ஃபோர்டு மஸ்டாங் காரின் பிரத்யேகமான புகைப்படத் தொகுப்பு
புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் இந்திய ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்களின் ஆவலை வெகுவாக தூண்டியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று நடந்த அறிமுக விழாவில், எடுக்கப்பட்ட இந்த காரின் பிரத்யேக புகைப்படங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். இந்த புகைப்படத் தொகுப்பின் மூலமாக காரை நேரில் கண்டு ரசித்த அனுபவத்தை வாசகர்கள் பெற முடியும்.
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரில் 420பிஎச்பி பவரையும், 529என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்ட 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
அதேநேரத்தில், சர்வதேச அளவில் 3.7 லிட்டர் வி6 எஞ்சின் மற்றும் 2.3 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மாடலில் பேடில் ஷிஃப்ட் வசதியுடன் கூடிய 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும்.
புதிய ஃபோர்டு மஸ்டாங் கார் 0- 100 கிமீ வேகத்தை 4.8 வினாடிகளில் தொட்டுவிடும். அத்துடன், மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லத்தக்க திறன் கொண்டது. லிட்டருக்கு 7.4 கிமீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications




























