டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், இந்தியாவில் ஜூன் 1-ல் விற்பனைக்கு அறிமுகம்
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், இந்தியாவில் ஜூன் 1-ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யபட உள்ளது.
விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யபட உள்ள, டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்வோம்.

டட்சன் ரெடி-கோ...
உற்பத்தி நிலையிலான டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம், சமீபத்தில் புது டெல்லியில் நடைபெற்றது.
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம் வழங்கும் டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், ரெனோ க்விட் உருவாக்கபட்டுள்ள அதே ஃப்ளாட்பார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.
இந்திய வாகன சந்தைகளில், மிதமான விலையில் விற்கபடும் கார்களில், டட்சன் ரெடி-கோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இஞ்ஜின்;
ரெனோ க்விட் மாடலில் உபயோகிக்கபடும் அதே 800 சிசி இஞ்ஜின் தான், இந்த டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கிலும் பொருத்தபடுகிறது.
ஆனால், இந்த மாடலுக்கு ஏற்றவாறு இதன் இஞ்ஜினின் ட்யூனிங் மாற்றபட்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டுள்ளது.
இதன் மூலம் முன் சக்கரங்களுக்கு, பவர் மற்றும் டார்க் கடத்தபடுகிறது.

இலக்கு வாடிக்கையாளர்கள்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக் காரின் இலக்கு வாடிக்கையாளர்கள் 25 முதல் 35 வயதிற்கு இடையில் உள்ளவர்களாக உள்ளனர்.
இதன் டிசைன் அம்சங்களும், இவர்களை ஈர்க்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், 185 மில்லிமீட்டர் என்ற அளவிலான கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது.
இதனால், சரியில்லாத சாலைகளில் பயணிக்கும் போது கூட, உள்ளே அமர்ந்து செல்லும் பயணிகள் எந்த விதமான அதிர்வுகளையும் உணரும் வாய்ப்புகள் இருக்காது என அறிவிக்கபட்டுள்ளது.

அறிமுகம்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், ஜூன் 1-ஆம் தேதி அறிமுகம் செய்யபடும் என தெரிவிக்கபட்டுள்ளது.

புக்கிங்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் புக்கிங் தற்போது துவங்கி ஏற்று கொள்ளபட்டு வருகுகிறது.
இந்தியா முழுவதும் பரவி உள்ள 217 நிஸான் ஷோரூம்கள் இந்த புக்கிங் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

உற்பத்தி;
ரெனோ நிறுவனத்தின் க்விட் காரை போல், நிஸான் வழங்கும் டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கிற்கு அறிமுகம் செய்யபட்ட உடன் எக்கசக்கமான டிமாண்ட் எழும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதை சமாளிக்கும் வகையில், நிஸான் மற்றும் டட்சன் இந்த ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உற்பத்தியை கூட்ட உள்ளனர்.

போட்டி;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், இந்திய வாகன சந்தைகளில் அறிமுகம் செய்யபடும் போது, மாருதி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக், சுமார் 2.5 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யபடலாம்.
இந்த நிலையில், இந்திய வாகன சந்தைகளில், மிகவும் விலை குறைந்த மாடல்களில் ஒன்றாக டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கும் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம் டெல்லியில் நடைபெற்றது
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் - முழு தகவல்கள்
டட்சன் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








