கல்ஃப் நிறுவனத்தின் புதிய இஞ்ஜின் ஆயிலை அறிமுகம் செய்தார் தோனி

Written By:

கல்ஃப் ஆயில், புதிய ஸிந்தடிக் இஞ்ஜின் ஆயிலை அறிமுகம் செய்தது.

கல்ஃப் ஆயில் நிறுவனம், நடு-ரக பாஸ்ஞ்ஜர் வாகனங்களுக்கான புதிய ஸிந்தடிக் இஞ்ஜின் ஆயிலை அறிமுகம் செய்தது. 'அல்ட்ராசிந்த் எக்ஸ்' என அழைக்கபடும் இந்த இஞ்ஜின் ஆயில் அறிமுகத்திற்காக சில தினங்களுக்கு முன்பு கோலாகலமான விழாவும் நடந்தது.

கல்ஃப் ஆயில் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடரான மஹேந்திர சிங் தோனி, இந்த அறிமுக விழாவில் பங்குபெற்றார்.

அல்ட்ராசிந்த் எக்ஸ் ஆயில், இஞ்ஜின்களுக்கான டிடாக்ஸிஃபையர்களாக செயல்படும், அடிட்டிவ்ஸ்களுடன் பிரத்யேகமாக உருவாக்கபட்டுள்ளது. கல்ஃப் ஆயில் மூலம் வழங்கபடும் இந்த புதிய இஞ்ஜின் ஆயில், அல்ட்ரா ஸ்மூத் (மிக மென்மையான) வாகனம் இயக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

கல்ஃப் அல்ட்ராசிந்த் எக்ஸ், பல்வேறு மேம்பட்ட இஞ்ஜின் செயல்திறனுடன் வெளியாக உள்ள கண்டுபிடிப்புகளுக்கான நுழைவு நிலை பொருளாகும்.

கல்ஃப் லூபிரிகண்ட்ஸ் மூலம் தயாரிக்கபடும் இந்த புதிய இஞ்ஜின் ஆயில், பெட்ரோல் இஞ்ஜின், டீசல் இஞ்ஜின், எல்பிஜி இஞ்ஜின் மற்றும் சிஎன்ஜி இஞ்ஜின் கொண்ட வாகனங்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.

கல்ஃப் அல்ட்ராசிந்த் எக்ஸ் இஞ்ஜின் ஆயில், 5டபுள்யூ-30 என்ற அளவிலான விஸ்காஸிட்டி கிரேட் கொண்டுள்ளது. இது வெவ்வேறு வெப்பநிலை சூழ் நிலைகளில் உபயோகிக்க ஏற்றதாகும். இந்த புதிய இஞ்ஜின் மூலம், ஆல்டோ, ஆக்ஸண்ட், இட்டியாஸ், ஸ்விஃப்ட், மற்றும் பல்வேறு வாகனங்கள பயன்பெற உள்ளது.

gulf-ultrasynth-x-oil-introduced-by-mahendra-singh-dhoni

இந்த நிகழ்ச்சியின் போது, சர்வதேச பேக்கேஜிங் ஒன்றும் அறிமுகம் செய்யபட்டது. இந்த புதிய பேக்கேஜிங், மோட்டார்ஸ்போர்ட்ஸுடன் கல்ஃப் ஆயில்ஸ் அஸோசியேஷன் கொண்டுள்ள பினைப்பை பிரபாவமாக கொண்டுள்ளது. லெ மேன்ஸ்-ஸில் நிகழ்த்தபடும் வேர்ல்ட் எண்ட்யூரன்ஸ் சேம்பியன்ஷிப் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் கல்ஃப் லூப்ரிகண்ட்ஸ் மிகவும் புகழ்பெற்றதாகும்.

கல்ஃப் அல்ட்ராசிந்த் எக்ஸ் இஞ்ஜின் ஆயில், ரேஸ் டிராக்குளில் வடிவமைக்கபட்டு, சாலைகளில் உபயோகிக்கும் வகையில் மாற்றபட்டுள்ளது. ரேஸ் டிராக்குகளில் தான் எல்லா வகையான வாகனங்களும் அதன் உச்சபட்ச திறனில் சோதிக்கபடுகிறது.

அந்த வகையில், கல்ஃப் அல்ட்ராசிந்த் எக்ஸ் இஞ்ஜின் ஆயில் எந்த வகையான சாலைகளையும் எதிர்கொள்ளும் வகையிலான திறன் கொண்டுள்ளதாக கல்ஃப் லூப்ரிகண்ட்ஸ் தெரிவிக்கின்றது.

English summary
Gulf Oil has introduced their all-new synthetic engine oil for mid-sized passenger vehicles. This new Engine named Gulf Ultrasynth X Oil Launched By Brand Ambassador for Gulf Oil, Mahendra Singh Dhoni. Ultrasynth X Oil is specially formulated with additives, which work as detoxifiers for the engine.
Story first published: Friday, January 1, 2016, 12:40 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark