ரூ.1 லட்சத்திற்கும் மேல் டிஸ்கவுண்ட் ஆஃபரில் கிடைக்கும் 20 புதிய கார்கள்!

Written By:

ஆண்டு கடைசியில் விற்பனை மந்தத்தை விரட்டுவதற்காக கார் நிறுவனங்கள் கடும் பிரத்யேனங்களில் ஈடுபட்டுள்ளன. இதற்காக பல முன்னணி நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகின்றன.

இந்த ஆண்டு தயாரிப்பு தேதியுடன் இருப்பு இருக்கும் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. அந்த கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

01. ஹூண்டாய் கிராணட் ஐ10

01. ஹூண்டாய் கிராணட் ஐ10

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் சிறப்பான சாய்ஸ். தற்போது இருப்பில் தேங்கி இருக்கும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.91,000 வரை தள்ளுபடியும், டீலர் வாயிலாக கூடுதல் சலுகைகளும் பெறும் வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரையிலான டிஸ்கவுண்ட் பெறும் வாய்ப்புள்ளது.

02. ஹூண்டாய் வெர்னா

02. ஹூண்டாய் வெர்னா

இருப்பில் தங்கி இருக்கும் ஹூண்டாய் வெர்னா கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பு இருக்கிறது. வேரியண்ட்டுகளை பொறுத்து இந்த சேமிப்புச் சலுகைகள் மாறுபடுகிறது. இருப்பினும், அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பரிசீலிக்கலாம்.

03. ஸ்கோடா ரேபிட்

03. ஸ்கோடா ரேபிட்

வடிவமைப்பில் சிறப்பான ஸ்கோடா ரேபிட் காருக்கு தள்ளுபடி என்பது கூடுதல் சிறப்பாக கருத முடியும். தற்போது ஸ்கோடா ரேபிட் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பெறும் வாய்ப்புள்ளது. ஸ்கோடா ரேபிட் காரை வாங்க விரும்புவோருக்கு இது சரியான தருணமாக இருக்கும்.

04. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

04. மஹிந்திரா எக்ஸ்யூவி 500

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காருக்கு நிறுவனம் தரப்பில் ரூ.85,000 சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, டீலரில் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளையும் சேர்த்து ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

05. ஹோண்டா மொபிலியோ

05. ஹோண்டா மொபிலியோ

ஹோண்டா பிஆர்வி வந்த பிறகு ஹோண்டா மொபிலியோ காருக்கு வரவேற்பு சற்று மந்த நிலையில்தான் உள்ளது. எனவே, இருப்பில் தேங்கி உள்ள ஹோண்டா மொபிலியோ கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கும் மேல் சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

06. ஹோண்டா பிஆர்வி

06. ஹோண்டா பிஆர்வி

ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி கார் 7 சீட்டர் மாடலாக இருப்பது மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்த காருக்கு தற்போது ரூ.1 லட்சம் வரையில் சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. பழைய காரை மாற்றி, இந்த காரை வாங்குவோருக்கு அதிகபட்சமான சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

07. ரெனோ டஸ்ட்டர்

07. ரெனோ டஸ்ட்டர்

ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.80,000 முதல் ரூ.1.20 லட்சம் வரையில் சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா கொடுத்து வரும் நெருக்கடியால் டஸ்ட்டர் விற்பனை சுணக்கம் கண்டிருப்பதால், இந்த நடவடிக்கையை ரெனோ மேற்கொண்டுள்ளது.

08. நிஸான் டெரானா

08. நிஸான் டெரானா

நிஸான் டெரானோ எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பில் தேங்கி இருக்கும் கார்களால் இந்த முடிவை நிஸான் எடுத்துள்ளதாக தெரிகிறது. டீலர் வசம் இருந்தும் கூடுதல் சலுகைகளை பெறும் வாய்ப்பையும் மறவாதீர்கள்.

09. ரெனோ லாட்ஜி

09. ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி காருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதிகபட்சமாக ரெனோ லாட்ஜி வேர்ல்டு எடிசன் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரை சேமிப்பை பெற முடியும்.

10. செவர்லே க்ரூஸ்

10. செவர்லே க்ரூஸ்

செவர்லே க்ரூஸ் காருக்கு கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. இதனால், இருப்பில் தேங்கி விட்ட க்ரூஸ் கார்களை தீர்த்துக் கட்டுவதற்காக அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை ஜெனரல் மோட்டார்ஸ் வழங்குகிறது.

11. டாடா சஃபாரி ஸ்ட்ராம்

11. டாடா சஃபாரி ஸ்ட்ராம்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு புதிய போட்டியாளர்களால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், தற்போது ஸ்டாக் உள்ள சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை சேமிப்பை பெற முடியும்.

12. சாங்யாங் ரெக்ஸ்டன்

12. சாங்யாங் ரெக்ஸ்டன்

சாங்யாங் ரெக்ஸ்டன் எஸ்யூவி மஹிந்திரா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இருப்பில் உள்ள ரெக்ஸ்டன் கார்களுக்கு அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை சேமிப்புச் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

13. ஹோண்டா சிஆர்வி

13. ஹோண்டா சிஆர்வி

ஹோண்டா சிஆர்வி எஸ்யூவிக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பெற முடியும். ஹோண்டா பிரியர்களுக்கு இது நல்ல சான்சாக தெரிவிக்கலாம்.

14. ஹூண்டாய் சான்டா ஃபீ

14. ஹூண்டாய் சான்டா ஃபீ

புதிய ஃபோர்டு எண்டெவர் மற்றும் புதிய டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய புதிய தலைமுறை மாடல்களின் வருகையால் ஹூண்டாய் சான்டா ஃபீ கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.

15. ஆடி க்யூ3

15. ஆடி க்யூ3

ஆடி க்யூ3 எஸ்யூவிக்கும், ஆடி ஏ3 செடாான் காருக்கும் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சம் வரை தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது. ஓல்டு ஸ்டாக் கார்களை விற்றுத் தீர்ப்பதற்காக இந்த அதிரடிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

16. ஆடி ஏ4

16. ஆடி ஏ4

ஆடி ஏ4 சொகுசு செடான் காருக்கு அதிகபட்சமாக ரூ.8.75 லட்சம் வரை தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு தயாரிப்பு தேதியுடன் இருப்பில் தங்கி இருக்கும் கார்களுக்கு இந்த சலுகைகளை பெற முடியும்.

17. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

17. பிஎம்டபிள்யூ 3 சீரிஸ்

பிஎம்டபிள்யூ 320ஐ பெட்ரோல் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இருப்பில் அதிக கார்கள் தேங்கி விட்டதால் இந்த முடிவை பிஎம்டபிள்யூ எடுத்துள்ளது.

18. பிஎம்டபிள்யூ எக்ஸ்3

18. பிஎம்டபிள்யூ எக்ஸ்3

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 காருக்கு ஆடி க்யூ5 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி எஸ்யூவி மாடல்களால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த காருக்கு அதிகபட்ச தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது. தற்போது அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை டிஸ்கவண்ட் பெறும் வாய்ப்புள்ளது.

19. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ்

19. மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ்

இந்த ஆண்டு தயாரிப்பு தேதியுடன் இருப்பில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் சி க்ளாஸ் காரின் பெட்ரோல் மாடலுக்கு ரூ.7 லட்சம் வரையிலும், டீசல் மாடலுக்கு ரூ.5 லட்சம் வரையிலும் தள்ளுபடி பெறும் வாய்ப்புள்ளது.

 20. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ்

20. மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ்

சொகுசு கார் மார்க்கெட்டில் நம்பர்-1 இடத்தை தக்க வைக்கும் பொருட்டு, விற்பனையை ஊக்குவிப்பதற்கு மெர்சிடிஸ் பென்ஸ் இ க்ளாஸ் காருக்கு அதிகபட்சசமாக ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது வழங்கப்படும் ஊக்கத் தொகை, விலையில் நேரடி தள்ளுபடி, இலவச இன்ஸ்யூரன்ஸ், இலவச ஆக்சஸரெீகள் என ஒவ்வொரு நிறுவனத்திற்குமான சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பில் தேங்கி இருக்கும் கார்களை பொறுத்து, இந்த சேமிப்புச் சலுகையான டீலருக்கு டீலர் மாறுபடலாம். கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு விசாரிப்பது அவசியம். மேலும், டீலரில் போதிய பேரம் பேசுவதன் மூலமாக அதிகபட்ச சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

English summary
These are the 20 cars with best year-end discount offers.
Story first published: Monday, December 26, 2016, 18:07 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark