ஃபியட் கார்கள் மீது 1 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்புச் சலுகைகள்
ஜனவரி மாதத்தில், ஃபியட் இந்தியா நிறுவனம் 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்குகிறது.
ஃபியட் இந்தியா சார்பாக வழங்கபடும் சலுகைகளை குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

சலுகைகள் வழங்கபடும் கார்கள்;
ஃபியட் இந்தியா நிறுவனம், தங்களின் பல்வேறு தயாரிப்புகள் மீது 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகளை வழங்குகிறது.
மொத்தம் 4 மாடல்கள், பல்வேறு விதமான சலுகைகள் மற்றும் ஆதாயங்களுடன் வழங்கபடுகிறது.

சலுகைகள் கிடைக்கும் காலம்;
4 மாடல்கள் மீது வழங்கபடும் சலுகைகள், ஜனவரி 21, 2016-ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

அதிகபடியான சலுகைகள்;
புதிய ஃபியட் லீனியா மற்றும் ஃபியட் கிளாசிக் லீனியா மாடல் 1 லட்சம் ரூபாய் என்ற மிக அதிக அளவிலான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.
இந்த சலுகைகள், சில தேர்ந்தெடுக்கபட்ட வேரியண்ட்கள் மீதும், ஸ்டாக்குகள் உள்ள வரை மட்டுமே கிடைக்கும்.
புதிய ஃபியட் லீனியா, 7 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் இருந்தும், ஃபியட் கிளாசிக் லீனியா 6.25 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் இருந்தும் கிடைக்கிறது.

ஃபியட் புன்ட்டோ எவோ மீதான சலுகைகள்;
ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் 4.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் கிடைக்கிறது. இந்த மாடல் மீதும் 1 லட்சம் ரூபாய் என்ற வரையிலான சலுகைகள் கிடைக்கிறது.
இந்த ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக் மீதும் 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள் கிடைக்கிறது.
ஆனால், இந்த ஃபியட் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்-கின் சில குறிப்பிட்ட வேரியண்ட்கள் மீது மட்டும், ஸ்டாக் உள்ள வரை மட்டுமே இந்த ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

ஃபியட் அவென்ச்சுரா மீதான ஆஃபர்கள்;
ஃபியட் நிறுவனம் மூலம் விற்கபடும் அவென்ச்சுரா மீதும் 1 லட்சம் ரூபாய் வரையிலான சலுகைகள், ஜனவரி 31-ஆம் தேதி வரை வழங்கபடுகிறது.
ஃபியட் இந்தியா மூலம் தயாரிக்கபடும் இந்த கிராஸ்ஓவர் மாடல், 6.57 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் இருந்து கிடைக்கிறது.
அவென்ச்சுரா மாடலின் சில குறிப்பிட்ட வேரியண்ட்கள் மீது மட்டுமே அதிகப்படியான ஆதாயங்கள் வழங்கபடுகிறது.

ஆஃபர்கள் இல்லாத மாடல்கள்;
துரதிர்ஷ்டவசமாக, எந்த அபார்த் மாடல்கள் மீதும், எந்த விதமான பிரத்யேகமான ஆஃபர்கள் அல்லது சலுகைகள் வழங்கபட வில்லை.
தற்போதைய நிலையில், அபார்த் ரேன்ஜில், அபார்த் புன்ட்டோ, அபார்த் அவென்ச்சுரா மற்றும் அபார்த் 595 காம்பெடிஸியன் ஆகிய 3 மாடல்கள் ஃபியட் இந்தியா மூலம் வழங்கபடுகிறது.

இதர தொடர்புடைய செய்திகள்;
ஃபியட் தொடர்பான செய்திகள்
பழைய ஃபியட் புன்ட்டோ கார் மீண்டும் விற்பனைக்கு வருகிறது
இந்த ஆண்டில் ரிலீசாகும் புதிய எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் கார் மாடல்கள்

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








