டிராஃபிக் போலீஸ் காரை பார்த்தால் தானாக நிற்கும் கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்...!!

Written By: Krishna

தானாக இயங்கும் செல்ஃப் டிரைவிங் கார் தொழில்நுட்பத்தை பல முன்னணி நிறுவனங்கள் மேம்படுத்தி வருகின்றன. அவற்றில் சில ஆட்டோ டிரைவ் ஆப்ஷன் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கும் வந்துள்ளன.

சாலையில் ஆட்டோ டிரைவிங் மோடில் கார்கள் செல்லும்போது, ஒரு சில விபத்துகள் நடப்பதுதான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. பொதுவாகவே, டிரைவர் இல்லாத தானியங்கி கார்களின் பாதுகாப்பு மீதான நம்பகத்தன்மை மீது எவருக்கும் பெரிய அபிப்ராயங்கள் இல்லை.

கூகுள் கார்

இந்த நிலையில், ஆங்காங்கே நடைபெறும் சில விபத்துகள் அத்தகைய சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்த்து விடுகின்றன. அதனைத் தவிர்க்கும் பொருட்டு அதி நவீன பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் தானியங்கி கார்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த தலைமுறையினருக்கான டெக்னாலஜியில் அவை உருவாகின்றன. மென்பொருள் உலகின் முன்னணி நிறுவனமான கூகுளும் தற்போது அப்படியொரு காரை வடிவமைத்து வருகிறது.

ஆல்பாபெட் என்பது கூகுள் நிறுவனத்தின் தாய் கம்பெனி. எக்ஸ் என்ற பெயரில் அதன் கிளை நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. புதிய ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவைதான் எக்ஸ் நிறுவனம் மேற்கொண்டு வரும் முக்கியப் பணிகள்.

அந்த நிறுவனம் தனது செல்ஃப் டிரைவிங் காரை தற்போது மேம்படுத்தி வருகிறது. பல முன்னணி கார் நிறுவனங்களுக்குப் போட்டியாக தனித்துவமான மென்பொருளில் அது வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

அதில் சிறப்பம்சமாக, டிராஃபிக் போலீஸார் சாலையில் நின்று கொண்டிருந்தாலோ, காரை வழிமறித்தாலோ அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் வசதி கூகுள் செல்ஃப் டிரைவிங் டெக்னாலஜி காரில் உள்ளது.

சென்சார் வாயிலாக சாலையோரமாக உள்ள போலீஸாரை அடையாளம் காணும் டெக்னாலஜி இது. அதேபோல், அவசரமாக விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ், விஐபி பேட்ரோல் கார்களுக்கு வழி கொடுக்கும் வகையிலும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சைரன்களில் ஒளிரும் நீலம் மற்றும் சிவப்பு நிறங்களை சென்சார் வாயிலாக அடையாளம் கண்டு, அதற்கு தக்கவாறு சமயோஜிதமாகச் செயல்படும் வழிமுறைதான் இது. மொத்தத்தில், பக்கா ஸ்மார்ட்டாகவும், பாதுகாப்புடனும் வரவிருக்கிறது கூகுள் செல்ஃப் டிரைவிங் கார்.

இந்திய சாலைகளில் அந்தக் கார்கள் பவனி வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.

English summary
Read in Tamil: Google’s Driverless Cars Are Cop Friendly.
Please Wait while comments are loading...

Latest Photos