மோசமான வானிலை: 2016 டக்கார் ராலியின், ஸ்டேஜ் 1 ரத்து
2016 டக்கார் ராலியின், ஸ்டேஜ் 1 (நிலை 1) ரத்து செய்யபட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக, டக்கார் ராலி பந்தயத்தின் ஸ்டேஜ் - 1 ரத்து செய்யபட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் சவாலான, ஆபத்துக்கள் நிறைந்த ராலி பந்தயமாக டக்கார் ராலி கருதப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான டக்கார் ராலியின் ஸ்டேஜ்-1 மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்டது.
இன்று இடி மின்னலுடன் கூடிய மழையினால், நிகழ்ச்சி நடத்துபவர்கள் இந்த ராலியின் துவக்கத்தை 30 நிமிடங்கள் ஒத்தி வைத்தனர். இதையடுத்து, நிற்காத மழையினால், மேலும் 30 நிமிடங்களுக்கு ஒத்தி வைத்தனர். கடைசியில், இன்று நிகழ இருந்த டக்கார் ராலியின் ஸ்டேஜ் 1 ரத்தாகியது.
2016 டக்கார் ராலியின், ஸ்டேஜ் 1 பந்தயத்தை பந்தய இயக்குனர் எட்டியன் லவிங்க்ன் ரத்து செய்வதாக அறிவித்தார். ஸ்டேஜ் 1 ரத்து செய்யபட்ட பின், லிங்க் செக்ஷன் விதிகளின் படி, போட்டியாளர்கள் வில்லா கார்லோஸ் பாஸ் என்ற இடத்திற்கு அனுப்ப பட்டனர். மோட்டார்சிக்கிள்களும், குவாட்களும் கான்வாய் மூலம் அனுப்பபட்டனர். ஆனால், கார்களும், டிரக்குகளும் தாங்களாகவே பயணிக்க அனுமதிக்கபட்டனர்.

தாழ்வான உயரத்தில் மேகங்கள் சென்று கொண்டிருக்கும் போது, ரேஸ் நடத்துவது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இதனால், வழிகாட்டுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான ஹெலிகாப்டர்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது., போட்டியாளர்களை சரியாக வழிநடத்த முடியாத நிலை நீடித்து வந்தது குறிப்பிடதக்கது.
டக்கார் ராலி பந்தயத்தில் இரண்டாவது ஆண்டாக இந்தியாவின் பிரபல பைக் பந்தய வீரர் சிஎஸ்.சந்தோஷ் பங்கேற்றிருக்கிறார். கடந்த ஆண்டு தர வரிசைப்பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்து அசத்திய சிஎஸ். சந்தோஷே இந்த ஆண்டும் மிக முக்கிய இடத்தை பெறுவார் என இந்திய பந்தய ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications








