செப்டம்பர் மாதத்தில் ஃபியட் நிறுவனம் வழங்கும் பக்கா சலுகைகள்

By Ravichandran

ஃபியட் நிறுவனம், தங்களின் தயாரிப்புகள் மீது 85,000 ரூபாய் வரையிலான ஆதாயங்களை வழங்குகிறது. வெவ்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், பண்டிகை காலங்களின் போதும், விற்பனையை கூடும் நோக்கிலும், பிராண்டை பரப்பும் நோக்கம் உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு தள்ளுபடிகளையும், ஆதாயங்களையும் வழங்குவது உண்டு.

அந்த வகையில், ஃபியட் நிறுவனமும் தங்களின் கார் மாடல்கள் மீது இந்த செப்டம்பர் மாதத்தில் ஏராளமான ஆதாயங்களை வழங்குகிறது. ஃபியட் நிறுவனம் வழங்கும் ஆதாயங்கள் குறித்த விரிவான தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆதாயங்கள் கிடைக்கும் மாடல்கள்;

ஆதாயங்கள் கிடைக்கும் மாடல்கள்;

ஃபியட் நிறுவனம், இந்த செப்டம்பர் மாதம் வழங்கும் ஆதாயங்களில் மொத்தம் 4 மாடல்களை மட்டும் சேர்த்து கொண்டுள்ளது. ஃபியட் நிறுவனம், ஃபியட் புன்ட்டோ எவோ, ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர், ஃபியட் லீனியா மற்றும் ஃபியட் லீனியா கிளாசிக் ஆகிய மாடல்கள் மீது சலுகைகளை வழங்குகிறது.

புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்;

புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக்;

ஃபியட் நிறுவனத்தின் புன்ட்டோ எவோ ஹேட்ச்பேக், 5.86 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற அடிப்படை விலையில் கிடைக்கிறது. இந்த மாடல் மீது அதிகப்படியாக 70,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்கும்.

இந்த ஆதாயங்கள், ஆக்ஸசரீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆதாயங்கள் ரூபத்தில் வழங்கப்படுகிறது.

அவென்ச்சுரா கிராஸ்ஓவர்;

அவென்ச்சுரா கிராஸ்ஓவர்;

ஃபியட் நிறுவனத்தின் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் 7.87 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற துவக்க விலையில் கிடைக்கும். அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மீது 70,000 ரூபாய் வரையிலான ஆதாயங்கள் கிடைக்கிறது.

இந்த ஆதாயங்கள், எக்ஸ்சேஞ்ச் ஆதாயங்கள் மற்றும் பிற லாயல்டி சலுகைகள் வடிவத்தில் வழங்கப்படும்.

லீனியா செடான்;

லீனியா செடான்;

ஃபியட் லீனியா செடான் மீது அதிகப்படியாக 85,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகளை ஃபியட் இந்தியா நிறுவனம் அளிக்கிறது. ஃபியட் ஷோரூம்கள், இந்த ஃபியட் லீனியா செடானை 7.82 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற துவக்க விலையில் இருந்து விற்பன செய்வர்.

லீனியா கிளாசிக்;

லீனியா கிளாசிக்;

ஃபியட் லீனியா கிளாசிக், 6.46 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) என்ற மிக ஈர்க்கும் அடிப்படை விலையில் விற்கப்படுகிறது.

இறுதி கருத்து;

இறுதி கருத்து;

எப்படியும் கார் வாங்க முடிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள், பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இத்தகைய சலுகைகள் மாறும் ஆதாயங்கள் பற்றி தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றவாறு தங்களின் கார் வாங்கும் முடிவுகளை எடுப்பது லாபகரமானது.

இதர தொடர்புடைய செய்திகள்;

இதர தொடர்புடைய செய்திகள்;

பஜாஜ் பல்சர் பிராண்டின் 15 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பிரமாதமான சலுகைகள்

டட்சன் கார்கள் இனி முப்படைகளின் சிஎஸ்டி கேண்டீன்களிலும் கிடைக்கும்

அதிகம் ஏற்றுமதியான டாப் 5 'மேட் இன் இந்தியா' கார்கள்!

More from DriveSpark

Article Published On: Saturday, September 10, 2016, 11:44 [IST]
English summary
Fiat India is offering exciting benefits and offers during September 2016. Customers can avail maximum benefit upto Rs. 85,000 during this period. Punto Evo hatchback, Avventura crossover, Linea sedan, Linea Classic are 4 Models on which these Benefits are given. Customers will be offered benefits in the form of accessories and exchange benefits. To know more, check here...
மேலும்... #ஃபியட் #fiat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+