புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் - முழு விவரங்கள்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யபட்டுள்ள ஃபோர்டு என்டெவர் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

புதிய ஃபோர்டு என்டெவர் பற்றி...
புதிய ஃபோர்டு என்டெவர் இந்திய வாகன சந்தைகளில், பிரிமியம் எஸ்யூவி-யாக அறிமுகம் செய்யபடுகிறது.

இஞ்ஜின்;
புதிய ஃபோர்டு என்டெவர், 2 விதமான டீசல் இஞ்ஜின் தேர்வுகளுடன் கிடைக்கிறது.
முதலாவதாக, 2.2 லிட்டர், 4-சிலிண்டர்கள் உடைய, டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், 158 பிஹெச்பி-யையும், 385 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.
இரண்டாவதாக, 3.2 லிட்டர், 4-சிலிண்டர்கள் உடைய, டர்போசார்ஜ்ட் டீசல் இஞ்ஜின், 197 பிஹெச்பி-யையும், 470 என்எம் டார்க்கையும் வெளிபடுத்தும் திறன் கொண்டுள்ளது.

டிரைவ் தேர்வுகள்;
புதிய ஃபோர்டு என்டெவர், 2-வீல் டிரைவ் அல்லது 4-வீல் டிரைவ் தேர்வுகளுடன் கிடைக்கிறது.

கியர்பாக்ஸ் தேர்வுகள்;
புதிய ஃபோர்டு என்டெவர், 6-ஸ்பீட் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளுடனும் கிடைக்கிறது.

மைலேஜ்;
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி-யின் 2.2 லிட்டர் இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 14.12 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி-யுடைய 3.2 லிட்டர் இஞ்ஜின், ஒரு லிட்டருக்கு 10.91 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் வகையிலான எரிபொருள் திறன் கொண்டுள்ளது.

ஃப்யூவல் டேங்க்;
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி, 80 லிட்டர் ஃப்யூவல் (எரிபொருள்) நிறப்புவதற்கான வகையில், அதிக கொள்ளளவு கொண்ட ஃப்யூவல் டேங்க் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்;
பிரிமியம் எஸ்யூவி-யாக அறிமுகம் செய்யபடும் புதிய ஃபோர்டு என்டெவர், சன் ரூப் (மேற்கூரை), பவர்ட் சீட்கள், கிளைமேட் கண்ட்ரோல், 10-ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளுடன் வெளியாகிறது.
மேலும், புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி-யில், பார்க் அசிஸ்ட், பவர் ஆபரேட்டட் டெய்ல்கேட் (பவர் மூலம் இயக்கபடும் டெய்ல்கேட்), டெர்ரெய்ன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், பவர் ஃபோல்டிங் (மடங்கும்) சீட்கள் மற்றும் எல்ஈடி லைட்டிங் உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.

பாதுகாப்பு;
பாதுகாப்பு குறித்த அம்சங்களை பொருத்த வரை, புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவின் உயர்-ரக வேரியண்ட் 7 ஏர்பேக்-கள், (மலை ஏறும் போதும், இறங்கும் போதும் உதவும்) ஹில் கிலைம்ப் அண்ட் டிஸ்ஸெண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளுடன் வெளியாகிறது.
மேலும், இதில் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளது.

கிடைக்கும் வண்ணங்கள்;
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி, மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கிறது.
புதிய ஃபோர்டு என்டெவர், சன்செட் ரெட், டைமண்ட் வைட், கோல்டன் பிரான்ஸ், மூன்டஸ்ட் சில்வர், பேந்தர் பிளாக் மற்றும் ஸ்மோக் கிரே ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

போட்டி கார்கள்:
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி, சமமான போட்டி காராக செவர்லே ட்ரெய்ல்பிளேசர் மட்டுமே விளங்குகிறது.

விலை விவரங்கள் - பட்டியல் 1;
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி குறித்த விரிவான விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மாடல் - 4X2 எம்டி ட்ரெண்ட்
2.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - 24,75,094 ரூபாய்
3.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - பொருந்தாத தேர்வு
மாடல் - 4X2 ஏடி ட்ரெண்ட்
2.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - 25, 53,468 ரூபாய்
3.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - பொருந்தாத தேர்வு
குறிப்பு ; இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - பட்டியல் 2;
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி குறித்த விரிவான விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மாடல் - 4X2 டைடேனியம்
2.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - 27,36,344 ரூபாய்
3.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - பொருந்தாத தேர்வு
மாடல் - 4X4 எம்டி ட்ரெண்ட்
2.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - 26,68,418 ரூபாய்
3.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - பொருந்தாத தேர்வு
குறிப்பு ; இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகள் ஆகும்.

விலை விவரங்கள் - பட்டியல் 3;
புதிய ஃபோர்டு என்டெவர் பிரிமியம் எஸ்யூவி குறித்த விரிவான விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.
மாடல் - 4X2 ஏடி ட்ரெண்ட்
2.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - பொருந்தாத தேர்வு
3.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - 27,78,142 ரூபாய்
மாடல் - 4X4 டைடேனியம்
2.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - பொருந்தாத தேர்வு
3.2 லிட்டர் இஞ்ஜின் கொண்ட மாடல் விலை - 29,46,388 ரூபாய்
குறிப்பு ; இங்கு குறிப்பிடபட்டுள்ள அனைத்து விலை விவரங்களும், எக்ஸ்-ஷோரூம் (மும்பை) விலைகள் ஆகும்.

இதர தொடர்புடைய செய்திகள்;
2016 ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி, இந்தியாவில் ஜனவரி 20-ஆம் தேதி அறிமுகம்
புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி ஜனவரி 20ல் விற்பனைக்கு வருகிறது
புதிய ஃபோர்டு என்டெவர், ஜனவரியில் இந்தியாவில் அறிமுகமாகிறது

செய்திகள் உடனுக்குடன்;
டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க
4 சக்கர வாகன செய்திகள்
2 சக்கர வாகன செய்திகள்


Click it and Unblock the Notifications








