இந்தியாவில் டீசல் வாகனங்கள் மீது 30% பசுமை வரி வசூலிக்கப்பட வாய்ப்பு
இந்தியாவில் உள்ள டீசல் வாகனங்களுக்கு கிரீன் டேக்ஸ் என்ற பெயரில் 30% பசுமை வரி வசூலிக்கப்பட உள்ளது.
டீசல் வாகனங்கள் பொதுவாக இந்தியாவில் சுற்றுசூழலுக்கு ஆபத்து உருவாக்க கூடியதாக உள்ளன. இதனால் இவற்றின் மீது 30% பசுமை வரி விதிக்கபட வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆலோசனையனது சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் (Environment Pollution Control Authority (EPCA)) மூலம் வழங்கபட்டுள்ளது.
டீசல் வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கபடுமா, இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவானது, இந்த ஏப்ரல் 30-ஆம் தேதி தான் தெரிய வரும். இந்திய சாலைகளில் உபயோகிக்கபடும் டீசல் வாகனங்களின் பிரயோகத்தை கட்டுபடுத்துவதே, இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைக்கான முக்கிய காரணமாக விளங்குகிறது. மேலும், நமது உடல்களில் டீசலினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதும், நாட்டில் காற்றின் தரத்தை உயர்த்துவதும் பிரதான நோக்கமாக உள்ளது.
தற்போதைய நிலையில், டெல்லியில் டீசல் வாகனங்களின் விற்பனைக்கு டெல்லி அரசு மூலம் தடைவிதிக்கபட்டுள்ளது. எந்த ஒரு கார் உற்பத்தி நிறுவனமும், டெல்லி-என்சிஆர் பகுதிகளில் 2,000 சிசி-க்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட விற்பனை செய்ய அனுமதி இல்லை.

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுப்படுதலை கட்டுபடுத்த, டெல்லி அரசு ஆட்-ஈவன் ஸ்கீம் என்ற திட்டத்தை நடைமுறைபடுத்தி வருகின்றனர். டெல்லி தான் உலக அளவில் அதிக மாசு அடைந்த நகரம் என்ற சிக்கலில் தவித்து வருகிறது.
இந்திய சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்கள் மீதும் இந்த பசுமை வரி விதிக்கபடலாம். இதனால், டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் நச்சுதன்மை மிக்க மாசு உமிழ்வை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் சாலைகள் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை கண்காணிக்கபதோடு மட்டுமல்லாமல், அதிகமாக மாசு உருவாக்கும் வாகனங்களின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த முடியும்.


Click it and Unblock the Notifications








