பறந்து வந்து பலேனோ காரை பதம் பார்த்த ஹார்லி டேவிட்சன் பைக்... டிரைவர் படுகாயம்!

By Gopi

கபாலி படத்தில் வரும் நெருப்புடா பாடலைக் கேட்டு விசிலடித்துக் கொண்டே ஜாலியாக நாம் காரில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென நம் தலைக்கு மேல் ஒரு பைக் வந்து விழுந்தால் என்னவாகும்?

இப்படியெல்லாம் நடக்குமா? சுத்த பேத்தல் என நினைக்காதீர்கள். இதுபோன்றதொரு சம்பவம் அண்மையில் மும்பையில் நடந்தது. அந்த விபத்து நடந்தபோது சிட்டி முழுவதும் இந்த விஷயம் பற்றிதான் ஒரே டாக். விபத்து ஏற்படுவது இயற்கை. இதிலென்ன இவ்வளவு பீடிகை? என்கிறீர்களா? இருக்கிறது.

சாலை விபத்து

மும்பையின் சான்டாகிரஸ் (மேற்கு) பகுதியில் அமைந்துள்ள எஸ்வி சாலையில் கடந்த வாரம் அதிவேகமாக ஒரு ஹார்லி டேவிட்சன் பைக் வந்தது. அதை ஓட்டியவர் 30 வயதான ரவி பஜேரியா எனத் தெரிகிறது.

ரஷ் ஹவரில் செம ஸ்பீடாக வண்டியை ஓட்டியிருக்கிறார் பஜேரா. அப்போது சிக்னல் போடப்பட்டதால் பாதசாரிகள் சாலையைக் கடந்துள்ளனர். அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்த ஹார்லி டேவிட்சன், எந்த நேரத்திலும் பாதசாரிகள் மீது மோதி விடலாம் என்று உணர்ந்த பஜேரியா, சடன் பிரேக் அடித்திருக்கிறார்.

வண்டி அவரது கட்டுப்பாட்டை விட்டு கை மீறிச் சென்று விட்டது. பைக்கிலிருந்து கீழே விழுந்த பஜேரியா என்ன நடக்கிறது என கண்கொட்டாமல் பார்த்துள்ளார். நேராகச் சென்ற பைக் டிவைடரின் மீது வேகமாக மோதியுள்ளது.

அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. மோதிய வேகத்தில் ஜிவ்வென பறந்து போய் எதிரே வந்து கொண்டிருந்த மாருதி பொலேனோ காரின் ரூஃப் (மேற் கூரை) மேல் விழுந்துள்ளது.

இதில், காரை ஓட்டி வந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு பலத்த அடி. உடனடியாக அவருக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இத்தனை களேபரங்களுக்கும் காரணமான ரவி பஜேரியா தற்போது கம்பிகளுக்கு பின்னால் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்.

அதிவேகம் அனைவருக்கும் ஆபத்து என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சமீபத்திய உதாரணம்.

More from DriveSpark

Article Published On: Friday, June 24, 2016, 10:37 [IST]
English summary
Flying Harley Davidson Crashes On Maruti Baleno's Roof, Injures Driver.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+