கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் இந்தியாவில் அறிமுகம்

Written By:

கூகிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்மை இந்தியாவிற்குள்ளும் கொண்டு வந்துள்ளனர்.

கூகிள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை மையமாக கொண்டு இயங்கும் மாபெரும் மென்பொருள் நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், அவ்வபோது புதுமையான படைப்புகளை கொண்டுவருவதில் மிகவும் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும்.

கூகிள் வழங்கும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம்...

ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம்...

வாடிக்கையாளர்கள் ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் பயன்படுத்துவதற்கு, ஆண்ட்ராய்ட் 5.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் நிறுவபட்டுள்ள ஸ்மார்ட்ஃபோன்களில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆப் நிறுவி கொள்ள வேண்டும்.

பின்னர், ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் உடைய தங்கள் காரின் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டத்துடன், ஆண்ட்ராய்ட் ஆட்டோ ஆப் நிறுவிய ஸ்மார்ட்ஃபோனை இணைத்து கொள்ள வேண்டும்.

இப்படி இணைத்து கொள்வது மூலம், தங்கள் ஸ்மார்ட்ஃபோன்களின் நோட்டிஃபிகேஷன்களை பார்த்து கொள்ளலாம்.

நேவிகேஷன்;

நேவிகேஷன்;

மேலும், டர்ன்-பை -டர்ன் நேவிகேஷன் வசதியை உபயோகித்து கொள்ள கூகிள் மேப்பினை உப்யோகித்து கொள்ளலாம்.

இதோடு மட்டுமல்லாமல், தங்கள் சொந்த குறலில் ஆணை வழங்கி மியூசிக் இயக்க செய்து கொள்ளலாம்.

பிற நாடுகள்;

பிற நாடுகள்;

ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம், இந்தியா மட்டுமல்லாது, 17 பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யபட்டுள்ளதாக ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளது.

மஹிந்திரா;

மஹிந்திரா;

மஹிந்திரா கார் உற்பத்தி நிறுவனம், கடந்த ஆண்டே, தங்களின் எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோ ஆகிய மாடல்களில் ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறியது.

ஹூண்டாய்;

ஹூண்டாய்;

ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம், உற்பத்தி நிறுவனம் அயல்நாடுகளில் வழங்கி வரும் சொனாடா மாடல்களில், இந்த ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் வழங்கி வருகின்றனர்.

இதே வசதி கொண்ட ஹூண்டாய் சொனாடா மாடலை விரைவில் இந்தியாவில் கொண்டு வர உள்ளது.

வருங்கால திட்டம்;

வருங்கால திட்டம்;

பிற கார் உற்பத்தி நிறுவனங்களும், கார் இன்ஃபோடெயின்மண்ட் சிஸ்டம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களும், ஆண்ட்ராய்ட் ஆட்டோ பிளாட்ஃபார்ம் கொண்ட மாடல்களை விரைவில் வெளியிட உள்ளனர்.

இதர தொடர்புடைய செய்திகள்-1

இதர தொடர்புடைய செய்திகள்-1

ஹூண்டாய் கார்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்

கார் திருட்டை காட்டிக்கொடுக்கும் வால்வோ சாப்ட்வேர்

ஆன்ட்ராய்டு வசதியுடன் அசத்தும் கார் ரியர் வியூ மிரர்

இதர தொடர்புடைய செய்திகள்-2;

இதர தொடர்புடைய செய்திகள்-2;

காருக்காக பிரத்யேக ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேர்: கூகுள் தீவிரம்!

ஆன்ட்ராய்டு இன்போடெயின்மென்ட் சிஸ்டம்... கூகுளுடன் கூட்டணி அமைக்கும் ஆடி!

ஜெனரல் மோட்டார்ஸ், தானியங்கி கார் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள க்ரூஸ் ஆட்டோமேஷனை கையகபடுத்தியது

செய்திகள் உடனுக்குடன்;

செய்திகள் உடனுக்குடன்;

டிரைவ்ஸ்பார்க் செய்திகளை உடனுக்குடன் படிப்பதற்கு க்ளிக் செய்க

4 சக்கர வாகன செய்திகள்

2 சக்கர வாகன செய்திகள்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ தொடர்புடைய செய்திகள்

English summary
Californian software giant Google has brought its Android Auto platform to India. Android Auto allows users with phones running Android 5.0 Marshmallow with Android Auto App installed to connect their phones to compatible infotainment system. Android Auto is now available in India and 17 other nations. To know more about Android Auto platform, check here...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more