செவர்லே செயில் செடானுக்கு 0 ஸ்டார் ரேட்டிங்
செவர்லே செயில் செடான், லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட், எந்த 0 ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றது.
செவர்லே செயில் செடான் குறித்தும், லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட் குறித்தும் வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

செவர்லே செயில்...
செடான் வகையை சேர்ந்த செவர்லே செயில், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் செவர்லே பிராண்டின் கீழ் தயாரித்து வழங்கபடுகிறது.
செவர்லே செயில், இந்திய வாகன சந்தைகளில் அதற்கென ஒரு தனிபட்ட இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

கிராஷ் டெஸ்ட்;
எந்த ஒரு தயாரிப்புகளும், விபத்து நிகழும் நேரத்தில் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது என்பதை ஆராய, கிராஷ் டெஸ்ட்களுக்கு உட்படுத்தபடுகிறது.
அதன் பிறகு, சோதிக்கபடும் வாகனங்களுக்கு 1 ஸ்டார், 2 ஸ்டார் என மதிப்பீடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில், குளோபல் என்கேப் (GLOBAL NCAP), ஆசியான் என்கேப் (ASEAN NCAP), யூரோ என்கேப் (EURO NCAP), லேட்டின் என்கேப் (Latin NCAP) என பல்வேறு வகையிலான கிராஷ் டெஸ்ட்கள் உள்ளன.

லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட்;
லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட் என்பது தென் அமெரிக்க நாடுகளை மையபடுத்தி நடத்தபடும் கிராஷ் டெஸ்ட் ஆகும்.
இந்த செவர்லே செயில் செடான், சமீபத்தில் லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தபட்டது.

செவர்லே செயில் - கிராஷ் டெஸ்ட்;
செவர்லே செயில் செடான், சமீபத்தில் தான் லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தபட்டது.
ஜெனரல் இந்த லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தபடுத்தபடும் போது, ஏர்பேக்குகள பொருத்தப்படவில்லை.

செயில் பெற்ற மதிப்பீடு;
லேட்டின் என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் செவர்லே செயில் செடான், 0-ஸ்டார் மதிப்பீடு மற்றுமே பெற்றது.
செவர்லே செயில், முன் இருக்கையில் அமர்ந்துள்ள வயது அதிகம் கொண்டவர்களுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 0-ஸ்டார் மதிப்பீடும், பின் இருக்கையில் அமர்ந்துள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு விஷயத்தில் 2 ஸ்டார் மதிப்பீடும் பெற்றது.

இந்தியாவில் செவர்லே...
தற்போதைய நிலையில், செவர்லே நிறுவனம் சார்பாக இந்தியாவில் செயில் செடான் மற்றும் பீட் ஆகிய மாடல்கள் வழங்கபடுகிறது.
இந்த 2 மாடல்களும், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ்;
செவர்லே செயில் செடான், மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வுடன் மட்டுமே கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏஎம்டி தேர்வு கொண்ட மாடல் கூட வழங்கபடுவதில்லை.

பாதுகாப்பு அம்சங்கள்;
செவர்லே செயில் செடான் காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. செயில் செடானில், ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், இபிடி எனப்படும் எலக்ட்ரானிக் பிரேக்-ஃபோர்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
துரதிர்ஷ்டவசமாக இந்த அனைத்து பாதுகாப்பு அம்சங்களும், டாப் எண்ட் வேரியண்ட்டில் மட்டுமே வழங்கபடுகிறது.

அடுத்த நடவடிக்கை;
செவர்லே செயில் செடான், 0-ஸ்டார் மதிப்பீடு மட்டுமே பெற்றதால், குளோபல் என்கேப் அமைப்பு ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்த பிரச்னை குறித்து கவனிக்க உத்தரவு வழங்கியுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

பாதிப்பு;
செவர்லே செயில் செடான், 0-ஸ்டார் மதிப்பீடு பெற்றுள்ளதால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த மாடலை அமெரிக்க சந்தைகளிலும், ஐரோப்பிய வாகன சந்தைகளிலும் விற்பது சிக்கலாக விளங்கும்.
பாதுகாப்பு ஒழுங்கு முறைகளில் சற்று லத்தின் அமெரிக்க ஒழுங்கு முறைகள் சற்று தளர்வானது என்பது குறிப்பிடதக்கது.

இதர தொடர்புடைய செய்திகள்;
பஜாஜ் கியூட் குவாட்ரிசைக்கிளுக்கு யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில், 1 ஸ்டார் ரேட்டிங்
க்ராஷ் டெஸ்ட்டில் 'மேட் இன் இந்தியா' ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு 4 ஸ்டார் ரேட்டிங்!
கிராஷ் டெஸ்ட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








