டட்சன் கோ மற்றும் டட்சன் கோ+ ஸ்பெஷல் எடிஷன்கள் இந்தோனேஷியாவில் அறிமுகம்

By Ravichandran

டட்சன் நிறுவனம் வழங்கும் டட்சன் கோ மற்றும் டட்சன் கோ+ மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

டட்சன் கோ மற்றும் டட்சன் கோ+ மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஸ்பெஷல் எடிஷன்;

ஸ்பெஷல் எடிஷன்;

டட்சன் கோ மற்றும் டட்சன் கோ+ மாடல்கள், டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் மற்றும் டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் என்ற பெயரில் இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இந்த 2 மாடல்களும், டட்சன் கோ+ மற்றும் கோ+ பேன்கா டி-ஸ்டைலை அடிப்படையாக கொண்டுள்ளது.

லிமிடெட் எடிஷன்;

லிமிடெட் எடிஷன்;

டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் மற்றும் டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் மாடல்களில், லிமிடெட் எடிஷன் மாடல்களாக தயாரிக்கபட்டுள்ளன.

இந்த 2 மாடல்களிலும், சரியாக தலா 500 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்;

மாற்றங்கள்;

டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் மற்றும் டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் மாடல்களில், ஏராளமான சிறு சிறு மாற்றங்கள் செய்யபட்டுள்ளது.

இவற்றில் ஏரோ பாடி கிட், குரோம் பூச்சுடன் விரிவாக்கப்பட்ட ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர்கள் சேர்க்கபட்டுள்ளது. மேலும், கோ மாடலில், ஃபோ கார்பன் ஃபைபர் ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் குரோம் எக்ஸ்ஹாஸ்ட் டிப்கள் சேர்க்கபட்டுள்ளது.

இன்டீரியர்;

இன்டீரியர்;

டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் மற்றும் டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் மாடல்களின் உட்புறத்தில், பீஜ் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஒருங்கிணைக்கப்பட்ட ரிவர்ஸ் கேமரா உடைய சிங்கிள் டிஐஎன் மியூசிக் பிளேயர், ட்வீட்டர் செட்கள், ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் சேர்க்கபட்டுள்ளது.

மெக்கனிக்கல் அம்சங்கள்;

மெக்கனிக்கல் அம்சங்கள்;

மெக்கனிக்கல் அம்சங்கலின் படி, டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் மற்றும் டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் மாடல்கள், 3 சிலின்டர்கள் உடைய 1.2 லிட்டர் இஞ்ஜின் கொண்டுள்ளது.

இந்த இஞ்ஜின் 68 பிஹெச்பியையும், 104 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.

இந்த 2 மாடல்களின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தான் முன் சக்கரங்களுக்கு பவர் கடத்தப்படுகிறது.

விலை;

விலை;

டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் - Rp 126 மில்லியன் ((126 மில்லியன் ருபையா) - இந்தியா மதிப்பில் 6.34 லட்சம் ரூபாய்)

டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் - Rp 113.4 மில்லியன் ((113.4 மில்லியன் ருபையா) - இந்தியா மதிப்பில் 5.70 லட்சம் ரூபாய்)

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

இந்திய வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக, அதிகமான பிரத்யேக அம்சங்கள் இருந்தால் அதிக சந்தோஷத்தை அளிக்கும்.

அந்த வகையில், எக்கசக்கமான அம்சங்கள் கொண்ட டட்சன் கோ பேன்கா (Panca) ஸ்பெஷல் வெர்ஷன் மற்றும் டட்சன் கோ+ பேன்கா ஸ்பெஷல் வெர்ஷன் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமா இல்லையா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 23, 2016, 7:03 [IST]
English summary
Datsun has launched special edition model of their Datsun GO and GO+ in Indonesia with the names Datsun Go+ Panca Special Version and GO Panca Special Version. Both models are based on Datsun GO+ and the GO Panca T-Style. Both these Special Version models will be made in limited numbers - 500 units exact in each models. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+