கற்றாழைப் பொருள்களை கார் தயாரிக்கப் பயன்படுத்தும் ஃபோர்டு நிறுவனம்... சபாஷ் ஐடியா

By Meena

வேலி ஓரங்களிலும், வெட்ட வெளி காடுகளிலும் யாரும் கேட்பாரின்றி கிடக்கும் ஆதரவற்ற செடிகளில் ஒன்று கற்றாழை. இந்தக் கற்றாழைச் செடியைப் பார்த்தாலே சிலருக்கு அலர்ஜியாகிவிடும். அப்படி ஒரு வெறுப்பைச் சம்பாதித்துள்ள இந்தச் செடியில் எத்தனை மருத்துவ குணங்கள் இருக்கிறது தெரியுமா? வயிறு சம்பந்தமான கொடிய நோய்களைக் கூட குணப்படுத்தும் ஆற்றல் இந்தச் செடிக்கு உண்டு.

அதெல்லாம் சரி, இதற்கும் ஆட்டோ மொபைல் துறைக்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்? இருக்கிறது... கற்றாழை நாரில் இருந்து பிளாஸ்டிக்காகத் தயாரித்து அதை காரின் வயர்களின் மேல்புறத்தில் மின்கடத்தாத பொருளாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது ஃபோர்டு நிறுவனம்.

ஃபோர்டு கார் தயாரிப்பு

பொதுவாகவே கற்றாழை ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக வளரக்கூடியது. அதனை வறுத்து, பதப்படுத்தி, அதன் சாற்றைப் பிரித்தெடுத்து நொதிப்படுத்தினால் டக்கீலா எனப்படும் எரி சாராய வகை கிடைக்கும். அதை எடுத்த பிறகு மீதமாய் வீணாய்ப் போகும் கற்றாழை நார்களை காகிதம் மற்றும் உரம் தயாரிக்கப் பயன்படுத்தி விடுவார்கள். ஜோஸ் கியூரோவோ என்ற மெக்ஸிகன் நிறுவனம் டக்கீலா தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் நிறுவனம்.

இந்நிறுவனத்திடமிருந்துதான் கார்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் நார் பொருள்களை கற்றாழை கழிவில் இருத்து உற்பத்தி செய்து தருமாறு கேட்டிருக்கிறது அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனம்.

கற்றாழையிலிருந்து உருவாக்கப்படும் பொருள்கள் நீண்ட காலம் நீடித்து உழைக்கக்கூடிய திறன் கொண்டது. எனவே, காரில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் அதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது ஃபோர்டு நிறுவனம். விரைவில் இதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்கூழ், ஆமணக்கு, சோயா, தேங்காய், நெல் உமி உள்ளிட்ட இயற்கை வஸ்துக்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருள்கள் ஃபோர்டு கார்களில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நி்லையில் அதற்கு அடுத்தபடியாக மற்றும் ஒரு சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளை தனது காரில் பயன்படுத்தப் போகிறது ஃபோர்டு நிறுவனம். இயற்கையை விரும்பும் வகையில் இந்த உலகம் மாறிக் கொண்டு வருகிறது. தொழில் உற்பத்தியும் அதற்குத் தகுந்தாற்போல மாறுவது வரவேற்கத்தக்க ஒன்று. ஊறு விளைவிக்கும் தேவையற்ற ரசாயன மூலக்கூறுகளைக் கொண்ட செயற்கை பொருள்களை உற்பததி செய்வதைக் காட்டிலும், ஃபோர்டு நிறுவனத்தின் வழிமுறைகளை பிறரும் பின்பற்றினால் சுற்றுச்சூழல் மேம்படும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 23, 2016, 16:03 [IST]
English summary
Ford To Use Tequila Byproduct For Car Parts.
மேலும்... #ஆஃப் பீட் #ford #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+