ஈர்க்கும் விலையில் கிடைக்கும் ஃபோர்டு ஃபிகோ, ஃபிகோ ஆஸ்பயர்
ஃபோர்டு நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு ஈர்க்கும் விலையில் அளிக்கின்றனர். இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகை காலங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்வது அல்லது தற்போதைய மாடல்களில் ஸ்பெஷல் எடிஷன்களை வெளியிடுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டுள்ளனர்.
சில நிறுவனங்கள் பண்டிகை காலங்களை கொண்டாட தங்கள் தயாரிப்புகளின் மீது ஈர்க்கும் வகையிலான சலுகைகளை அளிக்கின்றனர்.

ஃபோர்டு சலுகைகள்;
அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு நிறுவனம், ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் ஆகிய மாடல்களை ஸ்பெஷலான விலையில் வழங்குகின்றது. ஃபோர்டு நிறுவனம் தங்களின் புதிய தயாரிப்புகள் மீதும் ஆதாயங்கள் வழங்குவது ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக உள்ளது.

ஃபோர்டு ஃபிகோ டைடேனியம்...
ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக்கின் டைடேனியம் வேரியன்ட்டின் பெட்ரோல் மாடல் 5.95 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டீசல் மாடல் 7.04 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் விற்பனை விற்கப்பட்டது.
தற்போது, ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக்கின் டைடேனியம் வேரியன்ட்டின் பெட்ரோல் மாடல் 5.66 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டீசல் மாடல் 6.54 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் கிடைக்கும்.

ஃபிகோ ஆஸ்பயர் டைடேனியம்...
ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடானின் டைடேனியம் வேரியன்ட்டின் பெட்ரோல் மாடல் 6.90 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டீசல் மாடல் 7.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் விற்பனை விற்கப்பட்து வந்தது.
தற்போது, ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடானின் டைடேனியம் வேரியன்ட்டின் பெட்ரோல் மாடல் 5.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும், டீசல் மாடல் 7.09 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையிலும் கிடைக்கும்.

ஃபைனான்ஸ் தேர்வுகள்;
ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடான் ஆகிய 2 மாடல்களும், 8.4% என்ற ஈர்க்கும் வகையிலான வட்டி விகிதம் கொண்ட ஃபைனான்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கிடைக்கும் வேரியன்ட்கள்;
ஃபைனான்ஸ் தேர்வுகளானது ஃபோர்டு ஃபிகோ ஹேட்ச்பேக் மற்றும் ஃபிகோ ஆஸ்பயர் காம்பேக்ட் செடானின் எந்த வேரியன்ட்கள் மீது வேண்டுமானாலும் கிடைக்கும்.

பிற சுவாரஸ்யமான செய்திகள்;
பேசாம ஆடி கார் வாங்கற பணத்துல இந்த குட்டி விமானத்தை வாங்கிடுவோமா?
நீண்ட தூரம் பயணிக்கும் உலகின் டாப் 10 ரயில்கள்!
டைகர் எக்ஸ்பிரஸ் சொகுசு ரயில் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்!


Click it and Unblock the Notifications








