் ரூம்

இந்த பெட்ரோல் நிலையத்தில் 83 கழிவறை மற்றும் குளியலறைகள் உள்ளன. உலகிலேயே மிகவும் சுத்தம், சுகாதாரமிக்க கழிவறைகளாக இவை குறிப்பிடப்படுகின்றன. 24 மணிநேரமும் சுத்தம் செய்வதற்கான பணியாளர்கள் உள்ளனர்.

கடமை உணர்ச்சி

கடமை உணர்ச்சி

ரொம்ப சுத்தமான ரெஸ்ட் ரூம்னு சொன்னதை காட்டியே ஆகணுமா? போட்டோ எடிட்டர் மவுரியாவின் கடமை உணர்ச்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

மிஸ் பண்ணிடாதீங்க

மிஸ் பண்ணிடாதீங்க

அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள், டெக்ஸாஸ் மாகாணாம், நியூ பிரான்ஃபெல்ஸ் நகரில் உள்ள இந்த பக்கிஸ் பெட்ரோல் நிலையத்திற்கு ஒரு விசிட் அடிக்க மறவாதீர். நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை தரும்.

உலகின் மிகப்பெரிய கார் பார்க்கிங் வளாகங்கள்

உலகின் மிகப்பெரிய கார் பார்க்கிங் வளாகங்கள்

Photo Credit: abc13

More from DriveSpark

Article Published On: Tuesday, March 15, 2016, 10:48 [IST]
English summary
check out the world's largest fuel station called Buc-ee's. Here are some fascinating facts about the place.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+