செப்டம்பரில் செவர்லே கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள்

By Ravichandran

செவர்லே இந்தியா நிறுவனம், இந்த செப்டம்பர் மாதத்தில் தங்களின் தயாரிப்புகள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்குகின்றனர். இந்தியாவில் பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி, ஆட்டோமொபைல் நிறுவனங்கள், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது அல்லது தங்களின் தயாரிப்புகள் மீது சலுகைகள் வழங்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் செவர்லே நிறுவனம், தங்களின் தயாரிப்புகள் மீது வழங்கும் சலுகைகள் குறித்த தகவல்களை, இனி தெரிந்து கொள்ளலாம்.

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

சலுகைகள் கிடைக்கும் மாடல்கள்;

செவர்லே இந்தியா நிறுவனம், குரூஸ் பிரிமியம் செடான், செயில் காம்பேக்ட் செடான், பீட் ஹேட்ச்பேக், என்ஜாய் எம்பிவி, மற்றும் தவேரா ஆகிய 5 மாடல்கள் மீது இந்த சலுகைகளை வழங்குகின்றனர்.

நிபந்தனைகள்;

நிபந்தனைகள்;

செவர்லே இந்தியா நிறுவனம் வழங்கும் 1,00,000 ரூபாய் மதிப்பிலான இந்த சலுகைகள், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை மட்டுமோ அல்லது சலுகைகள் உள்ளவரை மட்டுமோ தான் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூஸ் பிரிமியம் செடான்;

குரூஸ் பிரிமியம் செடான்;

செவர்லே இந்தியா நிறுவனம் வழங்கும் குரூஸ் பிரிமியம் செடான் மீது, அதிகப்படியாக 1,00,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது. இந்த 1,00,000 ரூபாயில் டீலர்ஷிப்கள், 50,000 ரூபாயை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவிலும், 50,000 ரூபாயை கேஷ் ஃபெனிபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் வடிவிலும், வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றனர்.

செயில் காம்பேக்ட் செடான்;

செயில் காம்பேக்ட் செடான்;

செயில் காம்பேக்ட் செடான் மீது செவர்லே இந்தியா நிறுவனம், 65,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களை வழங்குகிறது. இந்த 65,000 ரூபாயில் டீலர்ஷிப்கள், 20,000 ரூபாயை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவிலும், 20,000 ரூபாயை கேஷ் ஃபெனிபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் வடிவிலும், வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு டீலர்ஷிப்கள் முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸும் அளிக்கின்றனர்.

பீட் ஹேட்ச்பேக்;

பீட் ஹேட்ச்பேக்;

செவர்லே இந்தியா நிறுவனம், பீட் ஹேட்ச்பேக் மீது 62,000 ரூபாய் வரையிலான சலுகைகள் அளிக்கின்றனர். டீலர்ஷிப்கள் இந்த 62,000 ரூபாயில், 24,000 ரூபாயை கேஷ் ஃபெனிபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் வடிவிலும், 20,000 ரூபாயை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவிலும், வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். மேலும், வாடிக்கையாளர்களுக்கு டீலர்ஷிப்கள் முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸும் தருகின்றனர்.

என்ஜாய் எம்பிவி;

என்ஜாய் எம்பிவி;

என்ஜாய் எம்பிவி மீது செவர்லே இந்தியா நிறுவனம், 55,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களை அளிக்கின்றனர். டீலர்ஷிப்கள், வாடிக்கையாளர்களுக்கு முதல் வருடத்திற்கான இலவச இன்சூரன்ஸ் அளிக்கின்றனர். மேலும், இந்த 55,000 ரூபாயில், 20,000 ரூபாயை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவிலும், 7,500 ரூபாயை கேஷ் ஃபெனிபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் வடிவிலும் வழங்கப்படுகிறது.

தவேரா;

தவேரா;

ஆச்சர்யமூட்டும் வகையில், தவேரா மாடலும், செவர்லே இந்தியா நிறுவனம் வழங்கும் சலுகைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக செவர்லே தவேரா மீது 40,000 ரூபாய் வரையிலான சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த 40,000 ரூபாயில், 15,000 ரூபாயை எக்ஸ்சேஞ்ச் போனஸ் வடிவிலும், 25,000 ரூபாயை கேஷ் ஃபெனிபிட் எனப்படும் ரொக்க ஆதாயம் வடிவிலும் டீலர்ஷிப்கள் வழங்குகின்றன.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

எனவே, செவர்லே நிறுவனத்தின் கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு அருகில் உள்ள செவர்லே டீலர்ஷிப்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படும் நேரங்களில், இவற்றை பற்றி ஆராய்ந்து அதன் பின்னர், கார்களை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

ஆசிரியர் தினத்திற்கு பிரத்யேக சலுகைகள் வழங்கும் செவர்லே

பொலிவு கூட்டபட்ட புதிய செவர்லே தவேரா உருவாக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்

செவர்லே எசென்சியா மாடலின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியது

More from DriveSpark

Article Published On: Thursday, September 15, 2016, 14:51 [IST]
English summary
Chevrolet India is offering maximum benefits worth up to Rs. 1 lakh ahead of this festive season. Cruze premium sedan, Sail compact sedan, Beat hatchback, Enjoy MPV and Chevrolet Tavera are Five models from Chevrolet lineup, which are bundled with offers and benefits for September. These offers and benefits are valid only until 30th September, on limited stocks. To know more, check here...
மேலும்... #செவர்லே #chevrolet
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+