டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின இன்றைய முக்கியச் செய்திகள்!

By Saravana

ஆட்டோமொபைல் உலகின் இன்றைய முக்கியச் செய்திகளை இப்போது மிக எளிதாக இங்கே படிக்கலாம்.

01. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா பிஆர்வி காம்பேக்ட் எஸ்யூவி காட்சிக்கு வைக்கப்படும் என்று ஹோண்டா அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடல் விற்பனைக்கு வந்துவிடும் எதிர்பார்க்கலாம்.

02. மாருதி டிசையர் கோட்டையை அசைத்து பார்க்க வரும் புதிய ஃபோக்ஸ்வேகன் அமியோ காம்பேக்ட் செடான் அடுத்த மாதம் 2ந் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வரும் இந்த புதிய கார் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் காம்பேக்ட் செடானாக அவதாரம் எடுத்துள்ளது.

03. இந்தியாவில் களம்புக காத்திருக்கும் அமெரிக்காவின் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் அடுத்த மாதம் 3ந் தேதி யுஎம் ரெனிகேட் கமான்டோ பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

04. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் வரும் பிப்ரவரி 2ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அட்வென்ச்சர் டூரர் ரகத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த புதிய மாடலில் புதிய 410சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பைக் இளைஞர்கள் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

05. ஜாகுவார் எக்ஸ்இ செடான் கார் அடுத்த மாதம் 3ந் தேதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சொகுசு செடான் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 197 பிஎச்பி பவர் மற்றும் 237 பிஎச்பி பவர் என இருவிதமான மாடல்களில் கிடைக்கும்.

06. வாகனங்களின் பாதுகாப்பு விஷயங்களில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. டெல்லியில் நடந்த சாலை பாதுகாப்பு வார விழாவில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களிலும் ஏர்பேக்கை கட்டாயமாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

07. நாட்டில் அதிக விபத்துக்கள் நிகழும் அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து, அங்கு தேவையான பாதுகாப்புகளை செய்வதற்காக பிரத்யேக இணையதளத்தை மத்திய அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதற்காக, ரூ.11,000 கோடி மதிப்பில் திட்டம் ஒன்றும் தயாராகி வருகிறது.

08. மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியின் விலை ரூ.13,000 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. இது மஹிந்திரா டியூவி300 எஸ்யூவியை வாங்க காத்திருந்தவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை காண்பதற்கு க்ளிக் செய்க.

09. ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதுடன், விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் விபரங்களை இங்கே க்ளிக் செய்து படிக்கலாம்.

10. விறுவிறுப்பாக நடந்து வரும் டக்கார் ராலியின் 9வது சுற்று இன்று நிறைவடைந்தது. டக்கார் ராலியின் போட்டிகள் பாதியளவு கடந்துள்ள நிலையில், இன்றைய 9வது சுற்று நிலவரங்களை விரிவாகப் படிப்பதற்கு க்ளிக் செய்யவும்.

11. ஃபோர்டு நிறுவனத்தின் இலகு எடை கொண்ட புதிய 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எஞ்சினில் 3 சிலிண்டர்கள் கொண்டது. குறைந்த வேகத்திலும், கார் நிற்கும்போதும் இரண்டு சிலிண்டர்கள் மட்டுமே இயங்கும். ஒரு சிலிண்டர் செயல்படாது. இதன்மூலமாக, சிறப்பான எரிபொருள் சிக்கனம் கிடைக்கும் என்பதுடன், அதிர்வுகள் குறையும்.

12. இந்தியாவில் புதிய பெட்ரோல் எஞ்சின்களை அறிமுகம் செய்ய லேண்ட்ரோவர் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சினும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. லேண்ட்ரோவரின் பெரும்பாலான மாடல்கள் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும் நிலையில், டெல்லியில் டீசல் கார்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை கருதி, புதிய பெட்ரோல் எஞ்சின் மாடல்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது.

13. விரைவில் அறிமுகமாக இருக்கும் புதிய டிவிஎஸ் அப்பாச்சி பைக் பெரும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்த நிலையில், புதிய மாடலுக்கு அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகியிருக்கிறது.

14. அமெரிக்காவில் நடந்து வரும் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் பல புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜெனிசிஸ் G90 சொகுசு கார் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் காருக்கு நேரடி போட்டியாக விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

15. டெல்லியில் ஒற்றைப்படை, இரட்டைப்படை விதிகளிலிருந்து மாருதி சியாஸ் மற்றும் எர்டிகா ஆகிய இரு கார்களின் ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாடல்களுக்கு விலக்கு பெற்றிருக்கின்றன.

16. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா கஸ்ட்டோ 125 ஸ்கூட்டருடன், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை ஒப்பீடு செய்துள்ளோம். இரண்டில் எது பெஸ்ட் என்பதை பார்க்க க்ளிக் செய்யவும்.

ஆட்டோமொபைல் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்பில் இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 13, 2016, 19:17 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+