டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்
இந்திய வாகன சந்தைகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
டட்சன் ரெடி கோ குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

டட்சன் ரெடி கோ...
ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும் நிஸான் நிறுவனம் வழங்கும் டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், ரெனோ க்விட் உருவாக்கபட்டுள்ள அதே ஃப்ளாட்பார்மை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது.
இந்திய வாகன சந்தைகளில், குறைந்த விலையில் விற்கபடும் கார்களில், டட்சன் ரெடி கோ மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதன் உலகளாவிய அறிமுகம், ஏப்ரல் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யபட்டது.

இஞ்ஜின்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 3 சிலிண்டர்கள் உடைய 799 சிசி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
இந்த இஞ்ஜின் 53 பிஹெச்பியையும், 72 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

கியர்பாக்ஸ்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.
இது மேலும், எஃப்டபுள்யூடி எனப்படும் ஃப்ரன்ட்-வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ளது.

மைலேஜ்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், ஆராய் அமைப்பின் மதிப்பீடு படி, ஒரு லிட்டருக்கு, 25.17 மைலேஜ் வழங்கும் திறன் கொண்டுள்ளதாக டட்சன் நிறுவனம் தெரிவிக்கிறது.

ஃப்யூவல் டேங்க்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், 28 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

உச்சபட்ச வேகம்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், உச்சபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் உடையதாகும்.

செயல் திறன்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், நின்ற நிலையில் இருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 15.9 நொடிகளில் எட்டும் திறன் உடையதாக உள்ளது.

பாதுகாப்பு;
பாதுகாப்பு விஷயத்தில், டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், டிரைவர் சைட் ஏர்பேக்குகள் கொண்டுள்ளது.
ஆனால், இந்த வசதி, டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் டாப்-என்ட் வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

வாரண்டி;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் மீது, 2 வருடங்கள் அல்லது அளவற்ற கிலோமீட்டர்களுக்கான வாரண்டி கிடைக்கிறது.

ஸ்டைலிங்;
2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிப்படுத்தபட்ட கான்செப்ட் நிலை டட்சன் ரெடி கோ மாடளுக்கும், தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ள டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கும், பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இல்லை.
டட்சன் பேட்ஜ் பொருத்தபட்டுள்ள டிராபெசாய்டல் கிரில்லின் 2 பக்கத்திலும், ஆங்குலார் ஹெட்லேம்ப்கள் உள்ளன.
இதன் கிரில்லின் அடியில் சிறிய ஏர் டேம் உள்ளது. இதன் இரு பக்கங்களிலும் எல்இடி டேடைம் ரன்னிங் லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்கவாட்டு டிசைன்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின் கிரில்லின் பக்கவாட்டில், ஹெட்லேம்பின் அடியில் இருந்து, டெயில்லேம்ப்கள் வரை கேரக்டர் லைன்கள் உள்ளன.
மற்றொரு செட் கேரக்டர் லைன்கள், டட்சன் ரெடி கோ காரின் முன் கதவுகளின் கீழ் பகுதியில் இருந்து, டெயில்லேம்ப்களின் அடிப்பகுதி வரை செல்கிறது.
இந்த 2 செட்களில் ஆன கேரக்டர் லைன்கள், டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கிற்கு கட்டு மஸ்தான தோற்றத்தை வழங்குகிறது.

பின்பக்க டிசைன்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக்கின், இதன் விண்டோ ஆங்க்குலார் தோற்றத்தில் பொருத்தபட்டுள்ளது.
இதன் டெயில்லேம்ப்கள், இந்த காருடன் மோல்டிங் செய்யப்பட்டது போல் காட்சி அளிக்கிறது.

இன்டீரியர்;
எல்லாம் நன்றாக வழங்கிய டட்சன், இன்டீரியர் அமைப்புகளில் கோட்டைவிட்டுவிட்டது. இதன் இன்டீரியர் அவ்வளவாக ஈர்க்கும் வகையில் இல்லை.
இதன் பிளையின் இன்டீரியர், டல்லாகவும், ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லாதவாறு உள்ளது.
மேலும், இதன் டோர்களில் வெளியே நீண்டு கொண்டிருக்கும் உலோகங்கள், இந்த காருக்கு வலு சேர்ப்பதாக இல்லை.

கிடைக்கும் வண்ணங்கள்;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், மொத்தம் 5 வண்ணங்களில் கிடைக்கிறது.
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், லைம், ரூபி, சில்வர், வைட் மற்றும் கிரே ஆகிய வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

போட்டி;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக், மாருதி சுஸுகி ஆல்ட்டோ 800, ஹூண்டாய் இயான் மற்றும் ரெனோ க்விட் ஆகிய மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

விலை விவரங்கள் - 1;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் காரின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வேரியன்ட் - டி (D)
விலை - எக்ஸ் ஷோரூம் டெல்லி - 2,38,900 ரூபாய்
விலை - எக்ஸ் ஷோரூம் மும்பை - 2,49,220 ரூபாய்
வேரியன்ட் - ஏ
விலை - எக்ஸ் ஷோரூம் டெல்லி - 2,82,649 ரூபாய்
விலை - எக்ஸ் ஷோரூம் மும்பை - 2,94,859 ரூபாய்
வேரியன்ட் - டி (T)
விலை - எக்ஸ் ஷோரூம் டெல்லி - 3,09,149 ரூபாய்
விலை - எக்ஸ் ஷோரூம் மும்பை - 3,22,504 ரூபாய்

விலை விவரங்கள் - 2;
டட்சன் ரெடி கோ ஹேட்ச்பேக் காரின் விலை விவரங்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
வேரியன்ட் - டி (ஓ)-(T(O))
விலை - எக்ஸ் ஷோரூம் டெல்லி - 3,19,399 ரூபாய்
விலை - எக்ஸ் ஷோரூம் மும்பை - 3,33,197 ரூபாய்
வேரியன்ட் - எஸ்
விலை - எக்ஸ் ஷோரூம் டெல்லி - 3,34,399 ரூபாய்
விலை - எக்ஸ் ஷோரூம் மும்பை - 3,48,845 ரூபாய்

இதர தொடர்புடைய செய்திகள்;
டட்சன் ரெடி-கோ ஹேட்ச்பேக்கின் எக்ஸ்டீரியர், இண்டீரியர் - முழு தகவல்கள்
டட்சன் ரெடிகோ காரின் பிரத்யேக படங்கள் அடங்கிய ஆல்பம்!
டட்சன் ரெடி கோ காரை பரிசீலிக்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








