டீசல் கார்கள் விற்பனை குறைந்ததன் உண்மை காரணம் என்ன?

By Meena

பெட்ரோல் வாகனங்களுக்கு இணையாக டீசல் வாகனங்களும் விற்பனையில் ரவுண்டு கட்டி அடிப்பது வழக்கம். இரண்டு கார்கள் விற்பனையானால், அதில் ஒன்று டீசல் எஞ்சின் கார் என்பது எழுதப்படாத விதி.

இன்னும் சொல்லப் போனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெட்ரோல் கார்கள் 45 சதவீதம் விற்பனையானால், டீசல் கார்களின் விற்பனை 55 சதவீதமாக இருந்தது.

டீசல் கார் விற்பனை

டீசல் வாகனங்களின் விலை சற்று அதிகம் என்றாலும், வாங்கிய பிறகு எரிபொருள் செலவு குறைவு என்பதே அதன் விற்பனை உயர்வுக்கு காரணம். பெட்ரோலா? டீசலா? என ஒப்பிட்டால், டீசல் கார்களுக்கே மவுசு அதிகமாக இருந்தது.

ஆனால், அந்த ட்ரெண்ட் இப்போது மாறி வருகிறது. கிட்டத்தட்ட டீசல் வாகனங்களின் விற்பனையில் செம அடி விழுந்திருக்கிறது என்றே சொல்லலாம். ஏன் மக்கள் மனதில் இந்த திடீர் மாற்றம்?...

விஷயம் வேறு ஒன்றுமில்லை. பெட்ரோல் விலையில் ஏறத்தாழ பாதியாக இருந்த டீசலின் விலை இப்போது சிவகார்த்திகேயன் மார்க்கெட் மாதிரி மளமளவென உயர்ந்துவிட்டது.

சர்வதேச அளவில் இதுவரை இல்லாத அளவு கச்சா எண்ணெய்யின் விலை மிகப் பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அந்த அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை லிட்டருக்கு ரூ.40-க்குள்தான் இருக்க வேண்டும்.

ஆனால், அவற்றின் மீதான கலால் வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதால் வாடிக்கையாளர்களுக்கு அதன் பலன் கிடைப்பதில்லை.

இந்த கலால் வரி மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வரை அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் எனத் தெரிகிறது. அதன் காரணமாக கலால் வரியை அரசு குறைக்க முன்வரவில்லை.

இதோடு மட்டுமில்லாமல், பெட்ரோலுக்கும், டீசலுக்கும் இடையேயான விலை வேறுபாடு கிட்டத்தட்ட குறுகிவிட்டது எனலாம். சென்னை மற்றும் பெங்களூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் முறையே ரூ.64.44 மற்றும் ரூ.69.49-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே டீசலை எடுத்துக் கொண்டால், சென்னையில், ரூ.56.25-க்கும், பெங்களூரில் ரூ.58.56-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் ரூ.10 கூட இல்லாததால் டீசல் கார்களின் விற்பனை சரியத் தொடங்கியுள்ளது.

இதைத் தவிர, 2,000 சிசி திறனுக்கும் அதிகமான டீசல் எஞ்சின் கார்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டிருப்பது, தில்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த மாடல் கார்களின் விற்பனையை பாதித்துள்ளது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்னர் மொத்த கார்களின் விற்பனையில் டீசல் மாடல்களின் பங்கு 52 சதவீதமாக இருந்தது. அது தற்போது 28 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், பெரும்பாலான மாடல்களில் டீசன் எஞ்சின் வருவது நிறுத்தப்பட்டு விடும். எரிபொருள் விலையில் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே டீசல் வாகனங்களின் எதிர்காலம் இருக்கிறது....

Most Read Articles
English summary
Diesel Car Sales Gone Down Over The Years – Delhi Diesel Ban The Cause?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X