செவர்லே இந்தியா வழங்கும் கோடை கால சலுகைகள்

By Ravichandran

செவர்லே இந்தியா நிறுவனம், கோடை காலத்தை ஒட்டி அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது.

கோடைகாலம் துவங்கிவிட்டது. இந்த கோடைகாலத்தை செவர்லே இந்தியா நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான ஈர்க்ககூடிய வகையிலான சலுகைகளையும், ஆதாயங்களையும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் சிறந்த டீல்கள் என்ற வகையில், 3 மாடல்களின் மீது மட்டும் சலுகைகள் கிடைக்கிறது.

செவர்லே பீட் ஹேட்ச்பேக் மீது 77,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கபடும். மேலும், பீட் மாடலுக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் கிடைக்கிறது. இந்த பீட் மாடல் மீது செவர்லே நிறுவனம், முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸை இலவசமாக வழங்குகிறது. கூடுதலாக, செவர்லே பீட் ஹேட்ச்பேக் மீது 3 வருடம் அல்லது 40,000 கிலோமிட்டருக்கான பூஜ்ஜியம் பராமரிப்பு சலுகையும் வழங்கபடுகிறது.

செவர்லே செயில் காம்பேக்ட் செடான் மீது 60,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது. செவர்லே செயில் காம்பேக்ட் செடான் மீது கேஷ் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் செவர்லே நிறுவனம், செவர்லே செயில் காருக்கு முதல் வருடத்திற்கான இன்சூரன்ஸையும் இலவசமாக வழங்குகிறது.

chevrolet-india-offers-and-benefits-for-2016-april-summer

செவர்லே எஞ்ஜாய் எம்பிவி மீது 60,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது. செவர்லே எஞ்ஜாய் எம்பிவி காருக்கும் கேஷ் போனஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகிய சலுகைகள் கிடைக்கிறது. மேலும், இந்த செவர்லே எஞ்ஜாய் எம்பிவி மீது முதல் ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸை இலவசமாக கிடைக்கும்.

அனைத்து சலுகைகளும், ஆதாயங்களும் ஏப்ரல் 30 2016 வரை மட்டுமே கிடைக்கும். செவர்லே நிறுவனம் வழங்கும் இந்த அனைத்து சிறப்பு சலுகைகளும் இந்தியா முழுவதும் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 14, 2016, 8:00 [IST]
English summary
Chevrolet India is offering several exciting and interesting offers to its customers. The Offers are given in form benefits, first-year free insurance, zero maintenance cost, Cash bonus, Exchange bonus and so on. All these benefits and offers are provided on Beat, Sail and Enjoy Models until April 30, 2016. To know more about these offers and benefits, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+