ஃபியட் கார்கள் மீது 1,00,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள்
ஃபியட் இந்தியா நிறுவனம், இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் மிக விரிவான போர்ட்ஃபோலியோவை கொண்டு விற்பனை செய்து வருகிறது. இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் கார் உற்பத்தி நிறுவனம், இந்த ஏப்ரல் மாதத்தில், நாடு முழுவதும் உள்ள ஃபியட் ஷோரூம்களில் ஸ்பெஷலான ஆதாயங்களையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகிறது. இதில் 4 மாடல்கள் மீது மட்டும் இந்த சலுகைகள் வழங்கபடுகிறது.
ஃபியட் புன்ட்டோ எவோ கார்களின் விலைகள், 5.05 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் வழங்கபடும். ஃபியட் இந்தியா நிறுவனம் இந்த ஹேட்ச்பேக் மீது 30,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களை வழங்குகிறது. ஃபைனான்ஸ் தேர்வுகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், 7,255 ரூபாய் என்ற ஸ்பெஷலான இஎம்ஐ முறையில் இந்த ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்கை பெறலாம்.
ஃபியட் அவென்ச்சுரா, ரூபாய் 30,000 மதிப்பிலான ஆதாயங்களுடன் கிடைக்கிறது. ஃபியட் டீலர்ஷிப்கள், இந்த மாடலுக்கு 8,678 ரூபாய் என்ற ஈர்க்கும் வகையிலான இஎம்ஐ முறையில் ஃபைனான்ஸ் தேர்வுகளை வழங்குகின்றன. ஃபியட் அவென்ச்சுரா அர்பன் கிராஸ்ஓவரின் அர்பன் வேரியண்ட், 6.81 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) ஸ்பெஷலான விலையில் கிடைக்கிறது.

ஃபியட் லீனியா இந்த ஏப்ரல் மாதத்தில், 7.23 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. ஃபியட் லீனியா பிரிமியம் செடான் மீது 35,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களுடன் கிடைக்கிறது. ஃபைனான்ஸ் தேர்வுகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த ஃபியட் லீனியா பிரிமியம் செடான் 10,698 ரூபாய் என்ற இஎம்ஐ முறையில் வழங்கபடுகிறது.
ஃபியட் லீனியா கிளாசிக் மாடல் மீது, அதிக்கபடியான சலுகையாக 1,00,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது. ஃபியட் நிறுவனம் வழங்கும் இந்த செடான் 6.46 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இந்த அனைத்து சலுகைகளும், ஸ்கீம்களும் தேர்ந்தெடுக்கபட்ட வேரியண்ட்கள் மீதும், ஸ்டாக் உள்ளவரை மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








