4 கதவுகள் கொண்ட செடானை உருவாக்க முயற்சியில் ஈடுபடும் புகாட்டி
உலக புகழ் பெற்ற கார் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி, அடுத்ததாக 4 கதவுகள் கொண்ட செடானை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.
ஃபிரான்ஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் புகாட்டி நிறுவனம், சமீத்தில் தான் சிரான் சொகுசு காரை அறிமுகம் செய்தது. இதையடுத்து, 4 கதவுகள் கொண்ட 4 கதவுகள் கொண்ட செடானை உருவாக்க உத்தேசித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த புகாட்டி நிறுவனத்தின் சீஇஓ வொல்ஃப்கேங் ட்யூர்ஹெய்மர், "4 கதவுகள் கொண்ட செடானை உருவாக்கும் ஆசையை எனது மனதில் இருந்து விலக்கி கொள்ள முடியவில்லை. அடுத்ததாக, 4 கதவுகள் கொண்ட செடானை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.

2009-ஆம் ஆண்டில், 16சி கேலிபியர் கான்செப்ட் காரை காட்சிபடுத்தும் போதே, புகாட்டி 4 கதவுகள் கொண்ட செடானை உருவாக்கும் திட்டம் கொண்டிருந்தது. இப்போது, மேம்படுத்தபட்ட 16சி கேலிபியர் கார் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது.
காரின் எடையை கூட்டிவிடும் என்ற ஒரே குழப்பத்தினால் தான், புகாட்டி நிறுவனம் ஹைப்ரிட் இஞ்ஜின் உபயோகிப்பது குறித்த யோசனை செய்து வருகிறது. "எனினும் ஹைப்ரிட் கார்களை உபயோகிக்கும் ஆசையை, வருங்காலத்தில் முற்றிலுமாக கைவிட முடியாது என வொல்ஃப்கேங் ட்யூர்ஹெய்மர் தெளிவுபடுத்தினார்.


Click it and Unblock the Notifications








