2016 செவர்லே க்ரூஸ் செடானின் விலை அதிரடியாக குறைப்பு - முழு விவரங்கள்
2016 செவர்லே க்ரூஸ் செடான் காரின் விலைகளை, செவர்லே இந்தியா நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.
குறைக்கபட்டுள்ள செவர்லே க்ரூஸ் மாடல்கள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் தெரிந்து கொள்ளலாம்.

விலைகுறைப்பிற்கான காரணம்;
செவர்லே இந்தியா நிறுவனம், சமீபத்தில் தான் தங்கள் நிறுவனத்தின் 2016 செவர்லே க்ரூஸ் செடானை அறிமுகம் செய்தது.
இதன் போட்டி நிறுவன மாடல்களான ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா ஆகிய மாடல்களுடன் சரிக்குசரியாக போட்டியிடவே இவ்வாறு விலை குறைப்பு செய்யபட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

எவ்வளவு வித்தியாசம்?
2016 செவர்லே க்ரூஸ் செடான், ஸ்கோடா ஆக்டேவியா மாடலை காட்டிலும் சுமார் 4.78 லட்சம் ரூபாய் குறைவான விலையிலும், ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா மாடலை காட்டிலும் 3.23 லட்சம் ரூபாய் குறைவான விலையிலும் கிடைக்கிறது.

பணத்திற்க்கான மதிப்பு;
செவர்லே இந்தியா நிறுவனம், 2016 செவர்லே க்ரூஸ் எக்சிக்யூட்டிவ் செடானை வாங்க செய்யபடும் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கி, தங்கள் கார்களின் விற்பனைகளையும் கூட்ட நினைக்கிறது.
2016 செவர்லே க்ரூஸ் எக்சிக்யூட்டிவ் செடான், இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தான் அறிமுகம் செய்தது.

இஞ்ஜின்;
புதிய 2016 க்ரூஸ் எக்சிக்யூட்டிவ் செடான், 2.0 லிட்டர் விசிடிஐ டீசல், டர்போசார்ஜ்ட் இஞ்ஜின் கொண்டுள்ளது.

திறன்;
புதிய 2016 க்ரூஸ் செடானின் இஞ்ஜின், 163.72 பிஹெச்பி-யையும், உச்சபட்சமாக 380 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
புதிய 2016 க்ரூஸ் செடானின் இஞ்ஜின், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டுள்ளது.

தோற்றம்;
பொலிவு கூட்டபட்ட 2016 செவர்லே க்ரூஸ் செடான், புதிய ஃப்ரண்ட் ஃபேஷியா கொண்டுள்ளது. ரியர் பகுதியில் மேம்படுத்தபட்ட லிப் ஸ்பாய்ளர் மற்றும் புதிய எக்ஸ்ஹாஸ்ட் அவுட்லெட்கள் கொண்டுள்ளது.
மேலும், இந்த 2016 செவர்லே க்ரூஸ் செடான், புதிய புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் எல்ஈடி டிஆர்எல்கள் (டே டைம் ரன்னிங் லைட்கள்) கொண்டுள்ளது.

இண்டீரியர்;
2016 செவர்லே க்ரூஸ் செடானின் இண்டீரியரில், 7-இஞ்ச் மை-லிங்க் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது.
இந்த மை-லிங்க் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் ரேடியோ, க்ரேஸ் நோட் மற்றும் சிரி ஐய் ஃப்ரீ கம்பேட்டிபிளிட்டி வசதிகள் கொண்டுள்ளது.
மேலும், இந்த மை-லிங்க் ரியர் விஷன் கேமரா வசதியுடன் இணைக்கபட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகள்;
பாதுகாப்பு வசதிகளை பொருத்த வரை, இந்த பொலிவு கூட்டபட்ட 2016 செவர்லே க்ரூஸ் செடான் ட்யூவல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், 2 சைட் ஏர்பேக்குகள் கொண்டுள்ளது.
மேலும், எலக்ட்ரானிக் சென்ஸார்கள் கொண்ட ஏபிஎஸ், பாஸ்ஸிவ் எண்ட்ரீ பாஸ்ஸிவ் ஸ்டார்ட், இஞ்ஜின் மொபலைஸர், சைல்ட் சீட் புரொவிஷன், ஆண்டி-தெஃப்ட் அலார்ம் மற்றும் புரோகிராம் செய்யகூடிய ஆட்டோ டோர் லாக்குகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டுள்ளது.

அறிமுகத்தின் போது இருந்த விலைகள்;
செவர்லே க்ரூஸ் எல்டி (எம்டி) - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - 14.68 லட்சம் ரூபாய்
செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (எம்டி) - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - 16.75 லட்சம் ரூபாய்
செவர்லே க்ரூஸ் எல்டிஇசட்(ஏடி) - ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு - 17.81 லட்சம் ரூபாய்

செவர்லே க்ரூஸ் எல்டி (எம்டி) - தற்போதைய விலை;
செவர்லே க்ரூஸ் எல்டி (எம்டி) - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - பழைய விலை - 14.68 லட்சம் ரூபாய்
செவர்லே க்ரூஸ் எல்டி (எம்டி) - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - தற்போதைய விலை - 13.95 லட்சம் ரூபாய்
வித்தியாசம் - 73,000 ரூபாய்

செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (எம்டி) - தற்போதைய விலை;
செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (எம்டி) - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - பழைய விலை - 16.75 லட்சம் ரூபாய்
செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (எம்டி) - மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு - தற்போதைய விலை - 15.95 லட்சம் ரூபாய்
வித்தியாசம் - 80,000 ரூபாய்

செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (ஏடி)- தற்போதைய விலை;
செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (ஏடி) - ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு - பழைய விலை - 17.81 லட்சம் ரூபாய்
செவர்லே க்ரூஸ் எல்டிஇசட் (ஏடி) - ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு - தற்போதைய விலை - 16.95 லட்சம் ரூபாய்
வித்தியாசம் - 86,000 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;
2016 செவர்லே க்ரூஸ் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
செவர்லே க்ரூஸ் செடான் கார் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!
க்ரூஸ் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








