ஃபியட் நிறுவனம் வழங்கும் புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் அறிமுகம்
ஃபியட் நிறுவனம் வழங்கும் புதிய ஃபியட் 500எஸ் அறிமுகம் செய்யபட்டுள்ளது.
புதிய ஃபியட் 500எஸ் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஃபியட் 500எஸ்...
புதிய ஃபியட் 500எஸ், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் ஃபியட் நிறுவனம் மூலம் அறிமுகம் செய்யபட்ட சிறிய கார் ஆகும்.
நீங்கள் அதிக கொண்டாட்டம் செய்ய விரும்புவரா? ஆனால், அபார்த் உபயோகிக்க விருப்பம் இல்லாதவரா?
அப்போது, புதிய ஃபியட் 500எஸ் ஹேட்ச்பேக் தான் உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் கார் ஆகும்.

முக்கிய அம்சங்கள்;
ஃபியட் நிறுவனம் வழங்கும் புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக்கிற்கு, டைனமிக் பம்பர்கள், சேட்டின் கிராஃபைட் ஃபினிஷ் பாடி பேனல்கள், குரோம் பூச்சு செய்யபட்ட டெயில்-பைப்புகள், பிளாக்ட் அவுட் ஃபிரண்ட் ஏர்-இன்டேக் மற்றும் ஹனிகோம்ப் பாட்டம் கிரில் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.

பிற அம்சங்கள்;
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக், சேட்டின் கிராஃபைட் ஃபினிஷ் கொண்ட 15 இஞ்ச் அல்லாய் வீல்கள் அல்லது மேட பிளாக் நிறத்தில் உள்ள 16 இஞ்ச் அல்லாய் வீல்கள் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

வண்ண தேர்வுகள்;
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக், இட்டாலியா புளு மற்றும் ஆல்பி கிரீன் ஷேட்களில் கிடைக்கிறது.

இன்டீரியர்;
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக்கின் உட்புற (இன்டீரியர்) பகுதிக்கு ஸ்போர்ட்டியான ட்ரீட்மெண்ட் வழங்கபட்டுள்ளது.
இதன் உட்புற (இன்டீரியர்) பகுதியில், பிளாக் சீட்கள், புளு, வைட் அல்லது யெல்லோ நிறத்திலான கான்ட்ராஸ்ட்டிங் டோர் பேனல்கள் மற்றும் பிளாக் சீட்கள் பொருத்தபட்டுள்ளது.

இஞ்ஜின் தேர்வுகள்;
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக், ஏராளமான இஞ்ஜின் தேர்வுகள் கொண்டுள்ளது;
(1) 94 பிஹெச்பி, 1.3-லிட்டர், மல்டிஜெட், டீசல் இஞ்ஜின்
(2) 68 பிஹெச்பி, 1.2-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்
(3) 99 பிஹெச்பி, 1.4-லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்
(4) 0.9-லிட்டர் ட்வின் ஏர் இஞ்ஜின் - 79 பிஹெச்பி, 84 பிஹெச்பி, 103 பிஹெச்பி ஆகிய தேர்வுகளில் கிடைக்கும்.
இந்த இஞ்ஜின் தேர்வுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த இஞ்ஜினை தேர்வு செய்து கொள்ளலாம்.

என்டர்டெயிமென்ட்;
ஃபியட் நிறுவனம், இந்த புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக்கிற்கு 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மேன்ட் சிஸ்டம், பொருத்தியுள்ளது.
இந்த 7-இஞ்ச் இன்ஃபோடெயின்மேன்ட் சிஸ்டம், 440W சவுன்ட் சிஸ்டம் மற்றும் பீட்ஸ் ஆடியோ வடிவமைத்த 8-சேனல் ஆம்ப்ளிஃபையர் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஃபியட் மோபி ஏன் இந்தியாவில் அறிமுகம் ஆக வேண்டும் - முழு தகவல்கள்
ஜீப் பிராண்ட்டின் ரேங்லர் ட்ரெய்ல்கேட் கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம்
ஃபியட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்

புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்
புதிய ஃபியட் 500எஸ் குட்டி ஹேட்ச்பேக் - கூடுதல் படங்கள்


Click it and Unblock the Notifications








