ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் ஜூன் மாத விற்பனை ரிப்போர்ட்

By Ravichandran

ஃபோர்டு இந்தியா நிறுவனம், தங்களின் சிறந்த விற்பனை குறியீட்டை இந்த ஜூன் மாதம் பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பீடு கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த விற்பனை அளவோடு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஃபோர்டு நிறுவனம் 2016-ஆம் ஆண்டில் பதிவு செய்த விற்பனையிலேயே இந்த ஜூன் மாத விற்பனை தான் மிகவும் சிறந்ததாக இருந்துள்ளது.

கடந்த ஜூன் 2015 காலகட்டத்தில், அமெரிக்காவை மையமாக கொண்டு இயங்கும் ஃபோர்டு நிறுவனம், அனைத்து சந்தைகளையும் சேர்த்து 7,979 கார்களை மட்டுமே விற்றது. அனால், இந்த 2016 ஜூன் மாதத்தின் போது, ஃபோர்டு நிறுவனம், 19,754 கார்கள் என்ற அளவிலான விற்பனையை பதிவு செய்தது. இந்த விற்பனையானது, சுமார் 147% அதிகமாகும். இதற்கு முக்கிய காரணம், குஜராத்தின் சனந்த் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தி ஆலை தான் என கூறப்படுகிறது.

ford-india-registers-best-monthly-sales-in-2016-june

இந்திய வாகன சந்தைகளை பொருத்த வரை, கடந்த 2015 ஜூன் மாதத்தின் போது, ஃபோர்டு இந்தியா நிறுவனம், 4,527 கார்களை விற்றது. ஆனால், இந்த 2016 ஜூன் மாதத்தின் போது, ஃபோர்டு நிறுவனம், 9,469 கார்களின் விற்பனையை பதிவு செய்தது. இந்த விற்பனையானது, சுமார் 109% அதிகமாகும்.

"7-வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசின் சம்பள உயர்வு அறிவிப்பு, இந்த ஆண்டு நல்ல மழை பொழிவது தொடர்பான அறிவிப்புகள், பழைய கார்களை ஸ்கிராப்பிங் செய்வது தொடர்பான அறிவிப்புகளின் காரணங்களால் ஆட்டோமொபைல் துறை மிகுந்த ஆவலுடன் அதிக விற்பனையை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறது" என ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்தார்.

எனினும், எந்த மாடலின் காரணமாக இத்தகைய அதிக விற்பனை பதிவாகியுள்ளது என்பது தொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனம் எந்த விதமான உறுதியான தகவல்களையும் வழங்கவில்லை. விலை குறைப்பு செய்யப்பட்டது முதல், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. மேலும், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா ஃபார்ச்சூனர் விற்பனையை முந்தி சென்றது.

ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பையர் மாடல்களின் விற்பனை அபாரமாக இல்லாவிட்டாலும், ஸ்திரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ஃபோர்டு இந்தியா நிறுவனம், தங்களின் 6-ஆம் தலைமுறையை சேர்ந்த ஃபோர்டு மஸ்டாங் காரை, ஜூலை 13-ல் அறிமுகம் செய்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, July 4, 2016, 13:15 [IST]
English summary
Ford India posted better sales during June 2016, in comparison to same perid last year. This is also the best month for Ford India in 2016. Ford sold 19,754 units compared to 7,979 units in June 2015, this is growth of 147 percent, mainly driven by their new plant in Sanand. In Indian markets, Ford India sold 9,469 units in June 2016, compared to 4,527 units last year. To know more, check here...
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+