டக்கார் ராலியின் ஸ்டேஜ் 2 - இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 86-வது இடத்தில் நிறைவு செய்தார்

By Ravichandran

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 2 ( நிலை 2)-ல், இந்தியாவின் சி.எஸ்.சந்தோஷ் 86-வது இடத்தை அடைந்தார். 2016-ஆம் ஆண்டின் டக்கார் ராலி பதிப்பு, மிகவும் எதிர்பார்க்கபட்ட மற்றும் மிகவும் கடினமான ராலி பந்தயம்.

டக்கார் ராலியின் ஸ்டேஜ் 2 குறித்த, இன்றைய முக்கிய நிகழ்வுகளை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சி.எஸ்.சந்தோஷ் குறித்த தகவல்கள்;

சி.எஸ்.சந்தோஷ் குறித்த தகவல்கள்;

2016 டக்கார் ராலியில் பங்கேற்கும் ஒரே இந்தியராக, சி.எஸ்.சந்தோஷ் விளங்குகிறார். இவர், இன்று நடந்த ஸ்டேஜ் 2-ல், 86-வது இடத்தில் நிறைவு செய்தார்.

சி.எஸ்.சந்தோஷ், ஸ்டேஜ் 2-ல், 127-வது இடத்தில் இருந்து துவக்கினார். இருந்தும் 86 இடத்திற்கு முன்னேறினார். தனது சுஸுகி மோட்டார்சைக்கிளில் இருந்த மெக்கானிக்கல் மற்றும் நம்பகதன்மை பிரச்னைகளால், கொஞ்சம் சிரமங்கள் மேற்கொள்ள வேண்டி இருந்தது. ஒட்டுமொத்த நிலைபாடுகளில், சி.எஸ்.சந்தோஷ் 95-வது இடத்தில் உள்ளார்.

முன்னோடியாக விளங்குபவர்கள்;

முன்னோடியாக விளங்குபவர்கள்;

மோட்டார்சைக்கிள் பிரிவில், கேடிஎம் மோட்டார்சைக்கிள் உபயோகிக்கும் டோபி பிரைஸ் முன்னோடியாக உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக, ஹஸ்க்வர்னா இயக்கும் ரூபென் ஃபாரியா-வும், அதற்கு அடுத்தபடியாக கேடிஎம் இயக்கும் ஸ்டெஃபான் ஸ்விட்கோ-வும் உள்ளனர்.

ஸ்டேஜ் 2-லும், மோசமான வானிலை பெரும் பாதிப்புகளை உண்டாக்கியது. கடும் மழை காரணமாக, 450 கிலோமீட்டர் தூரம் என்ற அளவு கொண்டிருந்த ஸ்டேஜ் 2, சுமார் 97 கிலோமீட்டர் தூரம் குறைக்கபட்டிருந்தது.

இன்னல்கள் எதிர்நோக்கிய ஜோன் பார்ரெடா;

இன்னல்கள் எதிர்நோக்கிய ஜோன் பார்ரெடா;

ஸ்பெயின் நாட்டு ரைடர் ஜோன் பார்ரெடா, ஸ்டேஜ் 2-ல் முன்னோடியாக இருந்தார். சேற்றில் சிக்கிய ஜோன் பார்ரெடா சில இன்னல்களை எதிர் கொண்டார்.

ஜோன் பார்ரெடா இறுதியில் ஸ்டேஜ் 2-ல், 7-வது இடத்திலும், ஒட்டுமொத்த நிலைபாடுகளில், 6-வது இடத்திலும் நிறைவு செய்தார்.

சுஸுகி மோட்டார்சைக்கிளுடன் அவதியுற்ற சி.எஸ்.சந்தோஷ்;

சுஸுகி மோட்டார்சைக்கிளுடன் அவதியுற்ற சி.எஸ்.சந்தோஷ்;

இந்திய ரைடரான சி.எஸ்.சந்தோஷ், நல்ல முன்னேற்றம் கண்டு 78-வது இடத்திற்கு முன்னேறினார். ஆனால், ஸ்டேஜ் 2-ன் இறுதியில், ஒட்டுமொத்த நிலைபாடுகளில் 95-வது இடத்திற்கு சரிந்து விட்டார்.

அவரின் சுஸுகி ஆர்எம்இசட் மோட்டார்சைக்கிள், உச்சபட்ச வேகம் உள்ளிட்ட சில பிரச்னைகளை எதிர்கொண்டது. இந்த கோளாறுகளை ராலியின் பாதியில் சரி செய்து கொண்டு, அதன் பின் தனது பந்தயத்தை மீண்டும் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

மோட்டார்சைக்கிள்;

1) டோபி பிரைஸ், (ஆஸ்திரேலியா), கேடிஎம் மோட்டார்சைக்கிள்

2) ரூபென் ஃபாரியா, (போர்சுகல்), ஹஸ்க்வர்னா

3) ஸ்டெஃபான் ஸ்விட்கோ, (ஸ்லோவாகியா), கேடிஎம்

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

குவாட்;

குவாட் பிரிவில், யமாஹா ரைடர்கள் முன்னோடியாக விளங்குகின்றனர். இக்னாஸியோ கஸாலே முதல் இடத்திலும், பிரையன் பரக்வநாத் 2-வது இடத்திலும், அலெஜாண்ட்ரோ பேட்ரோனெல்லி 3-வது இடத்திலும் உள்ளனர்.

1) இக்னாஸியோ கஸாலே, (சிலி), யமஹா

2) பிரையன் பரக்வநாத், (தென் ஆஃப்ரிகா), யமஹா

3) அலெஜாண்ட்ரோ பேட்ரோனெல்லி, (அர்ஜண்டினா), யமஹா

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

கார்;

1) செபாஸ்டியன் லோப், (பிரான்ஸ்), பியூகாட்

2) ஸ்டெஃபான் பீட்டர்ஹன்செல், (பிரான்ஸ்),

3) விளாடிமிர் வசில்யெவ், (ரஷ்யா), டொயோட்டா

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

டக்கார் ராலி - ஸ்டேஜ் 2 முடிவுகள்;

டிரக்;

1) ஹான்ஸ் ஸ்டேஸி, (நெதர்லாந்து), எம்ஏஎன்

2) பீட்டர் வெர்ஸ்லூயிஸ், (நெதர்லாந்து), எம்ஏஎன்

3) ஜெரார்ட் டீ ரூய், (நெதர்லாந்து), ஐவீஇசிஓ (ஐவிக்கோ)

More from DriveSpark

Article Published On: Tuesday, January 5, 2016, 15:03 [IST]
English summary
Dakar Rally 2016 related updates are presented to you. One and only Indian Rider CS Santosh is also participating in Dakar Rally 2016. CS Santosh commenced the race in the 127th place. After lots of struggles, he managed to finish the Stage 2 in the 86th position. CS Santosh is in the 95th position in the overall standings.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+