டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம்
மிதமான விலை கொண்ட கார்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், பிராந்திய அளவில் பெங்களூருவில் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் ரெடி கோ...
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் டட்சன் நிறுவனம், தங்களின் டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கை இந்திய அளவிலும், பிராந்திய அளவிலும் ஆங்காங்கே அறிமுகம் செய்து வருகின்றனர்.
டட்சன் ரெடி கோ, ரெனோ க்விட் உருவாக்கபட்டுள்ள அதே ஃப்ளாட்பார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் உலகளாவிய அறிமுகம், ஏப்ரல் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது.

3-வது மாடல்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், டட்சன் நிறுவனம் இந்தியாவில் வழங்கும் 3-வது கார் மாடல் ஆகும்.
முன்னதாக, டட்சன் நிறுவனம், கோ ஹேட்ச்பேக் மற்றும் கோ+ எம்பிவியை அறிமுகம் செய்திருந்தனர்.

ஸ்டைலிங்;
2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காணப்பட்ட கான்செப்ட் நிலை டட்சன் ரெடி கோ மாடளுக்கும், தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கும், குறிப்பிடப்படும்படியான மாற்றங்கள் எதுவும் இல்லை.
டட்சன் பேட்ஜ் பொருத்தபட்டுள்ள டிராபெசாய்டல் கிரில்லின் 2 பக்கத்திலும், ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் பொருத்தபட்டுள்ளன.
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் கிரில்லின் அடியில் சிறிய ஏர் டேம் உள்ளது. இதன் இரு பக்கங்களிலும் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்கவாட்டு டிசைன்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் கிரில்லின் பக்கவாட்டில், ஹெட்லேம்பின் அடியில் இருந்து, டெயில்லேம்ப்கள் வரை கேரக்டர் லைன்கள் உள்ளது.
மற்றொரு செட் கேரக்டர் லைன்கள், இந்த காரின் முன் கதவுகளின் கீழ் பகுதியில் இருந்து, டெயில்லேம்ப்களின் அடிப்பகுதி வரை செல்கிறது.
இந்த 2 செட்களில் ஆன கேரக்டர் லைன்கள், டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கு கட்டு மஸ்தான தோற்றத்தை கொடுக்கிறது.

பின்பக்க டிசைன்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின், பின் பக்கத்தில் உள்ள விண்டோ, ஆங்குலார் தோற்றத்தில் பொருத்தபட்டுள்ளது.
இதன் டெயில்லேம்ப்கள், காருடன் மோல்டிங் செய்யப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.

இன்டீரியர்;
எல்லாம் நன்றாக வடிவமைத்த டட்சன், இன்டீரியர் அமைப்புகளில் கோட்டைவிட்டுவிட்டது. இதன் இன்டீரியர் சொல்லும் அளவிற்கு ஈர்க்கும் வகையில் இல்லை.
இதன் பிளையினான இன்டீரியர், டல்லாகவும், ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லாதவாறும் உள்ளது.
மேலும், இதன் டோர்களில் வெளியே நீண்டு கொண்டிருக்கும் உலோகங்கள், இந்த காருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இல்லை.

இஞ்ஜின்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 3 சிலிண்டர்கள் உடைய 799 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இதன் இஞ்ஜின் 53 பிஹெச்பியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் இஞ்ஜின், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இது மேலும், எஃப்டபுள்யூடி எனப்படும் ஃப்ரன்ட்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

மைலேஜ்;
ஆராய் அமைப்பின் மதிப்பீடு படி, டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், ஒரு லிட்டருக்கு, 25.17 மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளதாக டட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது.

டேங்க்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், உச்சபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையது.

செயல் திறன்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 15.9 நொடிகளில் எட்டும் திறன் உடையதாகும்.

பாதுகாப்பு;
பாதுகாப்பு விஷயத்தில், டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், டிரைவர் சைட் ஏர்பேக்குகளுடன் வழங்கப்படுகிறது.
ஆனால், இந்த டிரைவர் சைட் ஏர்பேக் வசதி, டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் டாப்-என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

வாரண்டி;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் மீது, 2 வருடங்கள் அல்லது அளவற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி வழங்கப்படுகிறது.

கிடைக்கும் வண்ணங்கள்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், லைம், ரூபி, சில்வர், வைட் மற்றும் கிரே ஆகிய 5 வெவ்வேறு நிறங்களில் வழங்கப்படுகிறது.

போட்டி;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

அறிமுகம்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், பெங்களூருவிலும், கர்நாடகா மாநிலம் முழவதும் உள்ள டட்சன் ஷோரூம்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

விலை விவரங்கள் - 1;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் காரின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வேரியன்ட் - டி (D)
விலை - எக்ஸ் ஷோரூம் பெங்களூரு - 2,43,147 ரூபாய்
வேரியன்ட் - ஏ
விலை - எக்ஸ் ஷோரூம் பெங்களூரு - 2,87,674 ரூபாய்
வேரியன்ட் - டி (T)
விலை - எக்ஸ் ஷோரூம் பெங்களூரு - 3,14,645 ரூபாய்

விலை விவரங்கள் - 2;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் காரின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வேரியன்ட் - டி (ஓ)-(T(O))
விலை - எக்ஸ் ஷோரூம் பெங்களூரு - 3,25,077 ரூபாய்
வேரியன்ட் - எஸ்
விலை - எக்ஸ் ஷோரூம் பெங்களூரு - 3,40,344 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் - முழு தகவல்கள்
டட்சன் ரெடி கோ காரை பரிசீலிக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








