ஃபியட் இந்தியா நிறுவனம் வழங்கும் தள்ளுபடிகள், ஆதாயங்கள் - முழு விவரம்
ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் பல்வேறு மாடல்கள் மீது தள்ளுபடிகளையும், ஆதாயங்களையும் வழங்குகின்றனர்.
ஃபியட் நிறுவனம் வழங்கும சலுகைகள் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்தவும், விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும் அவ்வப்போது, தள்ளுபடிகளை வழங்குவது வழக்கம்.
அந்த வகையில், இத்தாலியை மையமாக கொண்டு இயங்கும் ஃபியட் நிறுவனமும், தாங்கள் வழங்கும் கார்கள் மீது தள்ளுபடிகள் மற்றும் ஆதாயங்களை வழங்கி வருகின்றனர்.
மேலும், வாடிக்கையாளர்கள் ஈர்க்கும் வகையிலான இஎம்ஐ தேர்வுகளையும், எக்ஸ்சேஞ்ச் ஆதாயங்களை பெறலாம். ஆனால், இந்த அனைத்து தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.

அபார்த் ரேஞ்ச்;
ஃபியட் இந்தியா நிறுவனம், அபார்த் ரேஞ்ச் கார்கள் மீது ஆதாயங்கள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகிறது.
அபார்த் புன்ட்டோ மற்றும் அபார்த் அவென்ச்சுரா மாடல்கள் மீது 45,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

ஃபியட் அபார்த் 595 காம்படிஷன்;
ஃபியட் அபார்த் 595 காம்படிஷன் மீது 50,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் மற்றும் இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.

ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் லீனியா கிளாசிக்;
ஃபியட் புன்ட்டோ எவோ மற்றும் ஃபியட் லீனியா கிளாசிக் மீது 65,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்களுடன் கிடைக்கிறது.
ஃபியட் புன்ட்டோ எவோ மட்டும் 7,255 ரூபாய் இஎம்ஐ தேர்வுடன் கிடைக்கும்.
இந்த ஜூன் 2016-ல், ஃபியட் லீனியா கிளாசிக் மாடல் எந்த விதமான இஎம்ஐ தேர்வுகளும் கிடைக்காது.

அவென்ச்சுரா கிராஸ்ஓவர்;
ஃபியட் வழங்கும் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மீது 70,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் மற்றும் இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
மேலும், இந்த அவென்ச்சுரா கிராஸ்ஓவர், 8,678 ரூபாய் என்ற இஎம்ஐ தேர்வுடனும் கிடைக்கும்.

புதிய லீனியா;
புதிய ஃபியட் லீனியா மீது அதிகப்படியாக 95,000 ரூபாய் மதிப்பிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.
மேலும், இந்த புதிய ஃபியட் லீனியா, 10,698 ரூபாய் என்ற இஎம்ஐ தேர்வுடனும் கிடைக்கிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஃபியட் அபார்த் 595 பெர்ஃபார்மென்ஸ் கார் விற்பனைக்கு வந்தது!
அபார்த் தொடர்புடைய செய்திகள்
ஃபியட் தொடர்புடைய செய்திகள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்
2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்


Click it and Unblock the Notifications








