விலை குறைப்பினால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விற்பனை வெகுவாக அதிகரிப்பு
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை குறைக்கபட்டதை அடுத்து, உயர்ந்த அளவிலான விற்பனை பதிவு செய்துள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சமீபத்தில் விலை குறைக்கபட்டது. இதை தொடர்ந்து இந்த மாடல் மிக அதிக அளவிலான விற்பனையை அடைந்துள்ளது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு புதுமையான படைப்பாக அறிமுகம் செய்யபட்டது. அப்போது, காம்பேக்ட்டான, சப்-4 மீட்டர் எஸ்யூவி எக்கசக்கமாக விற்பனையை அள்ளியது. ஆனால், நாட்கள் செல்ல செல்ல, பிற கார் உற்பத்தி நிறுவனங்களும், காம்பேக்ட் எஸ்யூவிகளை உற்பத்தி செய்து கடும் போட்டி கொடுக்க துவங்கின.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மாடலுக்கு, சமீபத்தில் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யபட்ட மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரும் அப்படி முக்கியமான போட்டியாக விளங்குகிறது.
இதனால், ஃபோர்டு நிறுவனம் தங்களின் ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவியின் விலைகளை 1,00,000 ரூபாய்க்கும் கூடுதலாக குறைத்தனர். இந்த விலை குறைப்பு, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் சப்-4 மீட்டர் எஸ்யூவியின் விற்பனை நிச்சயம் மீண்டும் உயர்த்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. இதனால், கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் சுமார் 4,456 ஈக்கோஸ்போர்ட் கார்களை ஃபோர்டு நிறுவனம் விற்றுள்ளது.

கடைசியாக இத்தகைய அபார விற்பனை, அக்டோபர் 2014-ல் பதிவாகியது. அப்போது, ஃபோர்டு நிறுவனம் 4,528 ஈக்கோஸ்போர்ட் கார்களை விற்று சாதனை படைத்தது. சமீபத்தில் தான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டின் பொலிவு கூட்டபட்டது. மேலும், இதன் டீசல் இஞ்ஜினில் சில மாற்றங்களை செய்தது.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காம்பேக்ட் எஸ்யூவி, 3 விதமான இஞ்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. 110 பிஹெச்பி திறனை வெளிபடுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 124 பிஹெச்பி திறனை வெளிபடுத்தும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 99 பிஹெச்பி திறனை வெளிபடுத்தும் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் தேர்வுமுறையிலான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடனும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








